...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, September 5, 2017

                                                 வாழ்க AGP 
இன்று 85 இல் 
அடியடுத்துவைக்கும் 
ஆற்றல்மிகு தலைவர் AGP வாழ்க !
இளைப்பு -களைப்பு 
உறக்கம் -மயக்கம் ஏதுமின்றி 
இயக்கப்பணிதனில் -இன்றுவரை 
ஈடுபடுத்திவரும் ஐயா AGP யை வணங்குகிறோம் 
அண்ணன் பாலுவும் -நீங்களும் 
நீரும் -நெருப்பும் தான் -
ஆனாலும் அண்ணன்  சொல்லித்தான் -பல 
பெருமை உங்களுக்குண்டு என்று தெரிந்தவன் 

பம்பரமும் சுற்றிய பின்பு 
ஓய்வு பெறும் -இவரோ 
படுகிழமாய் போன பின்பும் 
பம்பரமாய் சுற்றி வந்தார் -என்ற 
பெரியாரின் புகழுக்குரியவர் 
எதிரிகளின் தலையெல்லாம் 
முற்றிய கதிர்போல் சாய்வதற்கு 
என் அண்ணன் கற்றிருந்தார் 
முத்தமிழை ஆள்வதற்கு என்ற 
அண்ணாவின் பெருமைக்குரியவர் 
காக்கிசட்டைக்கும் -தனி 
அங்கீகாரம் தந்தவர் -
அரைநிர்வாணம் போராட்டத்தை அறிமுகப்படுத்தி 
அரசாங்கத்தின் பார்வையை நம்மீது 
பட வைத்தவர்  --தொடர்ந்து 
படர வைத்தவர் 
திராவிடத்தின் முகவடியே !
தபால்காரர்களின்  முகவரியே !
உன் கடிதங்களில் பல 
இன்னும் என்னிடம் 
பாதுகாப்புடனும் -பராமரிப்போடும் இருக்கின்றன 
எத்தனை நினைவாற்றல் 
எத்தனை நன்றியுணர்வுகள் 
கைகொடுப்பதோடு மறந்துபோகும் 
தோழமைக்கு நடுவில் -நீங்கள் மட்டுமல்லவா 
இன்னும் கடிதங்களால் 
எங்களை விசாரிக்கிறீர்கள்
எழுத்துக்களால்  வசீகரிக்கிறீர்கள் --இன்று 
-திருவல்லிகேணிக்கு வர முடியவில்லை 
வருந்துகிறேன் --திருநெல்வேலியில் இருந்து 
வணங்குகிறேன் 
உன் வரிகளில் என்னை கவர்ந்தது 
கொள்கை சிறகுகள் அல்ல -வளர்வதற்கும் -உதிர்வதற்கும் 
கொள்கை எங்கள் இதயம் -
அண்ணன் பாலுவின் வரிகளும் உங்களுக்கு பொருந்தும் 
தாக்க தெரிந்தால் மட்டும் போதாது 
தாக்கு பிடிக்கவும் தெரியவேண்டும் --
காலதேவன் முன் இன்னும்  நீங்கள் 
தாக்கு பிடிக்கவேண்டும் -திராவிட தம்பிமார்களை 
தாங்கி பிடிக்க வேண்டும் ....
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் 












1 comment:

  1. COM A.G.P.IS GREAT.HIS WORK IN 1983 SEP 19,NOT FOGETABLE.ONE DAY
    ONE DEMAND REGULAR E D EMPLOYEES
    IT IS GIVE PATH OH NOW GDS EMLOYEES GET SCALE OF PAY,LEAVE,RAISE ETC.
    THANK YOU FOR YOUR LIRIKS
    EX EDDA/MC
    K.PONNURAJ SANKARNAGAR.5/9/2017

    ReplyDelete