...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 4, 2017

    அன்பார்ந்த தோழர்களே !
                                அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு
1.நமது அஞ்சல் மூன்றாம் பிரிவின் மாநில மாநாடு வருகிற 25.11.2017 முதல் 27.11.2017 வரை செங்கல்பட்டு கோட்டம்    சிங்கப் பெருமாள் கோயில் என்ற நகரில் நடைபெறுகிறது .மாநாடு சிறக்க நெல்லை NFPE இன் வெற்றி வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நமது நெல்லை கோட்டத்தில் இருந்து வரவிரும்பும் தோழர்கள் 07.09.2017 குள்
தங்கள் பெயர்களை கோட்ட செயலரிடம் தெரிவிக்கும் படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள் .
2. FINACLE  செயல்பாடுகள் குறித்த  ஆய்வுகள் ஒவ்வொரு கோட்டத்திலும் 01.09.2017 ,04.09.2017 மற்றும் 05.09.2017 ஆகியநாட்கள் நடைபெறுகிறது .ஒவ்வொரு மணி இடைவெளியில் நடைபெறும் இந்த ஆய்வில் FINACLE 
சம்பந்தமான speed, connectivity etc  குறித்து பதிவு செய்யப்படும் .தோழர்கள் தயங்காமல் --தங்கள் குறைகளை தெரிவிக்கவும் 
3. தபால் காரர் -MTS ஊழியர்களுக்கான Dress Allowance தொடர்பான உத்தரவுகள் DOP யால் வழங்கப்பட்டுவிட்டது .சில சின்ன யூனிட்களில் இது பட்டுவாடா ஆகிவிட்டதாகவும் தெரிகிறது .
   நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் 




0 comments:

Post a Comment