அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
மீண்டும் lockdown அறிவிக்கப்போகிறார்கள் .வருகிற சனிக்கிழமை மே 1மற்றும் 2 தேதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .பல தோழர்கள் ஊரடங்கு நாட்களில் பணிக்கு வருவது எப்படி சாத்தியம் என வினவுகிறார்கள் .சென்றவருடம் ஊரடங்கு நாட்களில் சொன்ன அதே அத்தியாவசிய சேவை செய்கின்ற துறைகளில் நமது அஞ்சல் துறையும் ஒன்று என்ற பதிலை தருவார்கள் .குறைந்தபட்சம் ஊரடங்கு நாட்களில் அஞ்சலக பணிநேரங்கள் குறைப்பு -ரோஸ்டர் முறையில் ஊழியர்களை பணிசெய்ய அழைப்பது ,பட்டுவாடா இல்லாத C &B அலுவலகங்களை மூடுவது ,அருகாமையில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்களை பணிசெய்ய அனுமதிப்பது ,மாற்று திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு ,விடுப்புகளை தாராளமாக வழங்குவது உள்ளிட்ட குறைந்தபட்ச சலுகைகளையாவது ஊழியர்க்ளுக்கு பெற்றுத்தரவேண்டியது நமது சங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல கடமையாகும் .நமது மாநிலச்சங்கமும் தொடர்ந்து கடிதங்களை எழுதி மாநிலநிர்வாகத்தை வற்புறுத்திவருவதை நாம் பார்க்கிறோம் .நமது மாநிலச்சங்கத்தின் முயற்சிகள் வெற்றிபெற துணை நிற்போம் .
*நமது கோட்டத்தில் அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட RULE -16 வழக்குகளில் ஒவ்வொன்றிலும் ஊழியர்கள் தரும் விளக்கங்களை ஏற்று CENSURE கொடுத்து முடிக்கப்பட்டுவருகின்றன .அதற்காக நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் பல தோழர்களுக்கு CENSURE குறித்த எழும் சந்தேகங்களுக்கு சில விளக்கங்கள் ....
.(a) ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை துவக்கப்பட்டாலே தண்டனை அளித்திட வேண்டுமென்றால் குறைந்தப்பட்ச கண்டனம் (censure )வழங்கிட வேண்டும்
(b) censure மட்டும் தண்டனையாக இருந்தால் அதற்கு தனியாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாததால் பதவி உயர்வினை மறுத்திடாமல் பதவி உயர்வினை வழங்கிடலாம் .(நன்றி விதி அறிவு களஞ்சியம் நூலிலிருந்து )
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
0 comments:
Post a Comment