...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 31, 2017

                                       முக்கிய செய்திகள் 
அலவன்ஸ் சம்பந்தமாக Empowered  கமிட்டி ஜூன் 1 இல் கூடுகிறது .கடந்த பல வாரங்களாக பரவலாக வந்துகொண்டிருக்கும் செய்திகளை பார்க்கும் பொழுது ஜூன் 1 அன்று கூடும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது .லாவா கமிட்டியும் HRA குறித்து 27% 18% 9% எனவும் பஞ்சபடி 50 சதம் உயர்வுக்கு பிறகு HRA 30% 20% 10% என பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது இது குறித்து NJCM .கன்வீனர் சிவகோபால் மிஸ்ரா அமைச்சக செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அலவன்ஸ் கமிட்டி முடிவுகளை வெளியிடுவதில் உள்ள காலதாமதத்தை ஏற்றுக்கொள்ளாத ஊழியர்கள் விரக்தியில் உள்ளதாகவும் இதில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
அரசு அதிகாரத்துவங்களுக்கான ஆன்லைன் செயல்திறன் மதிப்பீட்டு முறைமையை தொடங்குகிறது 
Probity,The new 'Probity' portal is also monitoring the rotation of officers on sensitive and non-sensitive posts to identify officers occupying sensitive positions for over three months, a senior bureaucrat told ET. 
SparrowThe Sparrow (Smart performance appraisal report recording online window) system of the DoPT is meanwhile being used to make the entire appraisal system online and accessible for review by the ministries concerned. 

 Solve DoPT has recently extended 'Sparrow' from just the IAS cadre to 13 cadres, including the central secretariat services (CSS). An official said the idea is to make the 'Probity' and 'Sparrow' portals work in conjunction. The third DoPT portal is 'Solve' --a system for online vigilance enquiry for board-level appointees. 
                                         LSG .......LSG ...LSG 
              ரெகுலர் LSG மற்றும் CR LSG இடமாறுதல் உத்தரவுகள் விரைவில் வழங்கிட எல்லா மண்டலங்களிலும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று கொண்டு வருகின்றன .சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஒருவருக்கு 10 இடங்களை தேர்வு செய்திட அறிவிக்கப்பட்டுள்ளது .பொதுவாக சென்னை ,கோவை நீங்கலாக மற்ற கோட்டங்களில் அந்தந்த கோட்டங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் .எந்த மண்டலம் முந்துகிறது என்பது இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது .
                                         இருமாதா ந்திர பேட்டி தள்ளிவைப்பு 
தென்மண்டலத்தில் 30.05.2017 அன்று நடைபெறுவதாக இருந்த இரு மாதாந்திர பேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .நமது PMG அவர்கள் 05.06.2017 இல் தான் விடுப்பு முடிந்து வருவதால் அதன்பிறகே  மறு தேதி அறிவிக்கப்படும் 
 நன்றி தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 





Tuesday, May 30, 2017

                   பணிநிறைவு பெறும் தோழர்களை வாழ்த்துகிறோம் 
                            தோழியர் மீனா APMACS நாகர்கோயில் 
அன்பு தோழியர் மீனா வாழ்க !
அஞ்சல் மூன்று நெல்லையில் 
இரும்பு பெண்மணியாய் இருந்தவரே !
அஞ்சா நெஞ்சன் அணியினில் 
ஜான்சி ராணியாய் மிளிர்ந்தவரே !
எங்களுக்கு காக்கும் தெய்வமாகவும் 
எதிரிகளை (வாதத்தில்) 
தாக்கும் தெய்வமாகவும் அவதரித்தவரே !
மாநாடுகளில் அமைப்பு நிலை விவாதத்தில் 
தம்பிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவரே!
தொழிற்சங்க தேர்தல்களில் எங்கள் புகழ் பரப்பும் 
வானம்பாடியாய் வலம் வந்தவரே !
சோதனை நேரங்களில் எங்களுக்கு பலம் கூட்டியவரே!
அச்சத்தை அறியாதவர் --அச்சுறுத்தல்களை 
துச்சமென நினைத்தவர் 
உதவி செய்வதிலும் உவகை கொண்டவர் 
உரிமை காத்திட உணர்வை ஊட்டியவர் 
எல்லா தலைவர்களை போல் நீங்களும் பணி ஓய்வுக்கு பின் வெறுமனே செல்லாமல் அருமை புதல்வன் சிவகுமாரை
எங்களுக்கு (NFPE ) தத்து கொடுத்து சென்றவரே!
கணபதி -மீனா தம்பதிகளின் பெருமை என்றும் நிலைத்திட வாழ்த்துகிறோம் !வணங்குகிறோம்--- SKJ 
                 
    அஞ்சல் நான்கின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் வாழ்க !
   படைக்கஞ்சாத தோழர் --
  பார்வைகளில் பண்ணீரையும் --
  பழகுவதில் பாசத்தையும் வெளி கொண்டு வந்தவரே !
 உன் பின்னே --இத்தனை படை நின்றும் 
 கர்வம் இல்லா மாமனிதர் 
 களங்கம் சொல்ல முடியாதவர் -பிரச்சினைகளில் 
கொதிக்கும் --நெஞ்சம் -அனுகுவதில் 
குழந்தை உள்ளம் 
திண்டிவனமாநில மாநாட்டை திறம்பட நடத்தியவர் 
மாநில தலைவர் என்ற மமதை இல்லாதவர் 
அணிகளுக்கு அப்பால் என்னை ஈர்த்த தலைவர்களில் இவரும் ஒருவர் -வாழ்க அண்ணன் பன்னீர் --SKJ 
 
  நெல்லை கோட்ட தோழர் விஜயகுமார் SPM மாவடி அவர்களின் பணிநிறைவு விழா 
நாள் 31.05.2017 
நேரம் மாலை 6 மணி 
இடம் அருணா மண்டபம் -களக்காடு 
 அனைவரும் அழைக்கிறோம் --நெல்லை NFPE 

Friday, May 26, 2017

                                                முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு பதவி உயர்வு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் LSG இடமாறுதலுக்கான கமிட்டி 26.05.2017  அன்று மதுரையில் கூடுகிறது என்ற அடுத்த செய்தி இன்னும் ஊழியர்களின் எண்ண ஓட்டங்களை வேகப்படுத்தியுள்ளது .மற்ற கோட்டங்களில் எல்லாம் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களிடம் விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளது .ஆனால் நெல்லையை பொறுத்தவரை நேற்று (25.05.2017) தென்மண்டல இயக்குனர் அவர்களின் ஆய்வு கோட்ட அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்ததால் ஊழியர்களிடம் விருப்ப இடங்கள் கேட்பது குறித்து கோட்ட நிர்வாகம் கவலை படவில்லை .நிலைமையை உணர்ந்து நாமே நமது ஊழியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊழியர்களின் விருப்ப இடங்களை நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறோம் .இதற்கிடையில் நமது மாநிலசெயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் 25.05.2017 அன்று இது சம்பந்தமாக CPMG அவர்களை சந்தித்த விவரங்களை உங்களுக்கு தருகிறோம் .
1பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டு உத்தரவு வழங்கப்படும் .
2.போஸ்டிங் என்பது கூடுமானவரை SENIORITY அடிப்படையில் முன்னுரிமை வழங்க படும் .
.3.தற்போது 04.11.1992 வரை 1687 ஊழியர்களுக்கு LSG பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது .மீதமுள்ள 1280 பதவிகள் நிரப்பப்படவேண்டும் .அதில் ரெகுலர் LSG 450 போக மீதம் 830 பதவிகள் நிரப்பப்பட வேண்டும் .ஆகவே 04.11.1992 க்கு பின்னான 5 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க மாநில சங்கம் கேட்டுள்ளது 
4.ஊழியர்களை பாதிக்காத வகையில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்ற CPMG அவர்களின் உறுதிமொழி வரவேற்கத்தக்கது .
                                                         வருந்துகிறோம் 
தோழர் ஜோயல் டேவிட் MTS டிஸ்பென்சரி (ஓய்வு ) அவர்கள் 25.05.2017 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு 26.05.2017 நண்பகல் 11 மணிக்கு அவரது சொந்த ஊரான மருதகுளத்தில் நடைபெறுகிறது .அன்னாரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுவோம் .
                                                   வாழ்த்துகிறோம் 
தோழர் S.ராஜேந்திரன் APMSB  திருநெல்வேலி HO அவர்களின் இல்ல மணவிழா (26.05.2017) சிறக்க வாழ்த்துகிறோம் .
                                                    வரவேற்கிறோம் 
26.05.2017 இன்று நடைபெறும் நம் அஞ்சல் குடும்ப குழந்தைகளின் பரிசளிப்பு விழாவிற்குஅனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் .
கிட்டத்தட்ட 25 குழந்தைகள் இன்று பரிசுடன் பாராட்டும்  பெறுகிறார்கள் இந்த நிகழ்விற்கு உதவி செய்த அனைவருக்கும்  நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
நேற்றைய நன்கொடை பெயர் சொல்ல விரும்பாத ஒரு தோழர் --அம்பை 1000 தோழர் சேக்மதார்  ரூபாய் 200 
  இந்த புதிய முயற்சி தொடர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .
 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                              வாழ்த்துக்கள் 
நமது இயக்கத்தின் முன்னணி தோழர் -முன்னாள் மாநில அமைப்பு செயலர் தோழர் .M .செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கு HSG I பதவி உயர்வு வந்துள்ளது .அவர்களுக்கு நெல்லை NFPE இன் வாழ்த்துக்கள் 

Thursday, May 25, 2017

                                        தமிழகத்தில் LSG --HSG II 
LSG பதவி உயர்வு பட்டியல் நேற்று மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .ரெகுலர் LSG யில் 181 பேரும் கேடர் சீரமைப்பில் 1506 பேரும் LSG பதவிஉயர்வு பெறுகிறார்கள் .பணி ஓய்வு வரை பதவி உயர்வுகளை பார்த்திராத பல மூத்த தோழர்களுக்கு முன்னால் இன்று பலநூறு ஊழியர்கள் பதவியுயர்வு பெறுவதும் இவர்களை தொடர்ந்து இளைய தோழர்களும் தங்களது குறைந்த சேவை காலத்திலே பதவி உயர்வை சுவைப்பதும் ஒரு முன்னேற்றம் தான் .மூத்த தோழர்களுக்கு இடமாறுதலில் உள்ள பிரச்சினைகளும் ஏற்கனவே 4600 மற்றும் 4200 வாங்கியவர்களுக்கு 2800 GP யில் நிர்ணயிக்கும் விசயங்கள் --ஒரு ரூபாய் கூட உயர்வு இல்லாத பதவி உயர்வுகள் --மண்டல அளவிலான இடமாறுதல் -என்ற நடைமுறை சிக்கலில் ஒன்றை கூட நம்மால் தீர்க்க முடியாதது ஒரு வருத்தம் தான் .இருந்தாலும் நம்மில் அநேக தோழர்கள் எழுத்தர் பிரிவின் உயர்நிலையான HSG I வரை பணியாற்ற கிடைத்த வாய்ப்பையும் மறுத்திடலாகாது .LSG பதவிகள் என அடையாளம் காட்டப்பட்ட அனைத்து  பதவிகளையும் ஊழியர்களுக்கு தெரிவித்து -அவர்களின் விருப்ப மனுக்களை பெற்று இடமாறுதல்களை வழங்கிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம் .ஏற்கனவே பல மண்டலங்களில் இந்த உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளதால் சிரமங்கள் இன்றி தமிழகத்தில் இந்த உத்தரவுகள் அமுலாகும் என்று தெரிகிறது .

நெல்லையில் ரெகுலர் LSG பதவி உயர்வு பெற்றவர்கள் 
1.MP.விஜயா  2.மீனாட்சி தேவி 3.H.பொன்னம்மாள் 4.ராபர்ட் சேர்மன் 5.V.ராமசுப்ரமணியம் 6.கிருஷ்ணசாமி 7.C.அமுதாள்

கேடர் சீரமைப்பில் LSG பதவி உயர்வு பெற்றவர்கள் 
                           அம்பாசமுத்திரம் பகுதி 
1.சேக்மதர் 2.பிச்சையா 3.P.ராமகிருஷ்ணன் 4.மீனாட்சி 5.கான்சா 6.R.கண்ணன் 7.தியாகராஜ பாண்டியன் 8.சுசிலா 
                                     தென்பகுதி 
1.மகாராஜன் 2.அப்துல் ரஹீம் 3.மனோகரன் 4.பார்வதி 5.VS .கிருஷ்ணன் 6.T.முத்து கிருஷ்ணன் 
                                    மாநகர பகுதி 
1.S.சுப்ரமணியன் 2.C.ராணிஅன்பரசி 3.N.செண்பகவள்ளி 4.எழிலரசி 5.விஜயராணி 6.ராமாத்தாள் 7.முத்துலதா 8.கனகசபாபதி 9.P.குமாரி 
10.பழனியாட்சி 11பூ ங்குமரி 12.ராஜேஸ்வரி 13.சிவஞானம் 14.அழகுமுத்து 15.S.தேவராணி 16.KR .கண்ணன் 17.S.ஆவுடைநாயகம் 
18.SK .ஜேக்கப் ராஜ் 19.KG.குருசாமி 20.பாலசுப்ரமணியன் 21.C.சங்கர் 
22.C.நமச்சிவாய மூர்த்தி 23.G.நெல்லையப்பன் 24.P.சுப்ரமணியன் 
25.C.வண்ணமுத்து 26.மீனாகுமாரி 27.வனிதா 28.S.முருகன் 29.வாசுகி 
30.GR .துளசிராமன் 31.செல்வகுமாரன் 32.சுடலைமுத்து 
               முழுபட்டியலை காண 

List 1 : Click Here to View


List 2 :  Click Here to View

பதவி உயர்வை ஏற்பதிலும்  -மறுப்பதிலும்  உள்ள நடைமுறைகள் --என்னென்ன பதவிகள் LSG  --MACP III பெற்ற ஊழியர்கள் போன்ற விவரங்களை அறிய 26.05.2017 அன்று நடக்கும் பொதுக்குழுவில் கலந்து கொள்வீர்! --கருத்துக்களை சொல்வீர் !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, May 24, 2017

                                   முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு உத்தரவுகள் தமிழகத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவரும் என்றும் தெரிகிறது .சுமார் 1900 பேர் LSG பதவிஉயர்வையும் மிகமிக குறைந்தஅளவில் HSG II பதவியுர்வும் பெறுகிறார்கள் (தமிழகத்தில் 961 HSG II பதவிகள் இருந்தும் LSG யில் ஆறு வருடம் முடித்த ஊழியர்கள் மொத்தமே 40 கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்) .பதவியுயர்வோடு மண்டல ஒதுக்கீடும் இருக்கும் .கோட்டங்கள் கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் இடமாறுதல்கள் மண்டல அலுவலகம் பிறப்பிக்கும் என்றும் தெரிகிறது .
                           நன்றி ..நன்றி நன்றி 
நெல்லையில்26.05.2017 அன்று  நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள் KG.குருசாமி A.சீனிவாச சொக்கலிங்கம் M.நமச்சிவாயம் C.சிவகுமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
                           இருமாதந்திர பேட்டி 
                          தென்மண்டல தலைவருடனான இருமாதந்திர பேட்டி 30.05.2017 அன்று மதுரையில் நடைபெறுகிறது .நமது மாநில செயலர் கலந்து கொள்கிறார்கள் .நமது நெல்லை கோட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணை அறிக்கை மண்டல அலுவலகத்திற்கு சென்றுவிட்டது .இந்த தகவல்களையும் ஏற்கனவே மாநில செயலருக்கு தெரிவித்து விட்டோம் .
   ஒன்றுபட்ட போராட்டம் --வென்று காட்டும் நிச்சயம் 
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 


2016 க்கு முன்னதாக பணிஓய்வு பெற்ற /  ஊழியர்களுக்கு ஓய்வூதியம் /இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் ஏழாவது சம்பளக்குழுவில் உள்ள மாட்ரிஸ் அட்டவணைப்படி நோஷனல் நிர்ணயம் செய்து மறு நிர்ணயம் செய்திட 12.05.2017 தேதியிட்ட மத்தியஅரசின் உத்தரவை அமுல்படுத்திட அஞ்சல் வாரியம் உத்தரவு பிறப்பிப்பு --
Implementation of Government's decision on the recommendations of the Seventh Central Pay Commission - Revision of pension of pre-2016 pensioners/family pensioners : DoP Order Dated 23.5.2017

Tuesday, May 23, 2017

நம் அஞ்சல் குடும்ப குழந்தைகளின் சாதனைகளை பாராட்டும் விழா --GDS TO தபால்காரர் தேர்வில் வெற்றிபெற்ற நம் இயக்க சொந்தங்களை பெருமைப்படுத்தும் விழா 
  26.05.2017  வாரீர் ! வாரீர் !


                         செய்திகள் .......செய்திகள் .......
கேடர் சீரமைப்பு அமுலாக்கம் குறித்த நடவடிக்கை குறிப்புகள் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவரும் என்றும் தெரிகிறது .
    GDS ONLINE விண்ணப்பிக்க 05.06.2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .
         நெல்லையில் நடந்த MACP பதவிஉயர்வுக்கான DPC யில் செப்டம்பர் 2017 வரை உள்ள ஊழியர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் .DPC கமிட்டி முடிவுகள் மண்டல அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் பெற்றவுடன் பதவிஉயர்வு அறிவிக்கப்படும் .*MACP III பெற போகிறவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருப்பதாக உணர முடிகிறது .
        நேற்று 22.05.2017 அன்று கண்காணிப்பாளரை சந்தித்து RT நிலவரம் குறித்து விவாதித்தோம் .அதற்கு முன்னதாக ஏற்கனவே விருப்ப மனுக்கள் கோரப்பட்ட காசாளர் பதவிகளை நிரப்பிடவும் --LRPA பட்டியலை விரைவில் வெளியிடவும் கேட்டு கொண்டோம் .
                       தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 
---------------------------------------------------------------------------------------------------------------------
                   

திருநெல்வேலி டவுண் HSG I அஞ்சலகம் புதிய கட்டடத்திற்கு மாற்றம் --வங்கிகளை மிஞ்சும் தோற்றம் -சொந்த கட்டிடம்போல் உணர வைக்கும் அமைப்பு --உரிமையாளர்ஜனாப் ஜபருல்லா சாகிப் அவர்களுக்கு நெல்லை NFPE இன் நன்றிகள் 
 நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் 
                                      கோட்ட செயலர் தோழர் SKJ 

        போஸ்ட்மாஸ்டர் திருமதி வைரமுருகு குத்துவிளக்கேற்றுகிறார் 

Monday, May 22, 2017

நெல்லை அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு 
நாள் 26.05.2017 வெள்ளி 
நேரம் மாலை 6 மணி 
இடம் -பாளையம்கோட்டை 
தலைமை 1.தோழர் KG குருசாமி 
                         2.தோழர் சீனிவாச சொக்கலிங்கம் 
பொருள் 1.10 மற்றும் +2 தேர்வில் சாதனை படைத்த நமது தோழர்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு --மற்றும் GDS TO போஸ்ட்மேன் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா 
                   2.சூழல் மாறுதல் -கேடர் சீரமைப்பு 
                  3. அஞ்சல் நான்குகோட்ட மாநாடு நடத்துவது சம்பந்தமாக 
                 4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
              அனைவரும் வருக !
                                  தோழமையுடன் 
SK ஜேக்கப் ராஜ்                           SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                கோட்ட செயலர் P4
-----------------------------------------------------------------------------------------------------------------
              திருநெல்வேலி டவுண் அஞ்சலகம் இடமாற்றம் 
மிக நீண்ட முயற்ச்சிகளுக்கு பிறகு நெல்லை டவுண் HSG 1 அஞ்சலகம் 65  குற்றால ரோடு (ஆசாத் ரோடு ) என்ற இடத்தில 22.05.2017 முதல் செயல்படுகிறது .நமது ஊழியர்கள் கேட்ட /விரும்பிய அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து நெல்லை டவுண் அஞ்சலக கட்டட உரிமையாளர் அவர்களுக்கு எங்கள் நன்றிகள் 
                                        சேவோட்டம் அவார்டு 
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிகத்தில் ஐந்து தலைமை அஞ்சலகங்களுக்கு சேவோட்டம் என்ற விருது வழங்கப்பட்டது .மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த தகுதி பரிசினை இந்த ஆண்டு பாளை அஞ்சலகம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என வாழ்த்துகிறோம் .பாளை தலைமை அஞ்சலகத்தில் புரிந்துணர்வோடு நடைபெறும் கூட்டு முயற்சி மற்ற தலைமை அஞ்சலகங்களுக்கு வழி காட்டட்டும் -ஒளி வீசட்டும் .
       தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
-----------------------------------------------------------------------------------------------------

          கேடர்  சீரமைப்பு உத்தரவை    அமுல்படுத்த அஞ்சல் வாரியம் 
ஆ(யு )யத்தமாகிறது --
             கேடர்  சீரமைப்பில் ஊழியர் தரப்பு கோரிய மாற்றங்கள் எதனையும் காதில் வாங்கிக்கொள்ளாத நிர்வாகம் அதை அமுல் படுத்த ஆ(யு )யத்தமாகிறது .அஞ்சல் வாரியம் காட்டும் வேகத்தைவிட நம் மாநில நிர்வாகம் காட்டும் வேகம் அதிகமானது .இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது இந்த வாரத்திற்குள் உத்தரவுகள் வெளியாகும் என தெரிகிறது .இதனை உணர்ந்தே நமது CPMG அவர்களும் நம்மிடம்கேடர் அமுலாக்க தொடர்பான ஆலோசனைகளை கேட்டதாகவும்  மாநிலச்சங்கமும் நமது CPMG அவர்களிடம்  தங்கள் வரம்பிற்குள் உள்ள உதவிகளை செய்திட வற்புறுத்தியதாகவும் மாநில சங்க செய்திகள் தெரிவிக்கின்றன .
இதற்கிடையில் சூழல் மாறுதல் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்கள் -ஜூன் தொடங்கவுள்ளதால் குழந்தைகளின் பள்ளி /கல்லூரி அட்மிஷன் குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாத சுணக்கம் -பல இளைய தோழர்கள் சிங்கள் ஹாண்ட் அலுவலகத்தில் சிக்கி தவித்து -கேடர் அமுலானால் தங்களுக்கு வேறுஇடம் தேட வேண்டிய நிலை (ஆர்வத்தில் சிலர் --ஆதங்கத்தில் சிலர் )என எல்லா தரப்பினரையும் எதாவது -ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது --சிலரது தூக்கத்தை கெடுத்திருக்கிறது .மத்திய சங்கம் கைவிட்ட நிலையில் மாநில சங்கம் தந்திருக்கும் உறுதிமொழியோடு கேடர் உத்தரவுகளை சந்திப்போம் .நெல்லையை பொறுத்தவரை ஏற்கனவே விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்ட ATR /TR பணிஇடங்களை நிரப்பிடவும் --ஜனவரி மாதத்தில் வரவேண்டிய LRPA பட்டியலை வெளியிட்ட பிறகே RT அமுல்படுத்திடவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம் .
                     நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

Saturday, May 20, 2017

சிகரங்களை தொட்ட நம் --செல்வங்களை 
வாழ்த்துவோம் --பாராட்டுவோம் 

அன்பார்ந்த தோழர்களே !
  நமது நெல்லை கோட்ட ஊழியர்களின் குழந்தைகள் இந்த ஆண்டு 10 வகுப்பு பொது தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் உள்ளபடியே பாராட்டுதலுக்குரிய அம்சமாகும் .இந்த திறமைசாலிகளை வெளி கொணர நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வருகிற 26.05.207 வெள்ளி மாலை 6 மணிக்கு ஒரு பரிசளிப்பு விழா நடத்த நாம் முடிவெடுத்திருக்கிறோம் .ஆகவே நமது தோழர்களின் குழந்தைகள் 10 வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை 21.05.2017 குள் கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கவும் .
(இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில்)
1.N .இசை ஆர்த்தி                                                                    493
D/O  தோழர்  N .நம்பி BPM VM சத்திரம் 
2.E .வேணி                                                                                    492
D/O   தோழர் இசக்கியப்பன் BPM காக்கரை ராதாபுரம் 
3.P.திவ்ய பாரதி                                                                        491
D/O   தோழர் புஷ்பாகரன் தபால்காரர் பாளை  
4.பாரதி                                                                                           491
 S/O E .சுபா SPM ஜவகர் நகர் 
5.சுபாஷினி                                                                              486
D/O   தோழியர் தமிழ்செல்வி PA சேரன்மகாதேவி 
6.காளீஸ்வரி                                                                           485
D/O வெங்கடாச்சலம் GDSPKR திருகுறுங் குடி 
7.செல்வி .                                                                                   485
  D/O கண்ணன் PA களக்காடு 
8.M .அருண்குமார்                                                                480
S/O தோழியர் பூர்ணகலா SPM மூன்றடைப்பு 
9.வெங்கடேஷ்                                                                       479
S/O செல்வராஜ் GDSPKR சேரன்மகாதேவி 
10.பத்மாவதி                                                                            478
D /O தோழியர் செல்வி PA பாளை 
11.M.பாலகிருஷ்ணன்                                                        474
 S/O தோழர் மாரி முத்துராஜா GDS MD கட்டாரன் குளம் மானுர் 
12.S.ராஜேஸ்வரி                                                                   465
  D/O தோழர் சுந்தர் GDS பேக்கர் வள்ளியூர் 
 விடுபட்டவர்கள் உடனே தெரிவிக்கவும் .
முழுமையான அழைப்பிதழ்கள் /விருந்தினர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் .
                                                தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                SK பாட்சா                    S.காலப்பெருமாள் 

கோட்ட செயலர்P3       கோட்ட செயலர் P4   கோட்ட செயலர் GDS 
   

Friday, May 19, 2017

                                           முக்கிய செய்திகள் 
தமிழ்மாநிலத்தில் 2015--2016 காலி இ டங்களுக்கான நடந்த தபால் காரர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடு புகார்களை தொடர்ந்து 11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து செய்ய படுவதாக அஞ்சல் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இந்த தேர்வில் தான் முறைகேடு 
தொடக்கமா ? தொடர்ச்சியா ? என்பது போகபோகத்தான் தெரியும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் கேடெர் சீரமைப்பு அமுலாக்கத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மாநிலச்சங்கம் CPMG அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளது 
LSG பதவிகள் 2967 என அடையாளம்காணப்பட்ட நிலையில் முந்தைய வரைவு பட்டியலில் 1828 பேருக்குத்தான் பணிமூப்பு பட்டியல் வந்துள்ளது .ஆகவே 04.11.1992 க்கு பிறகும் உள்ள பட்டியல் வெளியிட படவேண்டும் .
அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து RULE 38 இடமாறுதல்களையும் பரிசீலிக்க வேண்டும் .
ONE TIME MEASURE அடிப்படையில் அனைத்து உயர்பதவிகளும் நிரப்பப்பட அஞ்சல் வாரியத்திடம் நிர்வாக ரீதியாக அனுகிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------
2006 க்கு முன்னதாக பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசின் சமீபத்திய உத்தரவு படி ஓய்வூதியம் நிர்ணயம் செய்யும் முறை 

அடிப்படைசம்பளம் 30.06.2004 = 7850
நோஷனல் நிர்ணயம் on01.01.2006 =7850x 1.86=14610
கூடுதலான தகுதி ஊதியம் 14610+ 4200=18810
நோஷனல் நிர்ணயம் on 01.01.2016 18810x 2.57 =48341.70
மாட்ரிஸ் நிர்ணயம் =49000
புதிய பென்ஷன்நிர்ணயம் செய்ய வேண்டியது  on 01.01.2016 =24500
நிர்ணயிக்கப்பட்ட பென்ஷன் on 01.01.2016 =22581
வித்தியாசம் =1919
  நன்றி (SA போஸ்ட்)  
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------------











மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனத்தின் சார்பாக நடைபெறும் தர்ணா வெல்லட்டும் 

ஏழாவது ஊதியக்குழு அமுலாக்கத்தில் உள்ள குறைகளை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை கண்டித்தும் --30.06.2016 அன்று ஊழியர்தரப்பு நிர்வாகிகளிடம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரியும் 23.05.2017 அன்று புதுடெல்லி நிதிஅமைச்சக அலுவலகம் முன்பு நடைபெறும் தர்ணா வெல்லட்டும் .

                                      மணமக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள் 
அஞ்சல் பொருள் கிடங்கு நெல்லை கிளையின் அஞ்சல் நான்கின் தலைவர் தோழர் தனசேகரன் அவர்களின் இல்ல மணவிழா 
18.05.2017 அன்று பாளை இதயா மகாலில் சிறப்பாக நடைபெற்றது .
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VPC ,PSD கண்காணிப்பாளர் திரு A .சொர்ணம் ஆகியோர் வாழ்த்திய காட்சி

Monday, May 15, 2017

Bid to cover up pos Bid to cover up postal recruitment scam?



2016 க்கு முன்பாக பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 12.05.2017 அரசாங்க உத்தரவு லாபமா ?  சாபமா ?
  ஏழாவது ஊதிய குழுவின் மிக பயனுள்ள பரிந்துரையாக கருதப்பட்ட ஓய்வூதியதரர்களுக்கு option 1 அடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது .அதாவது அவர்கள் பணிஓய்வு காலத்தில் பெற்றிருந்த ஊதிய விகிதத்தில் வாங்கியிருந்த ஆண்டு ஊதிய உயர்வினை புதிய ஊதியவிகிதத்தில் பொருத்தி அதில் 50 சதம் என்று வழங்க வேண்டும் என்பதனை உயர்மட்ட குழு ஏற்றுக்கொள்ளவில்லை என்று  கூறி 03.05.2017 அன்றைய அமைச்சரவை கூட்டம் option 3 க்கு ஒப்புதல் கொடுத்தது .இதன்படி உத்தேசமாக 01.01.2016 ல் மறுநிர்ணயம் செய்யப்பட்டாலும் நிலுவை தொகை வழங்கப்படுவதில்லை .01.01.1986 01.01.1996 01.01.2006 .0.01.2016 என ஒவ்வொரு நிலைகளிலும் ஓய்வூதியம் பொருத்தப்பட்டு கணக்கில் எடுத்து கொள்ளப்படும் .ஓய்வூதியத்தில் கடைசி ஊதியத்தில் ( PAY +emoluments ) இல் 50 சதமும் குடும்ப ஓய்வூதியத்தில் 30 சதம் 
( enhanced  period ) க்கு பிறகு வழங்கப்படும் .இதுகுறித்து நமது ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் தோழர் K .ராகவேந்திரன் அவர்கள் கூறுகையில் மீண்டும் அரசு ஓய்வூதியர்களை மத்திய அரசு வஞ்சித்துள்ளது என்றும் 2006 க்கு முன்பான HSG 1 ஊழியர்களுக்கான GP 4600 வழங்கப்படவில்லை என்பதும் பெரும் ஏமாற்றம் என்று கூறினார் .இது குறித்து கலங்கரை விளக்கு ஆசிரியர்ஹாஜி மாலிக் அவர்கள்  கூறுகையில் மிக சொற்பமான ஊழியர்களுக்கு சிறிதளவு பயன் இருக்குமே தவிர பெரிதாக இல்லை என்றார் . எந்த வகையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்ற உதாரணங்கள் கீழே கொடுக்க பட்டுள்ளன .


ANNEXURE I
EXAMPLES
(Reference Para 16 ofOM dated 12th May, 2017.)
S.No
Description
1 case
2 Case
3 Case
30.06=1999
4000-6000
(5th CPC scale)

1.
Date of Retirement
31.12.1984
3101.1989
31*05.2015
2
Scale of Pay (or Pay Band & G.P.) at the time ot retirement
OR
Notional pay scale as on 1.1.1986 for those retired before 1.1.1986
975-1660
(4th CPC Scale)
3000-4500
CPC Scale)
67000-79000
(6th CPC scaæe)
3.
Pay on retirement
Notional pay as on 1.1.1986 for those retired before
1.1.1986
1210
4000
4800
79000
4.
Pension as on 01.01.2016 before revision
4191
12600
5424
39500
5.
Family pension as on
01.01.2016 before revision
3500
7560
3500
23700
6.
Family pension at enhanced rate as on 01.01.2016 before revision (if applicable)



39500
7.
Revised pension by multiplying pre-revised pension by 2.57
10771
32382
13940
101515
8.
Revised family pension by multiplying pre-revised family pension by 257
9000
19430
9000

9.
Revised family pension at enhanced rate by multiplying pre-revised enhanced family pension by 2.57



101515
10.
Pay fixed on notional basis on 1.1.1996
3710
(3200-4900)
11300
(10000-1 5200)


11.
Pay fixed on notional basis on 1.1.2006
8910
(PB-I, GP 2000)
27620
(Pa-35 GP 6600)
11330
(PB-I, GP-2400)

12.
Pay fixed on notional basis on 1.1.2016
23100 (Level -3)
71800 (Level-1 1)
29600 (Leval-4)
205100               5)
13.
Revised pension w.e.f.
1.1.2016 as per first formulation.
11550
35900
14800
102550
14.
Revised family pension w-e.f. 1.1.2016 as per first formulation.
9000
21540
9000
61530
15.
Revised family pension at enhanced rate w.ef 1.1.2016 as per first formulation.

N.A.
N.A.
102550
16
Revised pension payable
(Higher of S. No. 7 and 13)
11550
35900
14800
102550
17.
Revised family pension payable (Higher of S-No. 8 and 14)
9000
21540
9000
61530
18.
Revised family pension at enhanced rate payable (Higher of S-No. 9 and 15)

N.A.

102550