...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 28, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                   முக்கிய செய்திகள் 

*நேற்று நமது மாநில நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை (கவுண்டர் 2 மணி வரை இயங்கும் ) என்ற எதற்கும் பயன்படாத உத்தரவை மாற்றிடக்கோரியும் கீழ்கண்ட மாற்றங்களை செய்திடக்கோரியும் நமது மாநிலச்சங்கம் CPMG அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இருந்து ......

*அனைத்து அஞ்சலகத்திலும் வேலைநேரத்தை 3 மணி நேரமாக குறைக்க வேண்டும் .

*கோவிட் உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகத்தை MHA வழிகாட்டுதல் அடிப்படையில் ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் 

*பட்டுவாடா இல்லாத துணை அஞ்சலகங்களை மூடிவிட்டு அந்த ஊழியர்களை அருகிலுள்ள பெரிய துணை /தலைமை அஞ்சலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் 

*50 சத ரோஸ்டர் முறை பின்பற்றப்படவேண்டும் .

*SANITIZERS ,MASKS .GLOVES மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை அனைவருக்கும் வழங்கவேண்டும் 

*விடுப்பு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாராளமாக விடுப்பு வழங்கவேண்டும் 

*CONTAIMENT பகுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் .அதேபோல் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும்,கர்ப்பிணி ஊழியர்களுக்கும்   பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------

விதி அறிவு களஞ்சியம் புத்தகம் வேண்டுவோர் POSB கணக்கு 4876043185 தோழர் ஆனந்தராஜ் PA பெருமாள்புரம் அவர்களது கணக்கில் ரூபாய் 450 செலுத்தி (வெளி கோட்ட ஊழியர்கள் தபால் செலவு சேர்த்து ரூபாய் 500 ) அதன் விவரங்களை 9442123416 என்ற எண்ணிற்கு தகவல்களை தெரிவிக்கவும் .மேலும் 20 புத்தகங்கள் தேவை என மாநிலசெயலரிடம் தெரிவித்துள்ளோம் .

நேற்று பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்கள் அம்பை பகுதி தோழர்கள் முத்துலட்சுமி ,பாலகுருசாமி வனஜா சுபா PA செங்கோட்டை ...உங்கள் பிரதிக்கு இன்றே முன்பதிவு செய்திடுவீர் ...

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                   

1 comment:

  1. எத்தனையோ இன்னல்களுக்கிடையே அயராது பணியாற்றும் நமது தோழர்களுக்கு வாழ்த்துக்கள் இந்த இக்கட்டான நிலையில் தோழர் சின்னதுரை வழக்கில் பென்சன் தொடர்பாக நம் துறையும் அரசும் என்ன பதில் சொன்னது என்பது பற்றி செய்தியில் பகிரவும்

    ReplyDelete