...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 29, 2017

                                                முக்கிய செய்திகள் 
இன்று 29.09.2017 அன்று நடைபெறவிருந்த நெல்லை கோட்ட மாதாந்திர பேட்டி தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
----------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சல் மூன்றின் மாநில மாநாட்டிற்கான நன்கொடை புத்தகங்கள் வரவேற்பு குழு சார்பாக வந்துள்ளன .நமது தோழர்கள் ரூபாய் 100 மட்டும் மாநாட்டு நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் 
-----------------------------------------------------------------------------------------------------------------------
நமது கோட்ட அமைப்பு செயலர் தோழர் S .முத்துமாலை அவர்களின் சீரிய முயற்சியால் 65 SSA கணக்குகள் நன்கொடைகள் மூலம் தொடங்கப்பட்டு அதற்கான விழா கடையநல்லூர் ரஹ்மானியா நர்சரி &பிரைமரி பள்ளி சார்பாக 30.09.2017 கடையநல்லூரில் நடைபெறுகிறது .நமது மதிப்பிற்குரிய கொடைவள்ளல்
 Rtn .Major திரு .மயில் பாண்டியன் அவர்கள் இந்த தொகையினை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள் .இந்த இனிய நிகழ்வில் நமது SSPதிரு .VPC அவர்கள்  மற்றும் திருநெல்வேலி ASPதிரு .G.செந்தில்குமார்  -நமது நெல்லை கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள் .அடுத்த விழா இதைவிட சிறப்பாக NELLAI NFPE சார்பாக நடைபெறுகிறது .
அச்சுறுத்தல் வேண்டாம் -அதிகாரம் வேண்டாம் -மிரட்டல் இல்லை -உருட்டல் இல்லை -அதனால் தான் இதய சுத்தியோடு எங்களால் களம் இறங்க முடிகிறது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
---------------------------------------------------------------------------------------------------------------------
                                   இந்தமாத நிகழ்வுகள் 
08.10.2017 பொள்ளாச்சி கோட்ட மாநாடு 
15.10.2017 கோவை -பேரவை விழா 
22.10.2017 அண்ணன் பாலு இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் -திருச்சி 
-----------------------------------------------------------------------------------------------------------------------

  தோழர் சத்தியமூர்த்தி @சத்யா கோட்டசெயலர் பாண்டிச்சேரி      அவர்களின் பணிநிறைவு விழா
                            நாள் --29.09.2017   இடம் திண்டிவனம் 
  சத்யா எனும் சாணக்கியனே !
  சத்தமில்லாமல் சாதனைகளை தனதாக்கியவனே !
 ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது -உனக்கு 
அறுபதா ! அது தெரியாமலே 
ஒருமையில் அல்லவா இத்தனை நாளும் 
அழைத்திருக்கிறேன் !
ஆனாலும் எனக்கந்த உரிமையுண்டு 
நீயும் நானும் ஒரே 
பாசறையில் பயின்றவர்கள் 
ஒரே வெற்றிக்காக 
பலமுறை முயன்றவர்கள் 
பேரவையின் இணைப்பிற்கு 
பெரிதும் உதவியவன் நீ -வெளியே 
பெயர் வரத்தேவையில்லை என்று 
பெருந்தன்மை காட்டியவன் 
HSG I பதவியில் இருந்தாலும் 
எந்த வேறுபாட்டையும் உன்னிடம் காணவில்லை 
அன்று இருந்ததை போலவும் 
இன்றும் இருக்கிறாய் -என்றும் இருப்பாய் 
ஆம்நீ   அதிசயம் கலந்தவன் -
ஆச்சர்யம் மிகுந்தவன் 
அன்பை விதைத்தவன் 
ஆசையை விலக்கியவன் 
அடிமையை வெறுத்தவன் 
அதிகாரத்தை அறுத்தவன் 
அமைதியை விரும்பியவன் -
அனைத்திற்கும் மேல் 
அண்ணன் பாலுவை ஏற்றுக்கொண்டவன் 
அதனால் என்னவோ 
அனைவர் உள்ளங்களையும் ஆக்கிரமித்தவன் 
வாழ்க !நீ    சீக்கிரம் வா !
செங்கை மாநாடும் உனக்கு 
சிறப்பு சேர்க்க காத்திருக்கிறது !
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 


Thursday, September 28, 2017

08.10.2017 அன்று நடைபெறும் பொள்ளாச்சி கோட்ட மாநாடு வெல்லட்டும் 


தோழர் பத்மநாபன் மெயில் ஓவர்சீர் பாளையம்கோட்டை அவர்களின்  பணி நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற பாராட்டுவிழா 27.09.2017 அன்று பாளை ஸ்ரீனிவாசமஹாலில் நடைபெற்றது .நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் M .வீரபத்திரன் கண்காணிப்பாளர் குமரி கோட்டம் -உதவிகண்காணிப்பாளர்கள் தோழர் G.செந்தில்குமார் -N .குமரன் நமது இயக்க முன்னணி தோழர்கள் -தோழியர்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர் .தோழர் பத்மநாபன் அவர்களின்  பணிநிறைவு காலம் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
                    நமது கண்காணிப்பாளர் திரு VPC அவர்கள் 

  தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் வாழ்த்துரை 

Wednesday, September 27, 2017

                                    GDS கமிட்டி இன்றைய நிலை 
 GDS கமிட்டி தொடர்பாக நிதியமைச்சகத்தில் கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு வந்துவிட்டது .இனி அஞ்சல் வாரியம் இதற்கான பரிந்துரைகளை தயாரித்து நமது அமைச்ச ஒப்புதலுக்கு அனுப்புவிக்கும் .நமது இலாகா ஒப்புதலுக்கு பிறகு நேரடியாகவே மத்திய மந்திரிசபைக்கு அனுப்பப்படும் .ஆக எப்படியும் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் கமிட்டி அமுலாக்கத்தை எதிர்பார்க்கலாம் .
                                                   பஞ்சபடி 
GDS ஊழியர்களுக்கு பஞ்சபடி 3சதம் உயர்ந்துள்ளது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 
----------------------------------------------------------------------------------


                                     முக்கிய செய்திகள்
LSG ஊழியர்கள் HSG II பதவியில் OFFICIATING பார்க்க நீடித்த சந்தேகங்கள் நீக்கப்பட்டு மாநில நிர்வாகம் 22.09.2017 தேதியிட்ட உத்தரவை வழங்கியுள்ளது .இதன்படி LOCAL ARRANGEMENT என்பது விருப்பமுள்ள /தகுதியுள்ள ஊழியர்களில் முதலில் அலுவலகத்தில் உள்ளவர்கள் அதனை அடுத்து அந்த ஸ்டேஷன் ஊழியர்கள் -அதுவும் இல்லையென்றால் கோட்ட அளவில் ஊழியர்கள் நிரப்பப்படுவார்கள் .இதன்மூலம் LSG யில் பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது .நமது கோட்டத்தை பொறுத்தவரை ஏற்கனேவே விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இதுகுறித்து வருகிற 29.09.2017 மாதாந்திர பேட்டியிலும் நாம் விவாதிக்க ஏற்கனேவே கொடுத்துளோம் .(பார்க்க )
    R equest to fill up the vacant HSG-II Posts on officiating basis among the willing officials for which volunteers were already called for and kept pending
இந்த பிரச்சினையில் ஒரு தெளிவான உத்தரவை பெற்று தந்த மாநில செயலருக்கு நெல்லை NFPE சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
மாதாந்திர பேட்டிக்கு மேலும் நாம் கொடுத்துள்ள பிரச்சினைகள் 


                                                         NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION—GROUP-C
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-MM/Dlgs dated at Palayankottai-627002 the 25.09.2017
T   

The Sr Supdt Of POs
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir
                   Sub: Subjects for Monthly Meeting- Submission of additional subjects
-       reg


In continuation of this union letter dated 22.09.2017 the following additional subjects may kindly be includedfor discussion during themonthly meeting.

1.    Request to extend the cycle shed at Vallioor SO
2.    Request supply of leather cash bag to Manur SO
3.    Request supply of 5 Chairs for Vallioor SO
4.    Request to maintain impartiality in deputing officials from SOs and not to exempt any SOs by giving special treatment.
5.    Request to increase the advance of TA being sanctioned for the purpose of Tour and Training.
6.    Undue delay in releasing MACP III promotion orders.
7.    Request early passing of Medical Reimbursement Claims.

                                                              Yours faithfully

 [S.K.JACOBRAJ]
                                                                                                             Divisional Secretary
---------------------------------------------------------------------------------------------------------------------------

 அஞ்சல் நான்கின் சார்பாக எடுக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் 
1.திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி (ROC -M-3/3550/2017 DTD 25.07.2017 ) குறைந்தபட்ச தினக்கூலி ரூபாய் 320 வழங்கவேண்டும் .
2.உடல் ஊனமுற்றோருக்கு வழங்கவேண்டிய  இரட்டிப்பான போக்குவரத்து படி விடுபட்டவருக்கு வழங்க வேண்டும் 

3.திருநெல்வேலி HO வில் ஆண் /பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும் .
4.அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள உறுப்பினர் தோழர் திருமலைக்குமார் அவர்களின் சந்தா பிடித்தம் தொடர்பாக உத்தரவிடவேண்டும் .
5.வள்ளியூர் உப கோட்டத்தில் உள்ள தபால்காரர்களுக்கு குடை /மற்றும் பைகள் வழங்கவேண்டும் .
                                        தோழமையுடன்
            SK .பாட்சா கோட்டசெயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 
-----------------------------------------------------------------------------------------------------------------------------


.



Tuesday, September 26, 2017

அன்பார்ந்த தோழர்களே !
இந்தமாதம் 29.09.2017 அன்று நடைபெறவிருக்கும் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவிருக்கும் பிரச்சினைகளில் சில உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன ..இதில் சேர்க்கவேண்டியவைகள் இருந்தால் உடனே தெரிவிக்கவும் .
NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION—GROUP-C
TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-MM/Dlgs dated at Palayankottai-627002 the 22.09.2017
To

The Sr Supdt Of POs
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir
                   Sub: Subjects for Monthly Meeting-reg

     The following subjects  may kindly be included  f or discussion during the monthly meeting.

1.  1.  At CPC, Tirunelveli HO, the PLI/RPLI files are kept in the old canteen room.  During rainy season, there is high flow of water inside the room and there is a leakage in the roof of the building.  Further, the building is in dilapidated condition.  Hence, for the safety of the records, the same may be shifted to an alternate building which is available in the SRO, Tirunelveli.

2.  2.  Request supply of leather cash bag to the following SOs :-
(a)  Kulavanigarpuram (b) M.S University & (c) Viraraghavapuram

3.    3.Replace the recently supplied 12 V 42 AH UPS batteries which are sub-standard as the charge in these batteries are exhausted within short period of power failure.  These batteries are stated to be under warranty.

4.   4It is requested to attach one GDS to CPC, Tirunelveli HO as the partial arrangement of providing partial MTS assistance is not sufficient.

5.   5. Request to fill up the vacant HSG-II Posts on officiating basis among the willing officials for which volunteers were already called for and kept pending.

6. 6.   Request to call for fresh willingness among the eligible officials for the post of Asst. Treasurer, Palayankottai HO and Tirunelveli HO which are kept pending.

7.   7. Request provision of NSP 2 connectivity to Vijayanarayanam Naval Base to ensure that the routine works are not hampered.
8.  
9. 8.   Request early issue of confirmation orders to PAs who were appointed during the year 2014-2015. 

  9.  9.Request to take action to extend the phone connection of Accounts Branch, Tirunelveli HO (2322823) to CPC, Tirunelveli HO for making outgoing calls. 

1.  10. Request to carryout the repair and plumbing works at Ambasamudram H.O

1.  11. Request to supply of handheld barcode scanner to Alwarkurichi SO

1.  12Request to supply of of LAN connectivity to newly supplied system to Kilambur S.O.

1.  13Request to change of the working hours of Nanguneri S.O.08.30 hours to 16.30 hours instead of 08.00 to 16.00.hours.

1  14. Request to provide rain water harvesting plan at Tirunelveli HO to avoid water stagnation on the path of Tirunelveli HO 

 1  15 Request re-supply of Genset of Vijayanarayanam Naval Base which was taken to some other office.

The following officials will attend the meeting 
1.S.K.Jacobraj Divisional Secretary  &LSGPA Tirunelveli
2.C.Vanna Muthu Asst Secretary & SPM veeraragavapuram
3.R.V.Thiyagaraja Pandian Branch Secretary &SPM Kilambur


                         Yours faithfully 

[S.K.JACOBRAJ]
                                                                                                            Divisional Secretary

 அஞ்சல் நான்கு சார்பாக தோழர்கள் 
 SK .பாட்சா -E .ருக்மணிகணேசன் -மற்றும் R.அதிநாராயணன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .முழுதகவல்கள் நாளை பதிவுசெய்யப்படும் 
-------------------------------------------------------------------------------------------------------------------

Monday, September 25, 2017

                                           வருந்துகிறோம் 
நமது அன்பிற்கினிய தோழர் ஆனந்த கண்மணி SPM திருக்குறுங்குடி அவர்களின் தாயார் திருமதி தங்கப்பழம் (88) அவர்கள் 24.09.2017 அன்று மரணமடைந்தார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் அன்னாரது நல்லடக்கம் 25.09.2017 அன்று மாலை 4 மணியளவில் கலந்தப்பனை -கடம்பன்குளத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்துவாடும் தோழர் ஆனந்தகண்மணிக்கு நெல்லை NFPE சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் .
தொடர்புக்கு  -----9486205207
                        NELLAI NFPE 
-------------------------------------------------------------------------------------------------------------------------

                                         புதிய பென்ஷன் 
புதிய பென்ஷன குறித்து 
பேராசிரியர் ஒருவர் -இவ்வாறு 
பீத்திக்கொண்டிருந்தார் 

சட்டங்கள் இல்லாமல்-சட்டென்று 
திட்டமாக வந்த பெருமை உண்டு 
நள்ளிரவு சபை நடத்தவில்லை 
மெஜாரிட்டி காட்டவில்லை -ஆனாலும் 
அரங்கேறியது இந்த அதிசயம்  

புத்தாண்டு 2004 இல் 
பொத்தென்று விழுந்தது 
பத்தாண்டுகளுக்கு மேலாகியும் 
புதிதாகவே இருக்கிறது .

உன்னை போல் அரசும் 
உன் கணக்கில் பணம் செலுத்தும் 
உன் பங்கு முதலாகும் 
உன்னை கூட முதலாளியாக்கும் 

அடுக்ககடுக்கான பேச்சுகளுக்கிடையே 
வெடுக்கென ஒருவன் எழுந்து 
புரியும் படி சொல்ல கேட்டான் 
அதற்கு அவர் நீயே கேள் என்றார் 

PFRDA என்றால் என்ன ?
உள்ளுர் சீட்டு கம்பெனிபோல் என்றார் 
TRESTEE BANK இன் வளர்ச்சி ?
தனியாருக்கு தாமிரபரணி போல் 
உறிஞ்ச கொடுக்கப்படும் 
NSDL ஏன் மும்பையில் ?
சூதாட தோதான இடம் 
வர்த்தக நகரம் தானே ..
முழுப்பணம் எப்பொழுது கிடைக்கும்?
நீ போன பிறகு ?
உத்தேச பென்ஷன் எவ்வளவு கிடைக்கும் ?
சீட்டாட்டத்தில் ரம்மி சேர்வதை பொறுத்து 

பதறிப்போன தோழன் 
ஐயா புரியும் படி 
ஒருவரியில் சொல்லுங்கள் என்றான் ..
யோசிக்காமலே பேராசிரியர் சொன்னார் 
ஒரு வரியில் சொல்வதென்றால் 
உனக்கு இனி பென்ஷன் கிடையாது .....
                           ----------------------- SK .ஜேக்கப் ராஜ் ----------------------------------

Saturday, September 23, 2017

தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர் போராட்டம் -
நீதிமன்ற தலையிடு--நிறைவேற்றுமா அரசு ?

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நடந்த போராட்டம் நீதிமன்ற தலையீட்டினால் முடித்துவைக்கப்பட்டுள்ளது .உயர்நீதிமன்ற நீதிபதி திரு .கிருபாகரன் அவர்கள் சங்கம் அமைத்து போராடுவதால் நீங்கள் அதிகாரம் படைத்தவர்களா ? உத்தரவை மீறி வேலைநிறுத்தம் செய்தால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகமுடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்  .அதே போல் அரசுக்கும் தனது கேள்விகளை எழுப்பிருந்தது .எவ்வளவு காலத்திற்குள் இவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் ? தாமதம் ஆனால் இடைகாலநிவாரணம் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது .மேலோட்டமாக பார்த்தால் பல விஷயங்களை உணர முடிந்தது .
வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட சங்க பிரதிநிதிகளை நீதிமன்றத்தில் ஆஜராக சொன்னது --ஐந்து நிமிட அவகாசத்தில் வேலைநிறுத்தத்தை முடிப்பதாக அறிவிக்க வைத்தது என ஒருபுறமும் -தலைமை செயலாளரையே அரசின் சார்பாக நீதிமன்றத்தில் நிற்கவைத்து ---போராட்ட காலங்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் போராடிய ஊழியர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று எச்சரித்ததும் நீதிமன்ற மான்பை காட்டியது .
நீதிமன்றம் பல உன்னத தீர்ப்புகளை கடந்த காலங்களிலும் வழங்கியிருக்கிறது .இதை அரசு எவ்வளவு அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது 
1972 .யில் உச்சநீதிமன்றம் GDS ஊழியர்களை சிவில் அந்தஸ்து பெற்ற ஊழியர்கள் தான்என்று  அறிவித்தது ....கருணைஅடிப்படையில் வேலை தாமதமின்றி வழங்கவேண்டும் ..உள்ளிட்ட பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன .

                                     CATCHING DEMAND
  முன்னதாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய கோரியும் -இடைக்கால நிவாரணம் 20 சதம் வழங்ககோரியும்  சென்னை மெரினா சாலையில் அவர்கள் நடத்திய ஊர்வலம் மாபெரும் எழுச்சியை காட்டியது .இது போன்ற ஊழியர்களை ஈர்க்கும் கோரிக்கை(CATCHING  DEMAND) போராட்டத்தை வெற்றிபெற செய்யும் என்பதில் சந்தேகமில்லை .
 இதே வாய்ப்பு ஜூலை 2016 இல் மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்திற்கும் கிடைத்தது .தவறவிட்டது தலைமையின் குற்றமா ? நிலைமையின் குற்றமா ? அதனால் தான் இன்று மத்தியஅரசு தர்ணாவிற்கும் தடைவிதிக்க துடிக்கிறது --இன்னும் ஒரு உண்மை சொல்லவேண்டும் என்றால் ஜாக்டோ -ஜியோ அமைப்பில் இருக்கும் அனைவரும் பணியில் இருப்பவர்கள் தான் -ஓய்வு பெற்றவர்கள் சங்கத்தை ஆக்கிரமிக்கவும் இல்லை --அதிகாரம் செலுத்தவும் இல்லை 
போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, September 22, 2017

                                  38 வது தமிழ் மாநில மாநாடு 
அன்பார்ந்த தோழர்களே ! 
  நமது அஞ்சல் மூன்றாம் பிரிவின் 38 வது மாநில மாநாடு 25.11.2017 முதல் 26.1.2017 வரை செங்கல்பட்டு --சிங்கம்பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது .மாநாட்டில் பார்வையாளர் /சார்பாளர் கட்டணம் ரூபாய் 1000 ஆகும் .நெல்லையில் இருந்து நாம் 24.11.2017 அன்று செல்லவிருக்கிறோம் .மாநாட்டிற்கு வரவிருக்கும் தோழர்கள் ரயில் கட்டணமாக ரூபாய் 800 யை  கிழ்கண்ட POSB  கணக்கில்( 0072773482 ஜேக்கப் ராஜ் ) செலுத்திவிட்டு கோட்டசெயலருக்கு 23.09.2017 குள்  தகவல்களை தெரிவிக்கவும் .
மாநில செயற்குழுவில் விடுபட்ட பகுதி 
மாநில செயற்குழுவில் நான் பேசும்போது -மாநாட்டில் DELEGATE SESSION கான நேரத்தை அதிகரித்து தரவேண்டும் என்றும் --மகளிர் ஊழியர்களுக்கும் -சார்பாளர்கள் அல்லாத இளைய தோழர்களுக்கு தனியாக தனி SESSION புதிதாக அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் .தோழர் KVS மற்றும் மாநிலசெயலர் தோழர் JR இதுகுறித்து பரீசீலிக்கப்படும் என்றும் -மண்டலரீதியாக NPS குறித்த கருத்தரங்குகள் மாநிலச்சங்கம் மூலமாக நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்கள் .
நெல்லை கோட்டத்தை பொறுத்தவரை புதிய தோழர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர் G.சிவகுமார் PA மானுர் --M.நமச்சிவாயம் அவர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர் ருக்மணி கணேசன் போஸ்ட்மேன் வள்ளியூர் -தோழர் ராமேஸ்வரன் போஸ்ட்மேன் திருநெல்வேலி ஆகியோர் இனைந்து NPS தொடர்பாக ஊழியர்களை ஒருங்கிணைக்குமாறு கோட்ட சங்கங்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் .
 போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3      
                                              SK பாட்சா  கோட்டசெயலர் P4

Thursday, September 21, 2017

                                                         மாநில செயற்குழு
நமது தமிழ்மாநிலச்சங்கத்தின் மாநில செயற்குழு 19.09.2017 அன்று சென்னை எழும்பூர் பாண்டியன் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது .எதிர்வரும் மாநில மாநாட்டை சிறப்பாக நடத்துவது --CSI --CR பிரச்சினைகளில் நமது பங்கு இவைகளுக்கு முக்கியத்துவம் தந்து விவாதிக்கப்பட்டது .
உறுப்பினர் சரிபார்ப்பில் 2015 யில் உள்ள முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும் மாநிலசெயலருக்கு கிடைத்த தகவல்களை தெரிவித்தார் .தமிழகத்தில் அஞ்சல் எழுத்தர்களின் தற்போதைய Working Strength 9404 -இதில் நமது NFPE P 3 சங்கத்தின் எண்ணிக்கை 6721 ஆகும் .இது மொத்த சதவிகிதத்தில் 71.16 ஆகும் .தற்சமயம் 01.04.2017 அடிப்படையில் நமது உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்து தமிழகத்தில் 76 சதம் என உச்சத்தை அடைந்துள்ளோம் .அடிப்படை உறுப்பினர் எண்ணிக்கையை எட்டிப்பார்க்காத சங்கத்திற்கு அங்கீகாரம்பழைய சூப்பர்வைசர் அஸோஸியேஷன் எப்படி போஸ்ட்மாஸ்டர் கிரேடு என உருமாறி -அங்கீகாரம் என்ற போர்வையில் நமது வேலைநிறுத்தத்திற்கு எதிராக போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் செய்துவரும் இடையூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .
தென்மண்டல இயக்குனர் அவர்களுடன் ஒரு சந்திப்பு
 நமது தென்மண்டல இயக்குனர் அவர்களை 20.09.2017 அன்று தோழர் SK .ஜேக்கப் ராஜ் -தோழர் அறிவழகன் கோட்டசெயலர் ராமநாதபுரம் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்து பேசினோம் .எடுத்துச்சென்ற பிரச்சினைகளை கவனமாக கேட்டறிந்த நமது DPS அவர்கள் மீண்டும் ஒருமுறை தூத்துகுடி மற்றும் ராமநாதபுரம் கண்காணிப்பாளர்களுடன் பேசிவிட்டு முடியாவிட்டால் மண்டலநிர்வாகம் தலையிடும் என்றும் தெரிவித்தார்கள் .
                               ஏனைய மண்டல செய்திகள்
போஸ்ட்மாஸ்டர் கிரேடு 1 ஊழியர்களுக்கான இடமாறுதல்கள் கூடியவிரைவில் நமது மண்டலத்தில் வெளியிட படவுள்ளது .சொந்த ஊர் கேட்பவர்கள் -மற்றும் பணிமூப்பு அடிப்படையில்  முன்னுரிமை வழங்கப்படும் என PMG அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது .
                                                    HSG II APM ACS
சமீபத்தில் வந்த APM ACCOUNTS பகுதிக்கான HSG II பதவியுயர்வில்
தெ ன்மண்டலத்தில் 4 தோழர்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் இன்னும் ஓரிருநாளில் வரவிருக்கிறது 
                                                     LSG APM ACCTS 
மேலும் ஏற்கனவே வெளிவந்த கணக்கு பிரிவிற்கான LSG பதவியுர்வுகளும் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விருப்பமனுக்கள் பெற்று விரைவில் நிரப்பப்படும் .உதவியுர்வுகளில் குறிப்பாக LSG APM குளுக்கு கூடுமானவரை சொந்தகோட்டங்களில் முன்னுரிமை கொடுக்க முயலும் மண்டல நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Monday, September 18, 2017

அன்பார்ந்த தோழர்களே !
                  நமது இயக்குனர் அவர்களுடன் இன்று(18.09.2017) ஒரு INFORMAL மீட்டிங் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது .முன்னதாக நமக்கு 20.09.2017 அன்று மாலை 4 மணிக்கு INFORMAL மீட்டிங் க்கு அனுமதி அளிக்கப்பட்ட சூழ்நிலையில் விருதுநகர் கோட்ட சூழல்மாறுதல் சம்பந்தமாக உடனடியாக பேச வேண்டியது இருப்பதால் மாநிலச்சங்க அனுமதியுடன்  இன்று நமது தோழர்கள் S .சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகநாதன் அவர்கள் இன்று நமது DPS அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் .ஒருவேளை இன்று DPS அவர்களை சந்திக்க முடியாவிட்டால் திட்டமிடடபடி 20.9.2017 அன்று    
 சந்திக்க வாய்ப்புஉள்ளது .
                                          மாநிலசெயற்குழு 
நமது மாநிலமாநட்டை ஒட்டி நமது மாநிலச்சங்க செயற்குழு 19.09.2017 அன்று சென்னை எழும்பூரில் நடைபெறுகிறது .நமது கோட்ட செயலர் மாநில செயற்குழுவிற்கு பார்வையாளராக செல்கிறார் .
----------------------------------------------------------------------------------------------------------------------
                                    நமது SSP திரு VPC அவர்கள் இன்று விடுப்பு முடிந்து பணியில் சேர்க்கிறார்கள் .போனமாத மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை -ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட தேக்க நிலையில் உள்ளது .இன்று 18.09.2017  நமது SSP அவர்களை நாம் சந்திக்கவிருக்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
                                      தரணி புகழ் தஞ்சை மாநாடு 
தஞ்சாவூர் கோட்ட மாநாடு  17.9.17 அன்று  தஞ்சாவூர்  தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர். M. ராஜந்திரன் அவர்கள்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை, அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். J.R.,  அவர்கள் துவக்கி
வைத்து உரையாற்றினார்.        
நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி
நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக  தோழர். T. வரதராஜன்
கோட்டச் செயலராக தோழர். S. செல்வகுமார்  
நிதிச்செயலராக K.  நீலவண்ணன் யாதவ்
K.  நீலவண்ணன் யாதவ்  அவர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  நெல்லை கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்
                              பரப்பபாக நடைபெற்ற மத்திய சென்னை அஞ்சல் நான்கின் மாநாடு 
17.09.2017 அன்று நடைபெற்ற சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் நான்கின் மாநாட்டில் வெற்றிபெற்ற தோழர்களை
 R .பாஸ்கர் (தலைவர் ) S.வாசுதேவன் (செயலர் ) K.கபாலி (பொருளாளர் ) நெல்லை NFPE வாழ்த்துகிறது -
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

Saturday, September 16, 2017

                                 புதிய பார்வை -புதிய பயணம் 
வழக்கமான கோரிக்கைகளை தாண்டி --நாம்
எடுக்கவேண்டிய பிரச்சினைகள்ஏராளம்  இருக்கின்றன .அஞ்சல் அலுவலகங்களின் கட்டிடங்கள் -பராமரிக்கமுடியாமல் இருக்கும் போஸ்ட்மாஸ்டர் குடியிருப்புகள் --தரமில்லாத உபகரணங்கள் --கிடைக்காத படிவங்கள் -தேவைக்கு குறைவாக தரப்படும் காகிதங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் .இன்று அவைகளை எல்லாம் தாண்டி நாம் எடுக்கவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன .இந்தநிலையில் தான் நேற்று பாரம்பரியமிக்க வேலூர் கோட்ட சங்கத்தின் பொதுக்குழு கூடி முழுமையான பயிற்சிகள் ஊழியர்கள் பெறாதவரை CSI  ROLL OUT யை தள்ளிவைக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள் .இது வேலூருக்கு மட்டுமல்ல -இந்தியா முழுமைக்கும் இதே நிலைமைதான் அவசரகதியில் அமுலாக்கம் -பலபல தொகுதிகள் கொண்ட திட்டத்தை மூன்று நாட்களில் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாது என்பதனை தெளிவாக நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லவேண்டியது நமது கடமையாகும் .FINACLE அமுலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பலமூத்த தோழர்கள் தன் விருப்ப ஓய்வில் சென்றனர் .மனஉளைச்சலில் மாண்டு போனவர்கள் உண்டு -நாடுமுழுவதும் பெரிய கொந்தளிப்புகளுக்கு பிறகே ஓரளவிற்கு நிலைமை கட்டுக்குள் வந்தது இதே நிலை CSI கும் வருவதற்கு முன்னாள் நாம் முன்கூட்டியே இ துகுறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் .
ஒருபுறம் வட்டி குறைப்பு -மறுபுறம் ஏஜெண்டுகளின் கமிஷன் குறைப்பு -பிறகு எங்கிருந்து டார்கெட்யை எட்டுவது ?
 சியாமளா  கோபிநாத் DY கவர்னர் RBI அவர்களின் பரிந்துரையை ஏற்று அஞ்சல் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை அதிகம் அதை படிப்படியாக குறைக்கவேண்டும் என்றஅடிப்படையில் பல முதலீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷன்குறைக்கப்பட்டு வருகிறது .அரசின் கண்ணில் மிகஉறுத்தலாக இருக்கும் MPKBY கமிஷனை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 சதம் குறைக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டால் அஞ்சலக RD கணக்குகள் என்னாகும் ?
ஒரு நிமிடம் கூட தாக்குபிடிக்காத UPS பேட்டரிகள் 
சமீபத்தில் அனைத்து C கிளாஸ் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட 12 வோல்ட் UPS பேட்டரிகள்  மின்சாரம் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட செயல்படாமல் நின்று விடுகிறது .இப்படி தரமற்ற உபகரணங்களை வாங்கியது ஏன் ? இது குறித்து கோட்ட சங்கங்கள் கோட்டநிர்வாகத்திற்கும் -மண்டல நிர்வாகத்திற்கும் கொண்டுசென்றால் மட்டுமே இனியாவது தரமான  நாணயமான கம்பெனிகளிடம் இருந்து நாம் கொள்முதல் செய்யமுடியும் .அஞ்சல் சொத்துக்களை பாதுகாப்பதும் நமது கடமை என்பதனை உணரவேண்டும் .
இது போன்ற புதிய புதிய பார்வையோடு நாம் கண்காணிக்க தொடங்கினால் தான் நிர்வாகம் ஊழியர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்வரும் -
அஞ்சல் துறையையும் நாம் பாத்துக்க வேண்டும் -அஞ்சல் ஊழியர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் .புதிய பார்வையோடு நம் பயணங்கள் தொடரட்டும் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

Friday, September 15, 2017

    அன்பார்ந்த தோழர்களே !
      CSI  பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது. தென் மண்டலத்தில் பல கோட்டங்களில் பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஊழியர்களுக்கு ADVANCE OF TA வழங்குவதில் கூட சில அதிகாரிகள் மிக மிக குறைந்த அளவு பணத்தைத்தான் கொடுக்கிறார்கள் .ஏழாவது சம்பளக்குழுவின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட TA க்கு நிகரான அட்வான்ஸ் கொடுப்பதில் அவர்களுக்கு என்ன இத்தனை வருத்தம் என்று தெரியவில்லை ..சாமி வரம் கொடுத்தாலும் ஆசாமிகள் தடுப்பது ஏன் ?
                        மீண்டும் தலைதூக்கும் டார்கெட் பிரச்சினை 
 மீண்டும் டார்கெட் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது சில . உப கோட்டத்தில் அதி வேக தொனியில் உத்தரவுகள் பிறப்பிக்கப டுகிறதாம் .சமீபத்திய இலாகா உத்தரவுகள் கூட ஊழியர்களை MOTIVATE செய்யத்தான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் உத்தரவுகள் வந்துள்ளன .என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள கேட்டு கொள்கிறோம் .டார்கெட் குறித்து உங்கள் மனம் நோகும் அளவிற்கு யாராவது பே(ஏ )சினாலோ ஆரம்பத்திலேயே கோட்ட சங்க நிர்வாகிளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் .
.                              தோழியர்களின் கவனத்திற்கு 
உங்கள் கண்ணீர் தீர்வு தராது ..தைரியமாக பணியாற்றுங்கள் --நாம் தான் லஞ்ச -லாவண்ய புகார் இன்றி பணிபுரியும் உத்தம ஊழியர்கள் --யாரும் நமக்கு எஜமான் கிடையாது --அரசு தான் எஜமான் -மற்ற அனைவரும் ஊழியர்கள்தான் --இந்த உண்மையை தெரிந்து கொள்வீர் ! 
பாரதி கண்ட புதுமை பெண்கள் நீங்கள் -
அச்சம் தவிர்ப்பீர் ! 
என்றும் ஊழியர் நலனில் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

நம் அன்பிற்குரிய அண்ணன் திரு .ஞானசேகரன் PA நான்குனேரி அவர்களின் புதல்வர் அருமை தம்பி உமாநாத் அவர்களின் வெற்றிக்கு எங்கள் வாழ்த்துக்கள் .பழகுவதில் இனிமை --எங்கு பார்த்தாலும் அவரே முன்வந்து நான் ஞானசேகரன் அவர்களின் மகன் என்று தன்னை அறிமுகப்படுத்தி நலம் விசாரிக்கும் பாங்கு இவைகள் தோழர் -ஞானசேகர் -திருமதி ஞானசேகர் ஆகியோர் தங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் -பழக்கங்கள் 
இன்று மாவட்ட அளவில் பெரிசுபெறும் தம்பி நிச்சயம் ஒருநாள் அ கிலஇந்தியஅளவில் -பாராட்டப்படும் ஆசிரியராக வரவேண்டும் என என் சார்பாகவும் -நெல்லை NFPE வாழ்த்துகிறது 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை 
சான்றோன் எனக்கேட்ட தாய் 
இந்த குறளின் பெருமை அண்ணன் ஞானசேகரன் அவர்களின் குடும்பத்திற்கு பொருந்தும் 





--------------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, September 14, 2017

                                   பஞ்சப்படி 1 சதம் --    தர்மமா ? கர்மமா   
   புதிய இந்தியாவின் தொடக்கமே -தொழிலாளர்களுக்கு எதிரான 
உன் அஸ்திரங்களை பிரோகிப்பது தர்மமா ?

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் பஞ்சப்படி உயர்வினை அறிவித்துள்ளது .ஆம் .மிகமிக தாராள மனதுடன் 1 சதம் என்று அறிவித்துள்ளது .இதற்கு மேல் குறைக்கக்கூடாது என்பதற்காகவோ என்னவோ ஒன்றோடு நிறுத்திக்கொண்டுள்ளது .பழைய எமெர்ஜெண்சி காலங்களில் தான் பஞ்சபடி குறைப்பு -நிறுத்திவைப்பு நடந்தது .இது என்ன அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி காலம் போல் இருக்கிறது .இதுகுறித்து 
நமது மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் ஏனோ மவுனம் காக்கின்றது .அவர்கள் இதுவரை கேட்டுவந்த குறைந்தபட்ச ஊதியம் -பிட்மென் பார்முலா --கோரிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக சோர்ந்து போனார்களோ ? பழைய காலங்களில் நமது சங்க பிரதிநிதிகள் பிரதமர் --நமது துறை அமைச்சர்களையெல்லாம் சந்தித்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்திய ஒரு மகத்தான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் .ஆனால் இன்று மந்திரிகளின் நேரடி உதவியாளர்களிடம் மகஜர் கொடுப்பதும் --வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுவதும் என்று பேச்சுவார்த்தைகளின் அழுத்தமும்     
முக்கியத்துவமும் குறைந்திருக்கிறது .ஊதியக்குழு அறிவிப்பில் கண்டபடி 25 சதம் பஞ்சப்படி உயரும்போதுதான் மற்றைய அலவன் சுகள் மாறும் என்றால்  அது அடுத்த ஊதியக்குழுவிற்கு மேல் ஆகும்..
இதுபோன்ற மத்திய அரசு ஊழியர்களின் நேரடி பாதிப்புகளுக்காக 
நாம் இயக்கங்கள் நடத்த தொடங்கினால் மட்டுமே -மன சோர்வில் கிடைக்கும் எமதருமை தோழர்களை மீண்டும் ஒரு எழுச்சிக்கும் -புது புரட்சிக்கும் அழைத்து கொண்டு செல்ல முடியும் .
புரட்சி ஓங்குக ! புரட்சி ஓங்குக !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை