அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
முக்கிய செய்திகள்
* எழுத்தர் தேர்வுக்காக நமது NFPE பேரியக்கம் சார்பாக மாநிலந்தழுவிய ஆன்லைன் வகுப்புகளில் நமது கோட்டத்தில் இருந்து 15 தோழர்கள் பங்கேற்றுவருகிறார்கள் .ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கலந்துகொண்டிருக்கின்ற தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .பெயர் கொடுத்ததும் இணைப்பு கிடைக்காதவர்கள் (9442123416 --ஜேக்கப் ராஜ் ) எங்களை தொடர்புகொள்ளவும்
* நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்க்ளின் கைவண்ணத்தில் வெளிவரும் விதி அறிவு களஞ்சியம் புத்தகம் வினியோகம் தொடங்கிவிட்டது .இன்னும் இரண்டு நாட்களில் நமது கோட்டத்திற்கு வந்துசேரும் .புத்தகம் தேவைப்படுவோர் கோட்ட செயலரை (9442123416 --ஜேக்கப் ராஜ் ) தொடர்பு கொள்ளவும்
*நேற்று நமது கோட்ட சங்கம் சார்பாக கொரானா இரண்டாவது பரவலை முன்னிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புகள் குறித்து விரிவான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .தங்களது அலுவலகங்களுக்கு SANITISER- HANDWASH -மாஸ்க் தேவைகள் குறித்து அந்தந்த போஸ்ட்மாஸ்டர் அவர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு ஈமெயில் அல்லது கடிதங்களை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
*இந்த ஆண்டும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் புதிய உச்சத்தை அடையவிருக்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை
0 comments:
Post a Comment