...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 31, 2017

                                       முக்கிய செய்திகள் 
அலவன்ஸ் சம்பந்தமாக Empowered  கமிட்டி ஜூன் 1 இல் கூடுகிறது .கடந்த பல வாரங்களாக பரவலாக வந்துகொண்டிருக்கும் செய்திகளை பார்க்கும் பொழுது ஜூன் 1 அன்று கூடும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது .லாவா கமிட்டியும் HRA குறித்து 27% 18% 9% எனவும் பஞ்சபடி 50 சதம் உயர்வுக்கு பிறகு HRA 30% 20% 10% என பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது இது குறித்து NJCM .கன்வீனர் சிவகோபால் மிஸ்ரா அமைச்சக செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அலவன்ஸ் கமிட்டி முடிவுகளை வெளியிடுவதில் உள்ள காலதாமதத்தை ஏற்றுக்கொள்ளாத ஊழியர்கள் விரக்தியில் உள்ளதாகவும் இதில் என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு தெரியவில்லை என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
அரசு அதிகாரத்துவங்களுக்கான ஆன்லைன் செயல்திறன் மதிப்பீட்டு முறைமையை தொடங்குகிறது 
Probity,The new 'Probity' portal is also monitoring the rotation of officers on sensitive and non-sensitive posts to identify officers occupying sensitive positions for over three months, a senior bureaucrat told ET. 
SparrowThe Sparrow (Smart performance appraisal report recording online window) system of the DoPT is meanwhile being used to make the entire appraisal system online and accessible for review by the ministries concerned. 

 Solve DoPT has recently extended 'Sparrow' from just the IAS cadre to 13 cadres, including the central secretariat services (CSS). An official said the idea is to make the 'Probity' and 'Sparrow' portals work in conjunction. The third DoPT portal is 'Solve' --a system for online vigilance enquiry for board-level appointees. 
                                         LSG .......LSG ...LSG 
              ரெகுலர் LSG மற்றும் CR LSG இடமாறுதல் உத்தரவுகள் விரைவில் வழங்கிட எல்லா மண்டலங்களிலும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று கொண்டு வருகின்றன .சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஒருவருக்கு 10 இடங்களை தேர்வு செய்திட அறிவிக்கப்பட்டுள்ளது .பொதுவாக சென்னை ,கோவை நீங்கலாக மற்ற கோட்டங்களில் அந்தந்த கோட்டங்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் .எந்த மண்டலம் முந்துகிறது என்பது இன்று தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது .
                                         இருமாதா ந்திர பேட்டி தள்ளிவைப்பு 
தென்மண்டலத்தில் 30.05.2017 அன்று நடைபெறுவதாக இருந்த இரு மாதாந்திர பேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .நமது PMG அவர்கள் 05.06.2017 இல் தான் விடுப்பு முடிந்து வருவதால் அதன்பிறகே  மறு தேதி அறிவிக்கப்படும் 
 நன்றி தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 





0 comments:

Post a Comment