...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 20, 2019

                                                முக்கிய செய்திகள் 
ஆதார் பணி பரபரப்பு முடிவடையாத நிலையில் மீண்டும் ஒரு  உத்தரவு நமது கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது .அதன்படி திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் MPCM கவுண்டர் மேலும் ஒருமணிநேரம் நீட்டிக்க வேண்டுமாம் .அதாவது மாலை 3.30 மணிவரை இருந்த வேலைநேரம் மாலை 4.30 வரை என மாற்றப்பட்டுள்ளது .திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் ஒரு கவுண்டர் மட்டும் தான் .மாலை 5.10 மணிக்கு மெயில் DESPATCH செய்யவேண்டும் .4.30 வரை புக்கிங் முடித்துவிட்டு BPC  உட்பட இரண்டு கவுண்டர் தபால்களை 30 நிமிடத்தில் DESPATCH செய்திடமுடியுமா ? ஏற்கனவே கடந்த 11.11.2017 யில் மண்டல உத்தரவு என வேலைநேரங்கள் அதிகப்படுத்தப்பட்டதும் பின்னர் அந்த உத்தரவு ரத்துசெய்யப்பதும் நினைவிருக்கும் .இன்று CO உத்தரவு என்கிறார்கள் .ஏற்கனவே பாளையம்கோட்டையில் இரவு 8 மணிவரை இருக்கிறது .பக்கத்தில் RMS யில் 24 மணிநேரமும் புக்கிங் இருக்கிறது .
-                                 ---------------------------------------------------------
  நமது கோட்டத்தில் உள்ள அனைத்து காசாளர் பதவிகளை நிரப்பிடவேண்டும் என்ற நமது தொடர் வேண்டுகோளுக்கிணங்க முதற்கட்டமாக தலைமை அஞ்சலகங்களில் உள்ள காசாளர் பதவிகளுக்கு விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன .அதேபோல் கோட்ட அலுவலகத்தில் OA மற்றும் அக்கௌன்டன்ட் பதவிகளுக்கும் விருப்பமனுக்கள் கோரப்பட்டுள்ளன .
                                  -------------------------------------------
                              இன்று மாலை திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் நடைபெறும் நமது கோட்ட சங்க செயற்குழுவிற்கு செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமல்ல நமது உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளவும் கேட்டுக்கொள்கிறோம் .
                                                           மரங்கள் ஓய்வை விரும்பினாலும் 
                                                            காற்று அதை அனுமதிப்பதில்லை 
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை 







0 comments:

Post a Comment