அன்பார்ந்த தோழர்களே !
மெகா மேளா --12 .07.2019
நமது கோட்டத்தில் வருகிற 12.07.2019 அன்று மெகா மேளா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதில் நமது பெரும்மதிப்பிற்குரிய CPMG அவர்களும் மற்றும் PMG அவர்களும் கலந்துகொள்கிறார்கள் .அதை முன்னிட்டு ஒவ்வொரு உபகோட்ட அதிகாரிகளும் ஒவ்வொரு இலக்கை நிர்ணயித்து சுற்றறிக்கைகள் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள் .இதற்காக கேன்வாஸ் செய்வதற்காக MTS முதல் PA வரை களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள் .நமது கடமையும் கூடுதல் கணக்குகளை தொடங்க உதவுவது தான் .இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .ஆனால் சில உப கோட்டங்களில் அதிகாரிகள் நடந்துகொள்வது மிகுந்த கவலையளிக்கிறது .குறிப்பாக OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களுக்கு அதிகப்படியான நெருக்கடிகள் -நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையாவிட்டால் OFFICIATING வாய்ப்பு கிடையாது என்றெல்லாம் அன்புக்கட்டளை பிறப்பிப்பதாக OFFICIATING பார்க்கின்ற தோழர்கள் நம்மிடம் சொல்லிவருகிறார்கள் .
தன் சொந்த ஊரைவிட்டு கொஞ்சம் அதிகமாக கிடைக்கும் ஊதியத்திற்காக OFFICIATING பார்க்கின்ற ஊழியர்களின் மேல் மேலும் மேலும் சுமைகளை ஏற்றாதீர்கள் .என்று கேட்டுக்கொள்கிறோம் இதைவிட மேலாக இதில் OUTSIDER களும் தப்பவில்லை என்பது கொடுமையிலும் கொடுமை ..OFFCIATING பார்க்கின்ற தோழர்கள் என்ன அடிமைகளா ? இந்த நிலை தொடர்ந்தால் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடமும் மாநில சங்கங்கள் மூலம் மாநில நிர்வாக கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டிய நிலை உருவாகும் .
DIVISIONAL HEAD MEETING
வருகிற 11..07.2019 தென்மண்டல கோட்ட அதிகாரிகளின் கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது .இந்த கூட்டத்தில் நமது CPMG அவர்களும் கலந்துகொள்கிறார்கள் .
குரூப் B அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
அகிலஇந்திய அளவில் 76 ASP களுக்கு SP ஆக பதவி உயர்வு கிடைத்துள்ளது .தமிழகத்தில் 5 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் .அதில் குறிப்பாக நமது கோட்டத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்து NFPE கோட்ட பொருளாளராக பொறுப்பு வகித்த தோழர் சொர்ணம் அவர்களும் நமது கோட்டத்தில் ASPஆக பணியாற்றிய தோழர் உதயசிங் ஆகியோர் உள்ளனர் .இவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்
திருமண வரவேற்பு விழா
GDS சங்கத்தின் முன்னணி தோழர் SJS அமீர் அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா 10.07.2019 அன்று நண்பகல் சுத்தமல்லியில் நடைபெறுகிறது .
மணமக்கள்
A.அஜ்மல் -K.தௌலத் ஷபியா
மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்
தோழமையுடன் நெல்லை NFPE
0 comments:
Post a Comment