...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 16, 2017

                                 புதிய பார்வை -புதிய பயணம் 
வழக்கமான கோரிக்கைகளை தாண்டி --நாம்
எடுக்கவேண்டிய பிரச்சினைகள்ஏராளம்  இருக்கின்றன .அஞ்சல் அலுவலகங்களின் கட்டிடங்கள் -பராமரிக்கமுடியாமல் இருக்கும் போஸ்ட்மாஸ்டர் குடியிருப்புகள் --தரமில்லாத உபகரணங்கள் --கிடைக்காத படிவங்கள் -தேவைக்கு குறைவாக தரப்படும் காகிதங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம் .இன்று அவைகளை எல்லாம் தாண்டி நாம் எடுக்கவேண்டிய பிரச்சினைகள் ஏராளம் இருக்கின்றன .இந்தநிலையில் தான் நேற்று பாரம்பரியமிக்க வேலூர் கோட்ட சங்கத்தின் பொதுக்குழு கூடி முழுமையான பயிற்சிகள் ஊழியர்கள் பெறாதவரை CSI  ROLL OUT யை தள்ளிவைக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள் .இது வேலூருக்கு மட்டுமல்ல -இந்தியா முழுமைக்கும் இதே நிலைமைதான் அவசரகதியில் அமுலாக்கம் -பலபல தொகுதிகள் கொண்ட திட்டத்தை மூன்று நாட்களில் முழுமையாக தெரிந்து கொள்ளமுடியாது என்பதனை தெளிவாக நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லவேண்டியது நமது கடமையாகும் .FINACLE அமுலாக்கத்தில் ஏற்பட்ட குளறுபடியால் பலமூத்த தோழர்கள் தன் விருப்ப ஓய்வில் சென்றனர் .மனஉளைச்சலில் மாண்டு போனவர்கள் உண்டு -நாடுமுழுவதும் பெரிய கொந்தளிப்புகளுக்கு பிறகே ஓரளவிற்கு நிலைமை கட்டுக்குள் வந்தது இதே நிலை CSI கும் வருவதற்கு முன்னாள் நாம் முன்கூட்டியே இ துகுறித்து நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் .
ஒருபுறம் வட்டி குறைப்பு -மறுபுறம் ஏஜெண்டுகளின் கமிஷன் குறைப்பு -பிறகு எங்கிருந்து டார்கெட்யை எட்டுவது ?
 சியாமளா  கோபிநாத் DY கவர்னர் RBI அவர்களின் பரிந்துரையை ஏற்று அஞ்சல் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகை அதிகம் அதை படிப்படியாக குறைக்கவேண்டும் என்றஅடிப்படையில் பல முதலீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷன்குறைக்கப்பட்டு வருகிறது .அரசின் கண்ணில் மிகஉறுத்தலாக இருக்கும் MPKBY கமிஷனை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 சதம் குறைக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏற்கப்பட்டால் அஞ்சலக RD கணக்குகள் என்னாகும் ?
ஒரு நிமிடம் கூட தாக்குபிடிக்காத UPS பேட்டரிகள் 
சமீபத்தில் அனைத்து C கிளாஸ் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்ட 12 வோல்ட் UPS பேட்டரிகள்  மின்சாரம் இல்லையென்றால் ஒரு நிமிடம் கூட செயல்படாமல் நின்று விடுகிறது .இப்படி தரமற்ற உபகரணங்களை வாங்கியது ஏன் ? இது குறித்து கோட்ட சங்கங்கள் கோட்டநிர்வாகத்திற்கும் -மண்டல நிர்வாகத்திற்கும் கொண்டுசென்றால் மட்டுமே இனியாவது தரமான  நாணயமான கம்பெனிகளிடம் இருந்து நாம் கொள்முதல் செய்யமுடியும் .அஞ்சல் சொத்துக்களை பாதுகாப்பதும் நமது கடமை என்பதனை உணரவேண்டும் .
இது போன்ற புதிய புதிய பார்வையோடு நாம் கண்காணிக்க தொடங்கினால் தான் நிர்வாகம் ஊழியர்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க முன்வரும் -
அஞ்சல் துறையையும் நாம் பாத்துக்க வேண்டும் -அஞ்சல் ஊழியர்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் .புதிய பார்வையோடு நம் பயணங்கள் தொடரட்டும் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment