...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, July 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                           அக்கௌன்டன்ட்களுக்கான LSG பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்தம் 40 தோழர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .நமது கோட்டத்தில் 
தோழியர் அனுராதா அவர்களும் தோழியர் முத்துலதா சுப்பிரமணியன் அவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .தோழியர்கள் இருவருக்கும் நமது நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .சுமார் 52 பதவிகளுக்குமேல் LSG ACCOUNTANT பதவிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தாலும் குறைவான ஊழியர்களே பதவி உயர்வு பெற்றுள்ளனர் .
                              நெல்லையில் அஞ்சலக தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் (போஸ்ட்மேன் TO எழுத்தர் ) எதிர்வரும் 08.07.2019 முதல் 31.07.2019 வரை நடைபெறுகிறது .இந்த வகுப்புகளை நமது கோட்டத்தில் ASP ஆக பணிபுரிந்து ஓய்வுபெற்ற தோழர் திரு .M.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது இல்லத்தில் (சமாதானபுரம் =பாளை ) வைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள் .மதுரை போன்ற வெளியூர்களுக்கு சென்று பயிற்சி வகுப்பிற்கு செல்ல முடியாத தோழர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .பயிற்சிக்கு செல்ல விரும்பும் தோழர்கள் 9442149339 மற்றும் 9486742990 என்ற எண்ணில் நேரிடையாக தொடர்புகொள்ளலாம் .தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment