...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 18, 2017

அன்பார்ந்த தோழர்களே !
                  நமது இயக்குனர் அவர்களுடன் இன்று(18.09.2017) ஒரு INFORMAL மீட்டிங் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது .முன்னதாக நமக்கு 20.09.2017 அன்று மாலை 4 மணிக்கு INFORMAL மீட்டிங் க்கு அனுமதி அளிக்கப்பட்ட சூழ்நிலையில் விருதுநகர் கோட்ட சூழல்மாறுதல் சம்பந்தமாக உடனடியாக பேச வேண்டியது இருப்பதால் மாநிலச்சங்க அனுமதியுடன்  இன்று நமது தோழர்கள் S .சுந்தரமூர்த்தி மற்றும் சண்முகநாதன் அவர்கள் இன்று நமது DPS அவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர் .ஒருவேளை இன்று DPS அவர்களை சந்திக்க முடியாவிட்டால் திட்டமிடடபடி 20.9.2017 அன்று    
 சந்திக்க வாய்ப்புஉள்ளது .
                                          மாநிலசெயற்குழு 
நமது மாநிலமாநட்டை ஒட்டி நமது மாநிலச்சங்க செயற்குழு 19.09.2017 அன்று சென்னை எழும்பூரில் நடைபெறுகிறது .நமது கோட்ட செயலர் மாநில செயற்குழுவிற்கு பார்வையாளராக செல்கிறார் .
----------------------------------------------------------------------------------------------------------------------
                                    நமது SSP திரு VPC அவர்கள் இன்று விடுப்பு முடிந்து பணியில் சேர்க்கிறார்கள் .போனமாத மாதாந்திர பேட்டி நடைபெறவில்லை -ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட தேக்க நிலையில் உள்ளது .இன்று 18.09.2017  நமது SSP அவர்களை நாம் சந்திக்கவிருக்கிறோம் .
-----------------------------------------------------------------------------------------------------------------------
                                      தரணி புகழ் தஞ்சை மாநாடு 
தஞ்சாவூர் கோட்ட மாநாடு  17.9.17 அன்று  தஞ்சாவூர்  தலைமை அஞ்சலகத்தில்  கோட்டத் தலைவர் தோழர். M. ராஜந்திரன் அவர்கள்  தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டை, அஞ்சல் மூன்று சங்கத்தின் மாநிலச் செயலர்
தோழர். J.R.,  அவர்கள் துவக்கி
வைத்து உரையாற்றினார்.        
நிர்வாகிகள் தேர்தல் போட்டியின்றி
நடைபெற்றது. கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவராக  தோழர். T. வரதராஜன்
கோட்டச் செயலராக தோழர். S. செல்வகுமார்  
நிதிச்செயலராக K.  நீலவண்ணன் யாதவ்
K.  நீலவண்ணன் யாதவ்  அவர்களும்
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க  நெல்லை கோட்ட சங்கத்தின் நெஞ்சார்ந்த  வாழ்த்துக்கள்
                              பரப்பபாக நடைபெற்ற மத்திய சென்னை அஞ்சல் நான்கின் மாநாடு 
17.09.2017 அன்று நடைபெற்ற சென்னை மத்திய கோட்டத்தின் அஞ்சல் நான்கின் மாநாட்டில் வெற்றிபெற்ற தோழர்களை
 R .பாஸ்கர் (தலைவர் ) S.வாசுதேவன் (செயலர் ) K.கபாலி (பொருளாளர் ) நெல்லை NFPE வாழ்த்துகிறது -
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

0 comments:

Post a Comment