...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 26, 2017

                                                முக்கிய செய்திகள் 
கேடர் சீரமைப்பு பதவி உயர்வு வந்த பரபரப்பு அடங்குவதற்குள் LSG இடமாறுதலுக்கான கமிட்டி 26.05.2017  அன்று மதுரையில் கூடுகிறது என்ற அடுத்த செய்தி இன்னும் ஊழியர்களின் எண்ண ஓட்டங்களை வேகப்படுத்தியுள்ளது .மற்ற கோட்டங்களில் எல்லாம் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களிடம் விருப்பங்கள் கேட்கப்பட்டுள்ளது .ஆனால் நெல்லையை பொறுத்தவரை நேற்று (25.05.2017) தென்மண்டல இயக்குனர் அவர்களின் ஆய்வு கோட்ட அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருந்ததால் ஊழியர்களிடம் விருப்ப இடங்கள் கேட்பது குறித்து கோட்ட நிர்வாகம் கவலை படவில்லை .நிலைமையை உணர்ந்து நாமே நமது ஊழியர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊழியர்களின் விருப்ப இடங்களை நிர்வாகத்திடம் கொடுத்திருக்கிறோம் .இதற்கிடையில் நமது மாநிலசெயலர் தோழர் J.ராமமூர்த்தி அவர்கள் 25.05.2017 அன்று இது சம்பந்தமாக CPMG அவர்களை சந்தித்த விவரங்களை உங்களுக்கு தருகிறோம் .
1பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களுக்கு உரிய வழிகாட்டு உத்தரவு வழங்கப்படும் .
2.போஸ்டிங் என்பது கூடுமானவரை SENIORITY அடிப்படையில் முன்னுரிமை வழங்க படும் .
.3.தற்போது 04.11.1992 வரை 1687 ஊழியர்களுக்கு LSG பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது .மீதமுள்ள 1280 பதவிகள் நிரப்பப்படவேண்டும் .அதில் ரெகுலர் LSG 450 போக மீதம் 830 பதவிகள் நிரப்பப்பட வேண்டும் .ஆகவே 04.11.1992 க்கு பின்னான 5 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க மாநில சங்கம் கேட்டுள்ளது 
4.ஊழியர்களை பாதிக்காத வகையில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்ற CPMG அவர்களின் உறுதிமொழி வரவேற்கத்தக்கது .
                                                         வருந்துகிறோம் 
தோழர் ஜோயல் டேவிட் MTS டிஸ்பென்சரி (ஓய்வு ) அவர்கள் 25.05.2017 அன்று இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு 26.05.2017 நண்பகல் 11 மணிக்கு அவரது சொந்த ஊரான மருதகுளத்தில் நடைபெறுகிறது .அன்னாரது ஆன்மா அமைதிபெற இறைவனை வேண்டுவோம் .
                                                   வாழ்த்துகிறோம் 
தோழர் S.ராஜேந்திரன் APMSB  திருநெல்வேலி HO அவர்களின் இல்ல மணவிழா (26.05.2017) சிறக்க வாழ்த்துகிறோம் .
                                                    வரவேற்கிறோம் 
26.05.2017 இன்று நடைபெறும் நம் அஞ்சல் குடும்ப குழந்தைகளின் பரிசளிப்பு விழாவிற்குஅனைவரையும் அன்போடு வரவேற்கிறோம் .
கிட்டத்தட்ட 25 குழந்தைகள் இன்று பரிசுடன் பாராட்டும்  பெறுகிறார்கள் இந்த நிகழ்விற்கு உதவி செய்த அனைவருக்கும்  நன்றிதனை தெரிவித்து கொள்கிறோம் .
நேற்றைய நன்கொடை பெயர் சொல்ல விரும்பாத ஒரு தோழர் --அம்பை 1000 தோழர் சேக்மதார்  ரூபாய் 200 
  இந்த புதிய முயற்சி தொடர உங்கள் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் .
 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment