...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 17, 2019

                          தபால் துறை தேர்வுகள் இனி அனைத்தும் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் --14.07.2019 அன்று இந்தி மற்றும் ஆங்கிலம் மூலம் நடைபெற்ற தேர்வு ரத்தாகிறது 
   ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முயற்சிகளுக்கு நன்றி !நன்றி ! 
 நேற்று மட்டுமே மாநிலங்களவை நான்குமுறை நமக்காக ஒத்திவைக்கப்பட்டது .இதேபோல் மத்தியஅரசு மற்ற துறைகளின் தேர்வினையும் மாநில மொழிகளில் நடத்திட புதிய கோரிக்கை வலுபெற்றுவருகிறது .
                             தமிழா இருப்பாய் -நெருப்பாய் 
 கடந்த  11.7.2019 வியாழன் அன்று  அஞ்சல் வாரியம்   தேர்வு என்பது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இனி நடைபெறும் என வெளியிட்டது .அதில் அறிவித்த இருமொழி என்பது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என்பதுமட்டுமே .இந்த பின்னணியில் 
 தமிழகத்தில் உள்ள மக்கள்  பிரதிநிதிகளிடம்  இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டு பாராளுமன்ற இருஅவைகளிலும் தமிழக சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானம் என பிரச்சினை சூடு பிடித்தது 
பின்னர் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கடுமையான கண்டனங்கள், அறிக்கைகள், 
 என ஒட்டுமொத்த தமிழினத்தின் குரலாக மாறியது .
இதற்கிடையே நேற்று ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டது .முன்னதாக நேற்று காலை மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் தொலை பேசியில் தொடர்புகொண்டு அஞ்சல் துறை தேர்வு சம்பந்தமான அரசாங்க அறிவிப்புகள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்மொழியில் உள்ள வினாத்தாள் உள்ளிட்டவைகளை  உடனே அனுப்பிவைத்திட கோரினார்கள் .நானும் நமது நண்பர்கள் பலரிடம் தொடர்புகொண்டு இறுதியாக அண்ணன் இல .சண்முகநாதன் முன்னாள் மாநில உதவி தலைவர் மற்றும் தோழர் ராமேஸ்வரன் தபால்காரர் திருநெல்வேலி மற்றும் சில நண்பர்கள் அனுப்பிவைத்த நகல்களை வாட்ஸாப்ப் யில் அனுப்பிவைத்தேன் 
இன்று காலை பத்திரிக்கை செய்தியில் குறிப்பாக தினமணி செய்தியை படித்தபோது இந்த புனித யுத்தத்தில் உதவிட நமக்கும் சிறு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து மகிழ்தேன் .
                             இதோ பத்திரிக்கை செய்தி 
அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன் விஜிலா  சத்தியானந்த்உள்ளிட்டோர் அவையின் மைய பகுதியில் அமளியில் ஈடுபட்டனர் .தேர்வு தொடர்பாக தபால்துறை வெளியிட்ட அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியி டப்பட்ட தேர்வு தாள் இவைகளை கையில் வைத்தவாறு அவைத்தனை தலைவர் ஹரிவன்ஷ் முன்பாக விஜிலா 
சத்தியானந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து கொண்டிருந்தார் .
                      நமது கோரிக்கைகளுக்காக குரல்கொடுத்து வெற்றியை பெற்று தந்த அனைத்து கட்சி MP களுக்கும் குறிப்பாக நம்முடைய கோட்ட மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து அஞ்சலக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நமக்கா உரிய இடத்தில உரிமைக்குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் மரியாதைக்குரிய 
மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                 

0 comments:

Post a Comment