...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, September 15, 2017

    அன்பார்ந்த தோழர்களே !
      CSI  பயிற்சி வகுப்புகள் நேற்று முதல் கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறுகிறது. தென் மண்டலத்தில் பல கோட்டங்களில் பயிற்சி வகுப்புக்கு செல்லும் ஊழியர்களுக்கு ADVANCE OF TA வழங்குவதில் கூட சில அதிகாரிகள் மிக மிக குறைந்த அளவு பணத்தைத்தான் கொடுக்கிறார்கள் .ஏழாவது சம்பளக்குழுவின் அடிப்படையில் உயர்த்தப்பட்ட TA க்கு நிகரான அட்வான்ஸ் கொடுப்பதில் அவர்களுக்கு என்ன இத்தனை வருத்தம் என்று தெரியவில்லை ..சாமி வரம் கொடுத்தாலும் ஆசாமிகள் தடுப்பது ஏன் ?
                        மீண்டும் தலைதூக்கும் டார்கெட் பிரச்சினை 
 மீண்டும் டார்கெட் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது சில . உப கோட்டத்தில் அதி வேக தொனியில் உத்தரவுகள் பிறப்பிக்கப டுகிறதாம் .சமீபத்திய இலாகா உத்தரவுகள் கூட ஊழியர்களை MOTIVATE செய்யத்தான் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் உத்தரவுகள் வந்துள்ளன .என்பதை அதிகாரிகள் நினைவில் கொள்ள கேட்டு கொள்கிறோம் .டார்கெட் குறித்து உங்கள் மனம் நோகும் அளவிற்கு யாராவது பே(ஏ )சினாலோ ஆரம்பத்திலேயே கோட்ட சங்க நிர்வாகிளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம் .
.                              தோழியர்களின் கவனத்திற்கு 
உங்கள் கண்ணீர் தீர்வு தராது ..தைரியமாக பணியாற்றுங்கள் --நாம் தான் லஞ்ச -லாவண்ய புகார் இன்றி பணிபுரியும் உத்தம ஊழியர்கள் --யாரும் நமக்கு எஜமான் கிடையாது --அரசு தான் எஜமான் -மற்ற அனைவரும் ஊழியர்கள்தான் --இந்த உண்மையை தெரிந்து கொள்வீர் ! 
பாரதி கண்ட புதுமை பெண்கள் நீங்கள் -
அச்சம் தவிர்ப்பீர் ! 
என்றும் ஊழியர் நலனில் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment