...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 22, 2017

                                  38 வது தமிழ் மாநில மாநாடு 
அன்பார்ந்த தோழர்களே ! 
  நமது அஞ்சல் மூன்றாம் பிரிவின் 38 வது மாநில மாநாடு 25.11.2017 முதல் 26.1.2017 வரை செங்கல்பட்டு --சிங்கம்பெருமாள் கோயிலில் நடைபெறுகிறது .மாநாட்டில் பார்வையாளர் /சார்பாளர் கட்டணம் ரூபாய் 1000 ஆகும் .நெல்லையில் இருந்து நாம் 24.11.2017 அன்று செல்லவிருக்கிறோம் .மாநாட்டிற்கு வரவிருக்கும் தோழர்கள் ரயில் கட்டணமாக ரூபாய் 800 யை  கிழ்கண்ட POSB  கணக்கில்( 0072773482 ஜேக்கப் ராஜ் ) செலுத்திவிட்டு கோட்டசெயலருக்கு 23.09.2017 குள்  தகவல்களை தெரிவிக்கவும் .
மாநில செயற்குழுவில் விடுபட்ட பகுதி 
மாநில செயற்குழுவில் நான் பேசும்போது -மாநாட்டில் DELEGATE SESSION கான நேரத்தை அதிகரித்து தரவேண்டும் என்றும் --மகளிர் ஊழியர்களுக்கும் -சார்பாளர்கள் அல்லாத இளைய தோழர்களுக்கு தனியாக தனி SESSION புதிதாக அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் .தோழர் KVS மற்றும் மாநிலசெயலர் தோழர் JR இதுகுறித்து பரீசீலிக்கப்படும் என்றும் -மண்டலரீதியாக NPS குறித்த கருத்தரங்குகள் மாநிலச்சங்கம் மூலமாக நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்கள் .
நெல்லை கோட்டத்தை பொறுத்தவரை புதிய தோழர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர் G.சிவகுமார் PA மானுர் --M.நமச்சிவாயம் அவர்களும் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர் ருக்மணி கணேசன் போஸ்ட்மேன் வள்ளியூர் -தோழர் ராமேஸ்வரன் போஸ்ட்மேன் திருநெல்வேலி ஆகியோர் இனைந்து NPS தொடர்பாக ஊழியர்களை ஒருங்கிணைக்குமாறு கோட்ட சங்கங்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம் .
 போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3      
                                              SK பாட்சா  கோட்டசெயலர் P4

0 comments:

Post a Comment