...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, July 16, 2019

                                          ஆதார் எனும் புது அவதார் 
 ஆதார் பணிகளை அனைத்து அஞ்சலகங்களிலும் நாம் பார்த்துக்கொண்டிருந்தாலும் விடுமுறை நாட்களிலும் அந்த பணியினை பார்த்திடவேண்டும் என்று நமது கோட்ட நிர்வாக உத்தரவை எதிர்த்து நமது ஊழியர்கள் கொதித்து போயுள்ளனர் என்பது உண்மை .ஏற்கனவே வேலைப்பளு எனும் கொடுமையில் ஆலையில் சிக்கிய கரும்பாக அஞ்சல் ஊழியர்கள் சிக்கி வெறும் சக்கையாகத்தான் வார இறுதியில் வீடு  திரும்புகிறார்கள் .அவர்களையம் விடுமுறைநாட்களில் ஆதார் பணிக்காக அலுவலகம் வர சொல்வதை ஏற்கமுடியாது என்று ஆணித்தரமாக கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் நிர்வாகத்திடம் தெரிவித்தோம் .நிர்வாகமோ எதிர்கேள்வியாக நீங்கள் மட்டும் தான் எதிர்க்கீறீர்கள் .மற்ற கோட்டங்களில் இந்த பணி நடைபெறுகிறது என சிலகோட்டங்களின் பெயர்களை சொன்னார்கள் .நாம் விசாரித்து பார்த்ததில் அந்த சிலகோட்டங்களில் ஆதார் பணிகள் ஞாயிறன்றும்  நடைபெறுகிறது .நமது நிலைப்பாடும் விருப்பமுள்ள தோழர்கள் அவர்களுக்கு c-off கிடைக்கும் என்பதற்காக பணிக்கு வந்தால் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கட்டாயமாக ஊழியர்களை விடுமுறை நாட்களில்  வரவழைக்கக்கூடாது என்ற கொள்கை ரீதியில் நாம் உறுதியாய் இருக்கிறோம் என்பதனை சுட்டிக்காட்டினோம் .
 ஆதார் பணிக்குறித்து சென்னை மண்டல நிர்வாக கருத்துக்களை பாரீர் 
ஆதார் பணிகளில் MTS மற்றும் ஸ்கெல்டன் யில் உள்ள GDS ஊழியர்களை பணியமர்த்த அனுமதிக்கவேண்டும் என்ற நமது மாநில சங்க கடிதத்திற்கு சென்னை மண்டல PMG அவர்கள் தனது 03.06.2019 தேதியிட்ட கடிதத்தில் இந்த பணிகளை செய்வதற்கு  ஸ்கெல்டன் யில் உள்ள GDSக்கு வழங்குகின்ற புதிய TRCA  ஆதார் மூலம் நமக்கு கிடைப்பதில்லை  என்றும் இருக்கின்ற ஊழியர்களை வைத்தே ஆதார் பணி செய்யவும்  ஸ்கெல்டன் யில் உள்ள GDS  பதவிகளை தேவையான அலுவலகங்களுக்கு வழங்கலாம் என்றும் CIFA அறிவுறுத்தியுள்ளதாக பதில்வந்துள்ளது .சென்னையில் GDS TRCA  கொடுத்துக்கூட ஆதார் பணி செய்யமுடியாது என நிர்வாகம் மறுக்கும் போது எப்படி இரண்டு PA ஒரு MTS ஊதியம் கொடுத்து விடுமுறைநாட்களில் ஆதார் பணி செய்து நாம் என்ன வருமானத்தை இலாகாவிற்கு கொடுக்கப்போகிறோம் .இந்த உண்மையை மாநில சங்கம் CPMG அவர்களின் கவனத்திற்குகொண்டுசென்று விடுமுறையில் ஊழியர்களை பணிக்கு  அழைப்பது இலாகாவிற்கு நட்டமே தவிர லாபம் அல்ல என எடுத்துச்சொல்லி இந்த உத்தரவை தமிழகமெங்கும் ரத்துசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .
தோழமையுடன் நெல்லை NFPE 

0 comments:

Post a Comment