...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, September 25, 2017

                                         புதிய பென்ஷன் 
புதிய பென்ஷன குறித்து 
பேராசிரியர் ஒருவர் -இவ்வாறு 
பீத்திக்கொண்டிருந்தார் 

சட்டங்கள் இல்லாமல்-சட்டென்று 
திட்டமாக வந்த பெருமை உண்டு 
நள்ளிரவு சபை நடத்தவில்லை 
மெஜாரிட்டி காட்டவில்லை -ஆனாலும் 
அரங்கேறியது இந்த அதிசயம்  

புத்தாண்டு 2004 இல் 
பொத்தென்று விழுந்தது 
பத்தாண்டுகளுக்கு மேலாகியும் 
புதிதாகவே இருக்கிறது .

உன்னை போல் அரசும் 
உன் கணக்கில் பணம் செலுத்தும் 
உன் பங்கு முதலாகும் 
உன்னை கூட முதலாளியாக்கும் 

அடுக்ககடுக்கான பேச்சுகளுக்கிடையே 
வெடுக்கென ஒருவன் எழுந்து 
புரியும் படி சொல்ல கேட்டான் 
அதற்கு அவர் நீயே கேள் என்றார் 

PFRDA என்றால் என்ன ?
உள்ளுர் சீட்டு கம்பெனிபோல் என்றார் 
TRESTEE BANK இன் வளர்ச்சி ?
தனியாருக்கு தாமிரபரணி போல் 
உறிஞ்ச கொடுக்கப்படும் 
NSDL ஏன் மும்பையில் ?
சூதாட தோதான இடம் 
வர்த்தக நகரம் தானே ..
முழுப்பணம் எப்பொழுது கிடைக்கும்?
நீ போன பிறகு ?
உத்தேச பென்ஷன் எவ்வளவு கிடைக்கும் ?
சீட்டாட்டத்தில் ரம்மி சேர்வதை பொறுத்து 

பதறிப்போன தோழன் 
ஐயா புரியும் படி 
ஒருவரியில் சொல்லுங்கள் என்றான் ..
யோசிக்காமலே பேராசிரியர் சொன்னார் 
ஒரு வரியில் சொல்வதென்றால் 
உனக்கு இனி பென்ஷன் கிடையாது .....
                           ----------------------- SK .ஜேக்கப் ராஜ் ----------------------------------

0 comments:

Post a Comment