...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 3, 2017

                                         முக்கிய செய்திகள் 
GDS ஊழியர்களுக்கான பஞ்சபடி உத்தரவு நேற்று கோட்ட அலுவலகங்களுக்கு வந்துவிட்டன .
                                       GDS கமிட்டி 
இன்னும் ஏழு மலை -ஏழு கடல் தாண்ட வேண்டிய சம்பிரதாயம் இருக்கிறது .கமேலேஷ் அறிக்கையை அமுல்படுத்த அமைக்கப்பட்ட அமுலாக்க கமிட்டி தனது திட்ட அறிக்கையை அஞ்சல் வாரியத்திடம் கொடுத்துவிட்டது .இதுதற்போது  JS & FA (Internal Financial Advisor) of the Postal Board பரிசீலனையில் உள்ளது 
இதை அஞ்சல் வாரியம் ஒப்புக்கொண்ட பிறகு -நமது அமைச்சருக்கும் --அதன்பின் நோடல் அமைச்சகத்திற்கு சென்று --ஒப்புதல் கிடைத்தபின் --அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி அதன் பிறகுதான் அமுல்படுத்தப்படும் என்ற நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கின்றன .
                                GDS ஊழியர்களுக்கு ESI மருத்துவவசதி 
இதுகுறித்து கமலேஷ் சந்திரா அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதை சுட்டி காட்டி சங்கங்கள் அஞ்சல் வாரியத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன .
                                   பென்ஷன் மறுப்பு 
கமேலேஷ் சந்திரா அறிக்கை கூட கிராஜூடி குரூப் இன்சூரன்ஸ் தொகைகள் இவைகளை அதிகப்படுத்திட தான் பரிந்துரைத்துள்ளதே தவிர பென்ஷன் வழங்கிட கூறவில்லை .எனவே பல தோழர்கள் டெல்லி ப்ரின்சிபிள் நீதிமன்றம் வழங்கிய 17.11.2016 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தாங்களும் வழக்கு போடலாமா என கேட்டு வருகிறார்கள் .உச்ச நீதி மன்ற வழக்கில் அரசு என்ன நிலை எடுக்கிறது என்பதனை பொறுத்திருந்து பார்த்து முடிவெடுக்க ஆலோசிக்கப்பட்டுவருகிறது .
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment