அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
இன்று பணி நிறைவு பெறுகின்ற நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க NELLAI -NFPE சார்பாக வாழ்த்துகிறோம் ..மிக குறுகிய காலங்கள் பணியாற்றினாலும் மாதாந்திர பேட்டியை முறையாக நடத்தியது ,சுழல் மாறுதலில் சுமுகமாக வெளியிட்டது ,புதிதாக பதவியேற்ற தபால்காரர் தோழர்களுக்கு அவர்களின் விருப்ப இடங்களில் பணியமர்த்தியது ,நீண்டகாலமாக நிலுவையில் இருந்த LTC மற்றும் TRANSFER TA பில் களை சாங்க்ஷன் செய்தது GDS ஊழியர்களுக்குக்காக அனைத்து அலவன்ஸ் சம்பந்தமாக விரைந்து முடிவெடுத்தது இறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து RULE 16 வழக்குக்களையும் CENSURE என முடிவெடுத்து உத்தரவிட்டது என ஒரு நேர்மையான அதிகாரியாக பணியாற்றியதை நாம் நன்றியோடு பாராட்டுகிறோம் .வாழ்த்தி வழி அனுப்புகிறோம் .
புதிய உறுப்பினர்களின் சேர்க்கை காலஅவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் நாம் ஏற்கனவே பெற்றிருந்த உறுப்பினர்கள் படிவத்தை முதற்கட்டமாக நேற்று சமர்பித்தோம் .அதன்படி அஞ்சல் மூன்றாம் பிரிவிற்கு 12 புதிய உறுப்பினர்களும் அஞ்சல் நான்காம் பிரிவிற்கு 35 புதிய உறுப்பினர்களும் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது .மீண்டும் நம்மோடு இணைந்து பணியாற்ற NFPE பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அத்தனை தோழர்களுக்கும் NELLAI -NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment