கிருஷ்ணகிரி கோட்டத்தலைவர் தோழர் V.ராமமூர்த்தி அவர்களின் பணிநிறைவு பாராட்டுவிழா 07.07.2019 அன்று ஓசூரில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது .நிகழ்ச்சிக்கு தோழர் பாபுசங்கர் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .நண்பர் சிவசங்கரன் முன்னிலை ஏற்றார்கள் .விழாவில் தருமபுரி கோட்ட முன்னாள் செயலர்கள் தோழர் அறிவழகன் .ஏழுமலை கிருஷ்ணகிரி கோட்ட அஞ்சல் நான்கின் செயலர் தோழர் மணி SC /ST நலச்சங்க செயலர் ரமணி FNPO கோட்ட செயலர் தோழர் மோகன்ராவ் மற்றும் GDS கோட்ட சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் .கிருஷ்ணகிரி கோட்ட சங்கத்தின் சார்பாக தோழர் ராமமூர்த்தி அவர்களுக்கு கணையாழி பரிசளிக்கப்பட்டது .விழாவில் கிருஷ்ணகிரி கோட்டசெயலர் தோழர் செந்தில் குமார் பொருளாளர் சத்திய பூங்குன்றம் உள்ளிட்ட இளைய தோழர்கள் எழுச்சியோடு பங்கேற்றனர் .நிறைவு உரையாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் வாழ்த்தி பேசியவுடன் ஏற்புரை தலைவர் நிகழ்த்தியபின் விழா இனிதே நிறைவுற்றது .2006-2007 ஆண்டில் நான் கிருஷ்ணகிரியில் பணியாற்றியபோது என்னுடன் நட்பு பாராட்டிய அனேக தோழர்களை சந்தித்து மகிழ்ந்திட வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த கிருஷ்ணகிரி கோட்ட தோழர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்
0 comments:
Post a Comment