...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 19, 2019

                          NFPE -அம்பாசமுத்திரம் கிளை மாநாடு வெல்லட்டும் 
அம்பாசமுத்திரம் அஞ்சல் மூன்றின் கிளை மாநாடு வருகிற 21.07.2019 அன்று அம்பை தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது .மாநாடு சிறக்க நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது 
                           ஞாயிறன்று ஆதார் பணிகளை மேலும் மேலும் விரிவுபடுத்தநினைக்கும் மாநில நிர்வாகத்தின் முடிவினை கண்டித்து நமது மாநிலச்சங்கம் மீண்டும் CPMG அவர்களுக்கு 17.07.2019 அன்று கடிதம் எழுதியுள்ளது .விடுமுறைநாட்களில் ஊழியர்களை பணிக்கு கட்டாயப்படுத்தி அழைப்பது ஒருவித துன்புறுத்தல் தான் என மாநிலச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது .இதற்காக மாநிலம் தழுவிய இயக்கங்களை நடத்திட நெல்லை கோட்ட  சங்கம் மாநிலச்சங்கத்தை கேட்டுக்கொள்கிறது 
                                     இந்தநிலை தொடரக்கூடாது 
   மனஉளைச்சல் வேலைப்பளு ஓய்வின்மை என அடுத்தடுத்த தாக்குதல்களினால் நாம் நமது கோட்டத்தில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மூன்று தோழர்களை இழந்துநிற்கின்றோம் .
  அன்று நான்குனேரி ஞான சேகரன் _ அடுத்து களக்காடு கண்ணன் சமீபத்தில் தோழர் கோபாலகிருஷ்ணன் இந்த பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் ..நம்மால் ஒரு மலர் மாலையை தவிர வேறன்ன அந்த குடும்பங்களுக்கு செய்திடமுடிந்தது !
                                       ஆட்பற்றாக்குறை -வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் மேலும் ஆட்களை எடுப்பது அல்லது குறைப்பது /இரவு எட்டுமணிவரை அலுவகத்தில் காத்துக்கிடப்பது என்ற அவலநிலைகள் போக்கப்படவேண்டும்  சம்பந்தப்பட்ட ஊழியர்கள் தங்களது குறைகளை எழுத்துப்பூர்வமாக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும் அதன் தகவல்களை கோட்ட சங்கத்திற்கும் தெரிவித்திட கேட்டுக்கொள்கிறோம் .தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல அவர்கள் இந்த மண்ணின் உயிர்சத்து என்பதனை உணர்ந்துகொள்வோம் .
                                               நிமிரும் பொழுதெல்லாம் 
                                              நசுக்க படுவதற்கு 
                                              தொழிலாளி சாக்கடை புழுக்கள் அல்ல 
                                             சரித்திர சக்கரங்கள் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 

0 comments:

Post a Comment