அன்பார்ந்த தோழர்களே !
போஸ்ட்மாஸ்டர் கிரேடு -பொது பிரிவோடு இணைப்பு லாபம் யாருக்கு ? சாபம் யாருக்கு ?
அஞ்சல் துறையில் வந்துள்ள /வரப்போகும் புதிய திட்டங்களை சிறப்பாகசெய்துமுடித்திட அதுவும் புதிய தொழில் நுட்பங்களில் இன்னும் அதிகமாக பணியாற்றிட -நமது வணிகத்தை பல்வேறு போட்டிகளுக்கு இடையே கொண்டுசென்றிட ( professionally qualified, trained and meritorious officials head the key Post Offices ) தகுதியும் திறமையும் வாய்ந்த ஊழியர்களை தெரிந்தெடுத்து அவர்களை அஞ்சலக அதிகாரியாக நியமித்திடவேண்டும் என்ற அறிவிப்போடு அன்றைய இலாகா முதல்வர் திருமதி ராதிகா துரைசாமி அவர்கள் இந்த திட்டத்தை 22.11.2010 அன்று அறிவித்தார்கள் .அதன்படி 2097 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு I (தமிழகத்தில் 270) என்றும் 511 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு II (தமிழகத்தில் 511) என்றும் 495 பதவிகள் போஸ்ட்மாஸ்டர் கிரேடு III (தமிழகத்தில் 495) என்றும் 116 பதவிகள் சீனியர் போஸ்ட்மாஸ்டர் (குரூப் B எனவும் அடையாளம்காணப்பட்டு அதற்கான தேர்வுகள் நடந்து 31 நாட்கள் PTC யில் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு போஸ்ட்மாஸ்டர் கிரேடு என்றால் தனியாக தெரியவேண்டும் என்று அஞ்சல் ஊழியர்கள் மத்தியில் ஒரு பெரிய இடைவெளியை அஞ்சல் துறை ஏற்படுத்தியது .அதன் தொடர்ச்சியாக பழைய SUPERVISOR சங்கத்தில் அவர்கள் சேரவும் அமைப்பு ரீதியாக போராட்ட இயக்கங்களை மழுங்கடிக்கவும் முயற்சிகள் ஆங்காங்கே அரங்கேறவும் தொடங்கின .இந்த நிலையில் போஸ்ட்மாஸ்டர் கிரேடு -பொது பிரிவோடு இணைக்கும் வரைவு திட்டத்தை அஞ்சல் வாரியம் முன்னெடுத்து அதில் எல்லா சங்கங்களின் கருத்துக்களை கேட்டு இன்று இனைத்துவிட்டன .
இன்னும் அதில் சீனியாரிட்டி நிர்ணயம் குறித்து விளக்கங்கள் முறையாக அறிவிக்கப்படவில்லை ..இருந்தாலும் போஸ்ட்மாஸ்டர் கிரேடு ஊழியர்கள் பொதுப்பிரிவு ஊழியர்களை காட்டிலும் சீனியாரிட்டி முந்திச்செல்லவே வாய்ப்புகள் உள்ளன .நமது சம்மேளன கோரிக்கைகளான ONE -TIME MEASURE அடிப்படையில் HSG II &HSG I பதவிகளை நிரப்பிடவேண்டும் என்ற நமது கோரிக்கை குறித்து எந்த பதிலும் இல்லாமல் இணைப்பு அரங்கேறிவிட்டது .நாம் ஏற்கனவே சொன்னபடி பழைய FTP யின் நிலைதான் போஸ்ட்மாஸ்டர் கிரேடு க்கும் ஏற்படும் என்பது இன்று நிருபனமாகிவிட்டது .இனிமேல் HSG II பதவிகள் GRADE II ஊழியர்கள் பணியாற்றுவார்கள் .HSG I பதவிகளில் GRADE III ஊழியர்கள் சீனியர்களாக இருப்பார்கள் .
அஞ்சல் வாரியத்தின் இந்த தன்னிச்சையான முடிவுகளால் போஸ்ட்மேன்&MTS நியமனவிதிகளில் திருத்தம் LSG விதிகளில் திருத்தம் HSG II &HSG I நியமன விதிகளில் திருத்தம் என திருத்தத்திற்கு மேல் திருத்தங்களை அஞ்சல் வாரியம் அறிவித்த பிறகும் ஊழியர் பக்கங்களில் இருந்து பெரியஅளவில் விவாதங்களையோ /எதிர் ப்பையோ பார்க்கமுடியவில்லை .
குறிப்பாக LSG நியமனவிதிகளில் 50 சதம் தேர்வுமுறை அறிமுகம் என்ற திட்டத்தில் 50 யை 20 சதமாக மாற்றவேண்டும் என்ற நமது கோரிக்கை என்னானது ? FTP அறிமுகத்திலும் 33.34% சீனியாரிட்டி 66.66% மெரிட் என 2003 யில் அறிவிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட்டதும் நினைவிருக்கும் .
இன்று இதுபோல் நித்தம் ஒரு திட்டம் நித்தம் ஒரு சட்டம் என ஊழியர் தரப்பு கருத்துக்களை கேட்பதுபோல் கேட்டுவிட்டு அஞ்சல் வாரியம் தான் நினைத்ததை நடத்திக்கொண்டிருக்கும் மிக அசாதாரண சூழலில் நாம் பணியாற்றி கொண்டிருக்கிறோம் .
அஞ்சல் மூன்றின் கோரிக்கைகளை முன்னெடுத்து அஞ்சல் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்வது என்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் கோரிக்கைகளில் முன்னேற்றம் இல்லையென்றால் அஞ்சல் மூன்று மட்டுமாவது தனியாக இயக்கங்களை முன்னெடுப்பது என்ற ஜான்சி CWC முடிவை விரைவு படுத்தவேண்டும் என்பதே ஊழியர்களின் எதிர்பார்ப்புகள் .
தோழமையுடன் நெல்லை NFPE

0 comments:
Post a Comment