...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 5, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                      டெபுடேஷன் -புதுப்புது அர்த்தங்கள் 
                             டெபுடேஷன் குறித்து நேற்றும் ஒரு வழிகாட்டுதல் உத்தரவு கோட்ட அலுவலகத்தில் இருந்து வெளியி டப்பட்டுள்ளது .கிட்டத்தட்ட இது ஐந்தாவது விளக்க கடிதம் .நமது தோழர்கள் கூட இது முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை என்று தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தார்கள் .நமது தோழர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வதெல்லாம் தலைமை/துணை  அஞ்சலகங்களில் TURN ரெஜிஸ்ட்ர் எந்தநேரமும் எல்லாரும் பார்வையிடலாம் .இதில் ஏதாவது வி திமீறல் இருந்தால்  சம்பந்தப்பட்ட போஸ்ட்மாஸ்டரிடம் முறையிட்டுவிட்டு உடனே கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறோம் ..ஒரு டெபுடேஷன் முடித்துவிட்டு ஸ்டேஷன்க்கு வந்தபிறகுதான் அந்த ஊழியருக்கு TURN அடிப்படையில் டெபுடேஷன் அனுப்பவேண்டும் என்று முந்தைய உத்தரவுகள் தெரிவித்திருந்தாலும் கோட்ட அலுவலகத்தில் இருந்தே DIRECTION போவது வருத்தமாகத்தான் இருக்கிறது .
                                   கோட்ட அலுவலகத்தில் மீண்டும் LRPA --
பாளையம்கோட்டையில் இருந்து மீண்டும் ஒரு  LRPA   கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் .ஏற்கனவே பாளையம்கோட்டையில் டெபுடேஷன் விஷயத்தில் தொலைதூரங்களுக்கு தொடர்ந்து சென்று வரும் ஊழியர்களுக்கு மேலும் இது பேரதிர்ச்சியாக இருக்கிறது .இதுகுறித்து கோட்ட அலுவலகத்தில் கேட்டால் தற்சமயம் கோட்ட அலுவலகத்திற்கு பணிபுரிய யாரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே விருப்பமுள்ள தோழர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தங்கள் விருப்பமனுக்களை அனுப்புவிட்டு LRPA வை மீண்டும் பாளையம்கோட்டைக்கு திருப்பிஅனுப்ப நிர்வாகத்திற்கு உதவவேண்டும் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment