...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 30, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                     24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போஸ்டல் JCA அழைப்பினை ஏற்று நேற்று(29.07.2019)  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .ஆர்ப்பாட்டத்திற்கு RMS -R 3 உதவி செயலர் தோழர் பழனி சுப்பிரமணியம் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர் S .ராஜேந்திரன் (FNPO ) தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஆகியோர் பேசினார்கள் .தோழர் SK .பாட்சா மாநிலஉதவி தலைவர் நன்றிகூற ஆர்ப்பாட்டம் முடிவுற்றது .மிக குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்களுக்கும் குறிப்பாக SBCO மற்றும் SRO ஊழியர்களுக்கும் கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .மேலும் நமது ஆர்ப்பாட்ட செய்திகளை வெளியிட்ட மாலைமலர் தினகரன் தினமலர் தினமணி மற்றும் தினத்தந்தி பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment