...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, May 2, 2017

                                             நெல்லை கோட்ட செய்திகள் 
விடுப்பு விண்ணப்பிக்கும் ஊழியர்கள் கவனத்திற்கு ........
         தாங்கள் விடுப்பு விண்ணப்பிக்கும் போது சரியான காரணங்களை கூறி விடுப்பு விண்ணப்பங்களை கோட்ட அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டுகிறோம் .வெளியூர் பயணம் -மருத்துவ பரிசோதனை -குழந்தைகளின் உயர் கல்விக்கான முயற்சி -என எதுவானாலும் பரவாயில்லை .பொதுவாக சொந்த காரணங்கள் என கூறி அதிக நாட்கள் விண்ணப்பிப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தவிர்க்க தாங்கள் உதவுமாறு கேட்டு கொள்கிறோம் .
                                      அகில இந்திய மாநாடு 
பெங்களுருவில் 06.08.2017 முதல் 09.08.2017 வரை நடைபெறும் மாநாட்டிற்கு வரவிரும்புகிறவர்கள் அதற்கான ரயில் கட்டணத்தை 03.05.2017 குள் கோட்டசெயலருக்கு 0072773482 என்ற சேமிப்பு கணக்கில் ரூபாய் 800 செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                             இந்தவார நிகழ்ச்சிகள் 
தோழியர் வாசுகி PA அவர்களின் புதல்வி செல்வி பவித்திரா --கவியரசன் மணவிழா 07.05.2017 அன்று திருப்பரங்குன்றத்தில் நடைபெறுகிறது 
தோழர் சபரி கைலாஷ்PA  அவர்களின் திருமணம் 07.05.2017 அன்று பாளையில் நடைபெறுகிறது .
நமது முன்னாள் கண்காணிப்பாளர் திரு .C .மாரியப்பன் அவர்களின் புதல்வி செல்வி .M.நந்தினிதேவி அவர்களின் பூப்புனித நீராட்டு விழா 07.05.2017 மாலை திருச்செந்தூரில் நடைபெறுகிறது .அனைத்து விழாக்களுக்கும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

1 comment:

  1. iam postman from dharmapuri.. is there any mutual transfer for tirunelveli.. if anybody there then please tell me... 9750494157

    ReplyDelete