மே தினம் --மெய் தினம்
(ஆக்கம் தோழர் S .மோகன் MTS மஹாராஜநகர் )
மொழிகள் தேவையில்லை
வலிகள் குறைய வில்லை
இரவென்ன பகலென்ன
அன்றாட பாடுகளோடு
உலகமெல்லாம் உழைத்துவாழும்
உன்னத மனிதர்களே !
உண்ணும் உணவும்
உழைக்கும் உடலும் களைத்து சேர்த்தாலும்
களஞ்சியத்தில் ஒன்றுமில்லையே ...
ஆனாலும் மனிதா
மரணம்வரை தேய்கின்ற சரீரமிது
தேடல்கள் கிடைக்கும் வரை
உழைத்தே போராடுகிறாய் !
,மூளை கசக்கி உடல் நசுக்கி
தோள் சுருக்கி உழைப்பதை மட்டுமே உறுதியாக்கி
கடைசி நிமிட அந்த காட்சிகள் ஆறடி நிலமதுவே
மிச்சமாக ......
களைய்ப்பிருந்தும் கண்ணீர் வடித்தும்
ஓயாது உழைத்து உழைத்து
இன்று மட்டுமல்ல
என்றென்றும் நன்றாக
ஒன்று படுவோம்
உழைக்கும் கூட்டங்களில் (NFPE ) யில்
இன்றுமுதல் நானும் ஒருவனாய்
மே தின வாழ்த்துக்களுடன் S.மோகன் MTS மஹாராஜநகர் .
( நன்றி தோழர் மோகன் ,ராமலிங்கம் உள்ளிட்ட ஐந்து தோழர்களுக்கும் )
0 comments:
Post a Comment