அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
*நேற்று நமது கோட்டத்தில் MACP பதவி உயர்வு தொடர்பாக DPC கூடியது .31.03.2022 வரையிலான பதவி உயர்வுகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது .
*GDS TO தபால்காரர் தோழர்களுக்கான இடமாறுதல் கமிட்டடியிலும் ஊழியர்களின் விருப்ப வேண்டுதல்களின் படி இடமாறுதல்கள் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது
*மாநில அளவிலான நமது NFPE சார்பாக எழுத்தர் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொண்டுவரும் நமது கோட்ட தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் .நேற்று நடைபெற்ற வகுப்புகள் குறித்து தங்களது பின்னோட்டங்களை 9442123416 என்ற எண்ணிற்கு தெரிவியுங்கள் .அடுத்த வகுப்பு வருகிற செவ்வாய் இரவு 7..15 க்கு நடைபெறுகிறது .
*நமது கோட்டத்தில் சமீபத்தில் பல தோழர்களுக்கு கொடுக்கப்பட்ட RULE -16 குறித்து கடந்த மாதாந்திர பேட்டியில் விவாதித்து கூடுமானவரை இந்தமாத இறுதிக்குள் நல்லதொரு முடிவெடுப்பதாக தெரிவித்தார்கள் .
*தோழர் சபரி மணிகண்டன் அவர்களுக்கு 2016 யில் திலி மேற்கு அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு WRONG POSTING என்பதற்காக ரூபாய் 38,195 பிடிக்கப்போவதாக கொடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு தோழரின் மனு ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரே தவணையில் முழுத்தொகையும் பிடிக்கப்பட்டு வெறும் 350 ரூபாய்தான் இந்தமாதம் ஊதியமாக கிடைத்த செய்தியும் நமக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது .கூடுதலாக வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட தொகையை நிர்வாகம் வாடிக்கையாளரிடம் பிடித்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் ஊழியரிடம் பிடித்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது .சம்பந்தப்பட்ட ஊழியர் நமது இயக்குநர் அவர்களுக்கு மேல் முறையிடு செய்துள்ளார் .கடைசி நேரத்தில் கருணை காட்டாவிட்டாலும் பரவில்லை கடுமை காட்டாமலாவது இருந்திருக்க கூடாதா ? இருப்பவருக்கு ஒருநீதி இல்லாதவருக்கு ஒரு நீதியா ?
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment