...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 22, 2017

          கேடர்  சீரமைப்பு உத்தரவை    அமுல்படுத்த அஞ்சல் வாரியம் 
ஆ(யு )யத்தமாகிறது --
             கேடர்  சீரமைப்பில் ஊழியர் தரப்பு கோரிய மாற்றங்கள் எதனையும் காதில் வாங்கிக்கொள்ளாத நிர்வாகம் அதை அமுல் படுத்த ஆ(யு )யத்தமாகிறது .அஞ்சல் வாரியம் காட்டும் வேகத்தைவிட நம் மாநில நிர்வாகம் காட்டும் வேகம் அதிகமானது .இன்னும் ஓரிரு நாட்களில் அல்லது இந்த வாரத்திற்குள் உத்தரவுகள் வெளியாகும் என தெரிகிறது .இதனை உணர்ந்தே நமது CPMG அவர்களும் நம்மிடம்கேடர் அமுலாக்க தொடர்பான ஆலோசனைகளை கேட்டதாகவும்  மாநிலச்சங்கமும் நமது CPMG அவர்களிடம்  தங்கள் வரம்பிற்குள் உள்ள உதவிகளை செய்திட வற்புறுத்தியதாகவும் மாநில சங்க செய்திகள் தெரிவிக்கின்றன .
இதற்கிடையில் சூழல் மாறுதல் உத்தரவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஊழியர்கள் -ஜூன் தொடங்கவுள்ளதால் குழந்தைகளின் பள்ளி /கல்லூரி அட்மிஷன் குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாத சுணக்கம் -பல இளைய தோழர்கள் சிங்கள் ஹாண்ட் அலுவலகத்தில் சிக்கி தவித்து -கேடர் அமுலானால் தங்களுக்கு வேறுஇடம் தேட வேண்டிய நிலை (ஆர்வத்தில் சிலர் --ஆதங்கத்தில் சிலர் )என எல்லா தரப்பினரையும் எதாவது -ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது --சிலரது தூக்கத்தை கெடுத்திருக்கிறது .மத்திய சங்கம் கைவிட்ட நிலையில் மாநில சங்கம் தந்திருக்கும் உறுதிமொழியோடு கேடர் உத்தரவுகளை சந்திப்போம் .நெல்லையை பொறுத்தவரை ஏற்கனவே விருப்ப விண்ணப்பங்கள் பெறப்பட்ட ATR /TR பணிஇடங்களை நிரப்பிடவும் --ஜனவரி மாதத்தில் வரவேண்டிய LRPA பட்டியலை வெளியிட்ட பிறகே RT அமுல்படுத்திடவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம் .
                     நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 

0 comments:

Post a Comment