...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, April 5, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

* நமது தோழர் M .ஆசைத்தம்பி PA பணகுடி  அவர்களின் TRANSFER TA BILL இரண்டுநாட்கள் காலதாமதமாக சமர்பிக்கப்பட்டுவிட்டது என காரணத்தை காட்டி அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் 23.05.2019 அன்று மறுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து மீண்டும் அந்த பிரச்சினையை நாம் நிர்வாகத்திடம் இரண்டுநாட்கள் என்பதும் இடையில் நமக்கு ஒரு விடுமுறை வந்த காரணம் அவர் இரண்டுநாள் விடுப்பில் இருந்ததுமற்றொரு காரணம்  ஆகவே அதை நீங்கள் பரிசீலிக்கலாம் என வேண்டுகோள்விடுத்தும் மீண்டும் 27.09.2019 அன்று  நி ராகரிக்கப்பட்டது .இந்த சூழ்நிலையில் கடந்த மாதாந்திரப்பேட்டியில் இந்த பிரச்சனை சேர்க்கப்பட்டு விவாதித்ததின் விளைவாக தோழர் M .ஆசைத்தம்பி அவர்களின் TRANSFER TA BILL  நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு BILL PASS செய்யப்பட்டுவிட்டது .சுமார் 20000 க்குமேல் நமது தோழர் பயன்பெறுகிறார் .இதற்காக நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதை பதிவிட காரணம் ஒவ்வொரு மாதாந்திர பேட்டிகளிலும் நம்மால் எந்த அளவிற்கு ஊழியர்களின் நலனை பெற்றுத்தர முடிகிறது என்பதனை ஒவ்வொரு உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் நமது இயக்க செயல்பாடுகள் குறித்து புரிந்துகொள்ளவேண்டும் என்பதே !

*அதேபோல் பாளையம்கோட்டை DY.போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கான மேஜை  முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தும் பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் அவர்களால் நிர்வாகத்திற்கு இரண்டுமுறை எழுத்துபூர்வமாக கொண்டுசெல்லப்பட்டும் முன்னேற்றங்கள் ஏதுமின்றி இருந்தது .இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக கடந்த 11.03.2021 விரிவான கடிதம்கொடுத்து விவாதிக்கப்பட்டது .அதை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்கள் மார்ச் இறுதியில் வழங்கப்படும் என்றார்கள் .அதன்படி புதிய மேஜை இரண்டுநாட்களுக்கு முன்பாக வந்துசேர்ந்தது .அதற்கும் நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

மேலும் நாம் கேட்டுக்கொண்டபடி CASH COUNTING MACHINE வாங்குவதற்கு PURCHASE ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது .கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய தரமுள்ள சேர் வாங்கப்பட்டுள்ளது .78 அலுவலகங்களுக்கு SB CBS MANUVAL வாங்கிட அனுமதிக்கப்ட்டுள்ளது .PLI /RPLI பில் ஜனவரி 2020 வரை RPLI 1கோடியே 30 லட்சத்திற்கும் PLI 36 லட்சத்திற்கும் இன்சென்டிவ் வழங்கப்பட்டுள்ளது .TA பில் சம்பந்தமாக நமது ஒதுக்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதலாக நிதி வாங்கி அனைத்து TA பில் களும் PASS செய்யப்பட்டுள்ளதாகவும் நம்முடைய சந்திப்பின் போது நிர்வாகம் நமக்கு கொடுத்த தகவல்கள் இவை ...

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment