...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 1, 2017

                                                மே தின வாழ்த்துக்கள் 
அன்பார்ந்த என்னருமை NFPE சொந்தங்களே !
உங்கள் அனைவருக்கும் எனது அன்பின் புரட்சிகர மே தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .வழக்கம் போல் இந்த ஆண்டும் மற்றவர்கள் மலைக்கும் வண்ணம் புதிய ஊழியர்களை நமது பக்கம் சேர்த்த உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் .
இந்த ஆண்டும் நமது இயக்கத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை நான் வாழ்த்தி வரவேற்கிறேன் .
ஆம் .நாற்பது உறுப்பினர்கள் நம் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள் அதற்கான படிவங்களை 27.04.2017 அன்று கோட்ட நிர்வாகத்திடம் கொடுத்துள்ளோம் .
அஞ்சல் மூன்று --18 அஞ்சல் நான்கு 22 மொத்தம் =40
                                              இதர செய்திகள் 
2002 காலியிடங்களில் தேர்வாகி 2004 இல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழயை பென்ஷன் வேண்டி நாம் தொடுத்த வழக்கில் 4 பேருக்கு வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது .
தோழர் S.முருகன் வழக்கு எண் 683/2017 தோழர் S.மூர்த்தி 682/2017
தோழர் A.முருகன் 678/2017  தோழர் T.ச ங்கரநாராயணன் 675/2017 
மற்றவர்களுக்கு விரைவில் தாக்கல் செய்யப்படும் .இந்த வழக்கின் முதல் வாய்தா 22.06.2017 அன்று நடைபெறுகிறது 
                                        மே தின கொடியேற்று விழா 
நாள் 01.05.2017 
காலை 09.00 மணி திருநெல்வேலி HO
காலை 09.15 மணி பாளையம்கோட்டை 
அந்தந்த பகுதி ஊழியர்கள் அந்தந்த பகுதியில் கலந்து கொள்ளவும் .
மே தின வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK பாட்சா 
Image result for mayday images

2 comments:

  1. வழக்கம் போல் இந்த ஆண்டும் நமக்கு விடுமுறை இல்லை. இன்று வேலை செய்யும் ஒரே துறை நமது அஞ்சல் துறை. இன்று தபால்காரர்களாகிய நாங்கள் மக்களுக்கு பதில் சொல்லியே பொழுது போய்விட்டது. வரும் காலத்திலாவது நமது இலாகா விடுமுறை விட வேண்டும்.அதற்கு நமது சங்கம் பாடுபடவேண்டும்

    ReplyDelete
  2. வழக்கம் போல் இந்த ஆண்டும் நமக்கு விடுமுறை இல்லை. இன்று வேலை செய்யும் ஒரே துறை நமது அஞ்சல் துறை. இன்று தபால்காரர்களாகிய நாங்கள் மக்களுக்கு பதில் சொல்லியே பொழுது போய்விட்டது. வரும் காலத்திலாவது நமது இலாகா விடுமுறை விட வேண்டும்.அதற்கு நமது சங்கம் பாடுபடவேண்டும்

    ReplyDelete