அண்ணன் KVS அவர்க்ளின் விதி அறிவு களஞ்சியம் ----நூல் குறித்து ....
*புத்தகமா ?பெட்டகமா ?
*தாய்மொழியில் இலாகா சட்டங்கள் -அதுவும்
தமிழிலே அத்தனை விளக்கங்கள்
தலை வணங்குகிறோம் தலைவரே !
அகிலஇந்திய தொழிற்சங்க வரலாற்றில்
த (ம)ணி மகுடம் சூட்டியவரே !
*அஞ்சல் ஊழியர்களை ஆழ் கடலில்
அறிவு முத்தெடுக்க அழைத்த
முதல் தலைவரே !
வேகத்தோடு விவேகத்தையும்
கலந்திங்கு விதைத்தவரே !
*அச்சு ஏறும் போது அணி சாயம் பூசி
அசட்டை செய்தவர்கள் மத்தியில் -இன்று
தனி பிரதி கேட்டு நச்சரிப்புகள்--மீண்டும்
தமிழகமெங்கும் NFPE எனும் உச்சரிப்புகள்
*வெறும் விதிகளின் தொகுப்புதானே என
வெற்று விமர்சனம் வைத்தவர்கள் கூட -இன்று
விற்று தீர்வதற்குள் தனக்கு ஒன்று என
வாங்கி கொள்ள வரிசையில் ....
*விதி அறிய துடிப்பவர்களுக்கு
வழி காட்டும் - அரைகுறை
விதி காட்டி மிரட்டியவர்களுக்கு
வலி கூட்டும்
அடிமட்ட ஊழியருக்கும் --சட்டங்களின்
உண்மை உணர்த்தும் --அதிகார வட்டத்திற்கோ
உள்ளம் உறுத்தும்
*அலமாரியில் அடுக்கிவைக்கும்
அழகு சாதன பெட்டியல்ல
அனுதினமும் அலுவலகத்தில்
அலச படவேண்டிய பக்கங்கள்
தத்தளிக்கும் ஊழியருக்கு -
தன் பலம் காட்டும் --
அறிவின் குவியலிது !
ஆற்றலின் புதையலிது !
*ஊரடங்கிய நாட்களில் -ஊழியருக்காய்
உறங்காமல் உழைத்தவரே !
வெளிப்புற தோற்றத்தில் இது
புத்தமாக தெரியலாம் --
கோட்ட/ கிளை செயலருக்கோ இது தான்
பலமிக்க ஆயுதம் --இதில் உள்ள
வார்த்தைகள் எல்லாம் தோட்டாக்கள்
வரிகளெல்லம் ஏவுகணைகள்
குறிப்பறிந்து பேசவும் --குறிபார்த்து வீசவும்
பேரவை தோழர்களுக்கு போர் பயிற்சிக்கு ஒப்பானது
உந்தன் பயிற்சி வகுப்புகள்
பெருமைகொள்கிறோம் -
-பெருமைமிக்க பேரியக்கத்தில்
ஆளுமைமிகு தலைமையின் கீழ்
தொழிற்சங்க பணியாற்றிட
நாங்கள் பெருமை கொள்கிறோம்
தொடரட்டும் உங்களது உன்னத சேவைகள் .
தோழமையுடன் ------SK .ஜேக்கப் ராஜ் ----------
0 comments:
Post a Comment