...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 24, 2017

                                   முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு உத்தரவுகள் தமிழகத்தில் இறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளிவரும் என்றும் தெரிகிறது .சுமார் 1900 பேர் LSG பதவிஉயர்வையும் மிகமிக குறைந்தஅளவில் HSG II பதவியுர்வும் பெறுகிறார்கள் (தமிழகத்தில் 961 HSG II பதவிகள் இருந்தும் LSG யில் ஆறு வருடம் முடித்த ஊழியர்கள் மொத்தமே 40 கும் குறைவாகத்தான் இருக்கிறார்கள்) .பதவியுயர்வோடு மண்டல ஒதுக்கீடும் இருக்கும் .கோட்டங்கள் கொடுக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் இடமாறுதல்கள் மண்டல அலுவலகம் பிறப்பிக்கும் என்றும் தெரிகிறது .
                           நன்றி ..நன்றி நன்றி 
நெல்லையில்26.05.2017 அன்று  நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு நன்கொடைகள் வழங்கிய தோழர்கள் KG.குருசாமி A.சீனிவாச சொக்கலிங்கம் M.நமச்சிவாயம் C.சிவகுமார் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .
                           இருமாதந்திர பேட்டி 
                          தென்மண்டல தலைவருடனான இருமாதந்திர பேட்டி 30.05.2017 அன்று மதுரையில் நடைபெறுகிறது .நமது மாநில செயலர் கலந்து கொள்கிறார்கள் .நமது நெல்லை கோட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணை அறிக்கை மண்டல அலுவலகத்திற்கு சென்றுவிட்டது .இந்த தகவல்களையும் ஏற்கனவே மாநில செயலருக்கு தெரிவித்து விட்டோம் .
   ஒன்றுபட்ட போராட்டம் --வென்று காட்டும் நிச்சயம் 
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 


0 comments:

Post a Comment