...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 8, 2017

                                               முக்கிய செய்திகள் 
                               கன்னியாகுமரி கோட்ட மாநாடு 
  நமது அண்டை கோட்டமான கன்னியாகுமரி கோட்ட மாநாடு வருகிற 10.05.2017 அன்று நாகர் கோவில் தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது .அதனை தொடர்ந்து குமரி கோட்டத்தின் கொள்கை குன்று  தோழர் முகமது அப்துல் ரவூப் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழாவும் நடைபெறுகிறது .இவ்விழாக்கள் சிறக்க வாழ்த்துக்கள் .
                                            மாநில செயலர் வருகை 
10.05.2017 அன்று குமரி கோட்ட மாநாட்டினை அடுத்து 11.05.2017 அன்று நமது மாநில செயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் மதுரை மண்டல அலுவகத்திற்கு செல்வதாக நிகழ்ச்சிகளை அறிவித்திருக்கிறார்கள் .மாநில செயலரோடு நாமும் மதுரை செல்கிறோம் .மண்டல அலுவலகத்தில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் இருந்தால் தெரிவிக்கவும் .குறிப்பாக நமது கோட்டத்தை பொறுத்தவரை STEPPING UP OF PAY --KTC நகர் அஞ்சலக தகுதி உயர்வு --திருநெல்வேலி அஞ்சலகத்தில் செய்யவிருக்கும் சிவில் சம்பந்தமான வேலைகள் --திருநெல்வேலி டவுண் அஞ்சலக இடமாற்றத்தில் உள்ள தாமதம் என கொண்டு செல்கிறோம் .வேறு கோரிக்கைகைகள் இருந்தால் விரைந்து தெரிவிக்கவும்
                           மூத்த தோழர்களின் எதிர்பார்ப்புகள் 
தெரிந்தோ தெரியாமலோ கேடர் சீரமைப்பு அமுலாக்கம் நிறுத்திவைக்க பட்ட போதிலும் -பல மூத்த தோழர்களின் ஆதங்கங்களை நாம் கேட்க முடிகிறது .
குறிப்பாக CR க்கு முன்பாக வரவேண்டிய ரெகுலர் LSG பதவிகள் மற்றும் பதவி உயர்வை மறுத்த பல ஊழியர்களின் ஒருவருட காலம் முடிந்தும் மீண்டும் அவர்களுக்கு பதவி உயர்வை வழங்குவதில் தாமதம் -இதனால் பல LSG பதவிகள் தங்கள் அருகாமையில் இருந்தும் பணி செய்ய முடியா நிலைமை இவைகளை குறித்து மூத்த தோழர்களின் எதிர்பார்ப்பை மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு இதன் மூலம் கொண்டு வருகிறோம் .
                          நேற்றுவரை எங்கள் கருத்துக்கள் 
                           விமர்சனங்களாக மட்டும் பார்க்க பட்டன -
                          ஒருநல்ல நாளில் எங்கள் கருத்துக்கள் 
                         ஆலோசனைகளாக அங்கீகரிக்கப்படும் --(James woreths) 
                  தோழமை வாழ்த்துக்களுடன்
 SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

1 comment:

  1. Vanakkam
    Com please sankarnagar so building subject also pending without white wash last 10 years.
    Heavy heat and dust from four way road.so take the subject at reginol office Madurai level.

    ReplyDelete