...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, September 14, 2017

                                   பஞ்சப்படி 1 சதம் --    தர்மமா ? கர்மமா   
   புதிய இந்தியாவின் தொடக்கமே -தொழிலாளர்களுக்கு எதிரான 
உன் அஸ்திரங்களை பிரோகிப்பது தர்மமா ?

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு சமீபத்தில் பஞ்சப்படி உயர்வினை அறிவித்துள்ளது .ஆம் .மிகமிக தாராள மனதுடன் 1 சதம் என்று அறிவித்துள்ளது .இதற்கு மேல் குறைக்கக்கூடாது என்பதற்காகவோ என்னவோ ஒன்றோடு நிறுத்திக்கொண்டுள்ளது .பழைய எமெர்ஜெண்சி காலங்களில் தான் பஞ்சபடி குறைப்பு -நிறுத்திவைப்பு நடந்தது .இது என்ன அறிவிக்கப்படாத எமெர்ஜெண்சி காலம் போல் இருக்கிறது .இதுகுறித்து 
நமது மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் ஏனோ மவுனம் காக்கின்றது .அவர்கள் இதுவரை கேட்டுவந்த குறைந்தபட்ச ஊதியம் -பிட்மென் பார்முலா --கோரிக்கைகளில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக சோர்ந்து போனார்களோ ? பழைய காலங்களில் நமது சங்க பிரதிநிதிகள் பிரதமர் --நமது துறை அமைச்சர்களையெல்லாம் சந்தித்து நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்திய ஒரு மகத்தான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் .ஆனால் இன்று மந்திரிகளின் நேரடி உதவியாளர்களிடம் மகஜர் கொடுப்பதும் --வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசுவதும் என்று பேச்சுவார்த்தைகளின் அழுத்தமும்     
முக்கியத்துவமும் குறைந்திருக்கிறது .ஊதியக்குழு அறிவிப்பில் கண்டபடி 25 சதம் பஞ்சப்படி உயரும்போதுதான் மற்றைய அலவன் சுகள் மாறும் என்றால்  அது அடுத்த ஊதியக்குழுவிற்கு மேல் ஆகும்..
இதுபோன்ற மத்திய அரசு ஊழியர்களின் நேரடி பாதிப்புகளுக்காக 
நாம் இயக்கங்கள் நடத்த தொடங்கினால் மட்டுமே -மன சோர்வில் கிடைக்கும் எமதருமை தோழர்களை மீண்டும் ஒரு எழுச்சிக்கும் -புது புரட்சிக்கும் அழைத்து கொண்டு செல்ல முடியும் .
புரட்சி ஓங்குக ! புரட்சி ஓங்குக !
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment