...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 12, 2017

                          வழக்குகளும் -வழக்கங்களும் 
அகில இந்திய MMS ஓட்டுநர் சங்கம் சார்பாக ரயில்வே துறையிலும் பாதுகாப்பு துறையிலும் ஓட்டுனருக்கு வழங்கப்படும் OTA அளவில் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் நிர்வாக தீர்பாயகம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தொடர்ந்த மேல் முறையிடு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது .மேலும் அரசாங்க கொள்கை முடிவில் அஞ்சல் வாரியம் தலையிட முடியாது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் -ரயில்வே நிர்வாகம் முன்வந்து தானாகவே OTA உயர்த்தி கொடுக்கும் போது அஞ்சல் வாரியமும் இந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது .இதுபோன்ற வழக்குகளில் நாம் வெல்வதும் அஞ்சல் வாரியம் SLP வரை செல்வதும் நாம் பழகிவிட்ட வழக்கங்கள் தான் (வழக்கு என் WP (MD )4896 OF 2014
-----------------------------------------------------------------------------------------------------------------------
                       தென்மண்டல இயக்குனருடன் ஒரு சந்திப்பு 
நேற்று நமது மாநில செயலருடன் தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் மற்றும் அழகுமுத்து ஆகியோர் நமது மண்டல இயக்குனர் அவர்களை சந்தித்து நமது நெல்லை கோட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம் .முன்னதாக மாநில சங்கம் சார்பாக கொடுக்கப்பட்டமனுவில்  நெல்லை கோட்ட பிரச்சினைகள் குறித்து மிக நீண்ட விளக்கங்கள் கொடுக்கப்பட்டது .சுமார் 3/4 மணிநேரம் நமக்காக நேரம் ஒதுக்கி தந்த நமது இயக்குனர் அவர்களுக்கும் -பல்வேறு பணிகளுக்கிடையில் நம்மை மண்டல அலுவலகத்திற்கு அழைத்து சென்று நம்மை விட நமது கோட்ட பிரச்சினையை மிக ஆழமாக விவாதித்த நமது மாநில செயலர் அருமை அண்ணன் ராமமூர்த்தி அவர்களுக்கும் நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
  வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment