...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 23, 2017

தமிழக அரசு ஊழியர்கள் -ஆசிரியர் போராட்டம் -
நீதிமன்ற தலையிடு--நிறைவேற்றுமா அரசு ?

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் நடந்த போராட்டம் நீதிமன்ற தலையீட்டினால் முடித்துவைக்கப்பட்டுள்ளது .உயர்நீதிமன்ற நீதிபதி திரு .கிருபாகரன் அவர்கள் சங்கம் அமைத்து போராடுவதால் நீங்கள் அதிகாரம் படைத்தவர்களா ? உத்தரவை மீறி வேலைநிறுத்தம் செய்தால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகமுடியாது என்று எச்சரிக்கை விடுத்தார்  .அதே போல் அரசுக்கும் தனது கேள்விகளை எழுப்பிருந்தது .எவ்வளவு காலத்திற்குள் இவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவீர்கள் ? தாமதம் ஆனால் இடைகாலநிவாரணம் வழங்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தது .மேலோட்டமாக பார்த்தால் பல விஷயங்களை உணர முடிந்தது .
வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட சங்க பிரதிநிதிகளை நீதிமன்றத்தில் ஆஜராக சொன்னது --ஐந்து நிமிட அவகாசத்தில் வேலைநிறுத்தத்தை முடிப்பதாக அறிவிக்க வைத்தது என ஒருபுறமும் -தலைமை செயலாளரையே அரசின் சார்பாக நீதிமன்றத்தில் நிற்கவைத்து ---போராட்ட காலங்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது என்றும் போராடிய ஊழியர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என்று எச்சரித்ததும் நீதிமன்ற மான்பை காட்டியது .
நீதிமன்றம் பல உன்னத தீர்ப்புகளை கடந்த காலங்களிலும் வழங்கியிருக்கிறது .இதை அரசு எவ்வளவு அளவிற்கு நிறைவேற்றியிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறது 
1972 .யில் உச்சநீதிமன்றம் GDS ஊழியர்களை சிவில் அந்தஸ்து பெற்ற ஊழியர்கள் தான்என்று  அறிவித்தது ....கருணைஅடிப்படையில் வேலை தாமதமின்றி வழங்கவேண்டும் ..உள்ளிட்ட பல உதாரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன .

                                     CATCHING DEMAND
  முன்னதாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய கோரியும் -இடைக்கால நிவாரணம் 20 சதம் வழங்ககோரியும்  சென்னை மெரினா சாலையில் அவர்கள் நடத்திய ஊர்வலம் மாபெரும் எழுச்சியை காட்டியது .இது போன்ற ஊழியர்களை ஈர்க்கும் கோரிக்கை(CATCHING  DEMAND) போராட்டத்தை வெற்றிபெற செய்யும் என்பதில் சந்தேகமில்லை .
 இதே வாய்ப்பு ஜூலை 2016 இல் மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனத்திற்கும் கிடைத்தது .தவறவிட்டது தலைமையின் குற்றமா ? நிலைமையின் குற்றமா ? அதனால் தான் இன்று மத்தியஅரசு தர்ணாவிற்கும் தடைவிதிக்க துடிக்கிறது --இன்னும் ஒரு உண்மை சொல்லவேண்டும் என்றால் ஜாக்டோ -ஜியோ அமைப்பில் இருக்கும் அனைவரும் பணியில் இருப்பவர்கள் தான் -ஓய்வு பெற்றவர்கள் சங்கத்தை ஆக்கிரமிக்கவும் இல்லை --அதிகாரம் செலுத்தவும் இல்லை 
போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment