...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 19, 2017

                                           முக்கிய செய்திகள் 
தமிழ்மாநிலத்தில் 2015--2016 காலி இ டங்களுக்கான நடந்த தபால் காரர் தேர்வில் நடைபெற்றதாக கூறப்பட்ட முறைகேடு புகார்களை தொடர்ந்து 11.12.2016 அன்று நடைபெற்ற தபால்காரர் /மெயில் கார்டு தேர்வுகள் ரத்து செய்ய படுவதாக அஞ்சல் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .இந்த தேர்வில் தான் முறைகேடு 
தொடக்கமா ? தொடர்ச்சியா ? என்பது போகபோகத்தான் தெரியும் .
--------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழகத்தில் கேடெர் சீரமைப்பு அமுலாக்கத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய கோரி மாநிலச்சங்கம் CPMG அவர்களுக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளது 
LSG பதவிகள் 2967 என அடையாளம்காணப்பட்ட நிலையில் முந்தைய வரைவு பட்டியலில் 1828 பேருக்குத்தான் பணிமூப்பு பட்டியல் வந்துள்ளது .ஆகவே 04.11.1992 க்கு பிறகும் உள்ள பட்டியல் வெளியிட படவேண்டும் .
அமுலாக்கத்திற்கு முன்பாக அனைத்து RULE 38 இடமாறுதல்களையும் பரிசீலிக்க வேண்டும் .
ONE TIME MEASURE அடிப்படையில் அனைத்து உயர்பதவிகளும் நிரப்பப்பட அஞ்சல் வாரியத்திடம் நிர்வாக ரீதியாக அனுகிட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்துள்ளது .
---------------------------------------------------------------------------------------------------------------
2006 க்கு முன்னதாக பணிஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசின் சமீபத்திய உத்தரவு படி ஓய்வூதியம் நிர்ணயம் செய்யும் முறை 

அடிப்படைசம்பளம் 30.06.2004 = 7850
நோஷனல் நிர்ணயம் on01.01.2006 =7850x 1.86=14610
கூடுதலான தகுதி ஊதியம் 14610+ 4200=18810
நோஷனல் நிர்ணயம் on 01.01.2016 18810x 2.57 =48341.70
மாட்ரிஸ் நிர்ணயம் =49000
புதிய பென்ஷன்நிர்ணயம் செய்ய வேண்டியது  on 01.01.2016 =24500
நிர்ணயிக்கப்பட்ட பென்ஷன் on 01.01.2016 =22581
வித்தியாசம் =1919
  நன்றி (SA போஸ்ட்)  
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 
----------------------------------------------------------------------------------------------------------------------------











0 comments:

Post a Comment