...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 9, 2019

                அடுத்தடுத்து வந்த அதிரடி உத்தரவுகள் --உண்மையாகவே தேர்வுக்கு அனுமதி பெற்றது     யார் ?அதை தடுத்தது யார் ?
                               கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடக மாநில CPMG அவர்கள் GDS TO PA தேர்விற்கு சமீபத்தில் தேர்வான போஸ்ட்மேன் /MTS ஊழியர்கள் அந்தந்த       VACANCY  வருடத்தில்  5 ஆண்டுகள் GDS ஆக பணி முடித்திருந்தால் அவர்களை நேரடியாக PA தேர்விற்கு அனுமதிக்கலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது .இந்த செய்தியை முதன்முதலில் வெளிகொண்டுவந்தது கலங்கரை விளக்கம் ஆசிரியர் திரு .மாலிக் அவர்கள் தான் .இதோ அவரது பதிவு 
GDS தோழர்களுக்கு ஒரு மகிழ்ச்சி யான செய்தி கேள்விப்பட்டேன். தற்போது MTS,postmanஆக  பணியில் இருக்கும் ஏற்கனவே GDS ஆக பணிபுரிந்த 2015,2016,2017,2018 ஆண்டுகளில் 5 ஆண்டு பணி முடித்திருந்தால் வருகிற 14-7-2019 அன்று நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று மெயில் வந்ததாகக் கேள்விப்படுகிறேன். தயவுசெய்து R.O,C.Oஉள்ள இடங்களில் பணிபுரியும் தொழிற்சங்க தோழர்கள் இதில் உதவி செய்யவும்
  இதை தொடர்ந்து அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது .தேர்விற்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் எப்படி அத்தனை நடைமுறைகளும் கடைபிடிக்கப்பட்டு தேர்வு எழுதமுடியும் என்ற நிலையில் திங்கள் கிழமை நமது NFPE சம்மேளன நிர்வாகிகள் நமது CPMG யை சந்தித்து நல்லமுடிவு விரைவில் வரும் என்ற நல்லசெய்தியை பதிவிட்டனர் .அதன் படியே தமிழக நிர்வாகத்திடம் இருந்து உடனடி  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .
 இந்த பின்னணியில் நமது கோட்ட அலுவலகத்தில் இருந்தும் நாளை காலை 09.30 மணிக்குள் அனைத்து விண்ணப்பங்களும் வந்துசேரவேண்டும் என்றும் அது மாலை நாலு மணிக்குள் RO வில் இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது .
             ஆனாலும் குறைவான VACANCY குறைவான நாட்கள் உள்ள நிலையில் தகுதியிருந்தும் பல தோழர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்ற எதார்த்தத்தை பார்க்கமுடிந்தது .
            இதற்கிடையில் தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்றும் GDS கான VACANCY எப்படி இலாகா ஊழியர்களுக்கு மாற்றமுடியும் என்ற கருத்துக்களும்/எதிர்ப்புகளும்  இயக்குனரகத்தில் எழுந்தது .
                  இறுதியாக மாலை ஆறுமணிகெல்லாம் காலையில் பூத்து மாலையில் வாடும் மலர் போல் இந்த உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
                       துக்ளக் தர்பார் கதைகளிலும் நாடகத்திலும் மட்டுமல்ல இன்றும் நிஜத்தில் தொடர்கிறது என்பதை நேற்றைய குளறுபடி உத்தரவுகள் உணர்த்தியது .
                            அதிகாரவர்க்கம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மட்டுமே செய்தியாக பிரசுரிக்கும் போக்கு மாற்றப்பட்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட எங்கள் ஊழியர்களுக்கு ஆதரவாகவும் நிர்வாக குளறுபடிகளை கண்டித்து நாம் பழைய நாட்களை போல் ஒரு கண்டன ஆர்பாட்டத்தையாவது நடத்தியிருக்க வேண்டும் .நிர்வாக தவறுகளை துணிச்சலாக தட்டிக்கேட்காதவரை இதுபோன்ற துக்ளக் ராஜ்ஜியம் தொடரத்தான் செய்யும் .
  நன்றி தோழமையுடன் NELLAI NFPE 

2 comments:

  1. ஏற்கனவே 2015 முதல் 2018 வரை GDS லிருந்து MTS/POSTMAN ஆனவர்களுக்கு வீண்டும் இந்த GDS to PA exam க்கு வாய்ப்பு கொடுப்பது சரியில்லை, அவர்கள் Department க்குள் வந்துவிட்டவர்கள், அவர்களுக்கு திரும்பவும் வாய்ப்பு கொடுப்பது தற்போது Gds இல் இருந்து PA எழுதுபவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் இதனால் குறைகிறது. எப்படியோ.. GDS முன்னுக்கு வரக்கூடாது என சில சங்கங்கள் உறுதியாக இருக்கின்றனர்.🙏, ஏற்கனவே தேர்வு எழுதி முதல் இடங்களில் வந்தவர்கள் இந்த தேர்வு எழுதினாலும் முதலில் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது, தற்போது Gds ஆக இருப்பவர்கள் இன்னும் அப்படியே இருக்க வேண்டுமா.

    ReplyDelete
  2. We also worked as gds on that year. We miss the opportunity. Blame the department not to us

    ReplyDelete