விடுமுறைகளில் ஆதார் சேவை -தொடர்கிறது நம் முயற்சி
பாளையம்கோட்டையில் பணிபுரியும் ஊழியர்களின் குறிப்பாக பெண் ஊழியர்களின் நிம்மதியை குலைக்கும் ஆதார் பணி ஞாயிறன்றும் நடைபெறும் என்ற உத்தரவு இன்னும் தொடர்கிறது மாநில சங்கம் வரை நாம் பிரச்சினையை எடுத்து சென்றிருக்கிறோம் .இதற்கிடையில் கடந்த 11.07.2019 அன்று மதுரை மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கோட்ட அதிகாரிகளின் கூட்ட நடவடிக்கை குறிப்புகள் வந்துள்ளன .அதில் ஆதார் சேவைகுறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் கீழே தரப்பட்டுள்ளன .
AADHAAR -Wide publicity should be given in the public for the available service at pos toffices.Instruction "Aadhaar Enrolement and updation work are done here" should be displayed in all Aadhaar centres 5 Aadhaar enrolements and 16 updations are to be done per day per centres
1.ஞாயிற்று கிழமைகளில் ஆதார் சேவைக்குறித்து மாநிலநிர்வாகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது
2.ஞாயிற்றுக்கிழமைகளில் ஊழியர்களை கட்டாயப்படுத்தி பணிக்கு வர சொல்வது ஒருவித Harassment
3. ஆதார் திருத்தத்தில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் அதன் இழப்பை ஊழியர்களின் தலையில் தான் நிர்வாகம் திணிக்கும்
4.பாளையம்கோட்டை போன்ற பெரிய கட்டிடத்தில் ஒரு ஒதுக்கு புறத்தில் பெண் ஊழியர்கள் தனியாக பணியாற்ற நிர்பந்திப்பது ஏற்புடையதல்ல .பாதுபாப்பும் இல்லை
நேற்றே தோழியர்கள் நமது SSP அவர்களிடம் நேரிடையாகவே சென்று முறையிடவேண்டும் என்ற நிலைக்கு வந்துள்ளனர் .இந்த நிலையில் நமது கோட்ட சங்கமும் அனைத்து சேனல்களையும் பயன்படுத்திவிட்டது .செயற்குழு தீர்மானம் -மண்டல மற்றும் மாநில செயலர்களுக்கு பிரச்சினையை தீர்திடக்கோரி கடிதங்கள் தொலைபேசி வேண்டுதல்கள் என நம் முயற்சியும் நடந்துகொண்டிருக்கிறது .இந்நிலையில் நமது பகுதி மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் கவனத்திற்கும் இதை கொண்டுசெல்ல முடிவெடுத்திருக்கிறோம் .
நமது செயற்குழு தீர்மானத்திற்கு நமது கோட்ட அலுவகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான பதில் வரும்வரை தோழர்கள் /தோழியர்கள் பொறுமைகாத்திட வேண்டுகிறோம் .
தலைமை அஞ்சலகங்களில் கணக்கு பிரிவில் CSI தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு ஊழியர்களின் salary மற்றும் பிற பண பட்டுவாடா இனங்கள் சென்னையில் உள்ள ஆடிட் அலுவலகம் மூலமாக credit செய்யப்படுகிறது. இதனால் accounts branch ல் வேலை குறைந்துள்ளது என்று நிர்வாகம் ஆள் குறைப்பு செய்ய மணிலா நிர்வாகம் முனைப்பு காட்டுகிறது ஆனால் உண்மை நிலை வேறாக உள்ளது
ஒவ்வொரு மாதமும் மாஸ்டர் டேட்டா வில் மேற்கொள்ள வேண்டிய correction, addition மற்றும் deletion விபரங்களை தலைமை அஞ்சலக கணக்கு பிரிவில் இருந்து ஆடிட் office க்கு அனுப்புகிறார்கள். இவைகளை audit office ல் upload செய்தபின் மீண்டும் தலைமை அஞ்சலக கணக்கு பிரிவுக்கு அனுப்பி சரி பார்க்க சொல்கிறார்கள்.
Audit officeல் செய்த வேலையை அஞ்சலகத்தில் சரி பார்க்க வேண்டியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 23 தேதியிலிருந்து simulation, correction, confirmation அண்ட் live run என்று HO கணக்கு பிரிவு ஊழியர்கள் அவதிக்குள்ளாக்க படுகிறார்கள்.
இதற்கு பழைய நடைமுறை படி HO விலேயே drawal செய்து credit கொடுத்து விடலாம். Salary bill லை audit office க்கு மெயில் செய்து upload செய்து கொள்ள செய்யலாம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை
0 comments:
Post a Comment