இப்பொழுதெல்லாம்
வாழ்த்து கவிதை எழுத
என் மனமும் விரும்பவில்லை
வாழ்த்தி பதிவிடுவதற்குள்
வந்து நிற்கிறது
வருந்துகிறோம் செய்திகள்
வரிசையில்....
இங்கு சாவுக்கும்
சடங்குக்கு கூட
சம்பத்தபட்டவனை தவிர வேறு யாரும்
வந்துவிட போவதில்லை
: புதைக்க இடமில்லை
எரிக்க விறகில்லை
துணைக்கு ஆளில்லை
துயரத்திற்கோ முடிவில்லை. SKJ
0 comments:
Post a Comment