...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, July 12, 2019

அன்பார்ந்த தோழர்களே !
  மாநில சங்க பத்திரிக்கையான தமிழக அஞ்சல் முழக்கம் இதழில் இருந்து ......
                                LSG நியமன விதிகளில் மாற்றம் 
LSG நியமன விதிகளில் மாற்றம் கொண்டுவர அஞ்சல் வாரியம் 10.06.2019 அன்று ஒரு வரைவு திட்டத்தை வெளியிட்டுள்ளது .அதன்படி 50 சதம் சீனியாரிட்டி 50 சதம் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படும் .சீனியாரிட்டி 5 வருட சேவை தேர்விற்கு 3 வருடசேவை என அதில் கோரப்பட்டுள்ளது .இதில் மாற்றங்களை கோரி நமது மதியசங்கம் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளது .
                                   HSG I மற்றும் HSG II விதிகளில் திருத்தம் கொண்டுவர 03.01.2019 அன்று அஞ்சல் வாரியம் ஒரு PROPOSAL யை தயாரித்துள்ளது .இதிலும் 100 சதம் சீனியாரிட்டி முறையில் நிரப்பப்படாத பதவிகளை LDCE தேர்வு மூலம் நிரப்பப்படும் .இதை மாற்றிடக்கோரியும் நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது 
                                             தபால்காரர் நியமன விதிகளில் மாற்றம் 
            தபால்காரர் /MTS நியமன விதிகளிலும் 23.03.2019 தேதியிட்ட ஆணைமூலம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .20.09.2018 முன்னர் பணி நியமனம் பெற்ற GDS தோழர்கள் தபால்காரர் தேர்வெழுத 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும் .
                                      காசாளர் படி 01.07.2007 முதல் உயர்த்தப்பட்டுள்ளதால் TREASURY ALLOWANCE பெற்றிட பழைய காலங்களில் ஜூலை 2017 யில்TREASURY பணியாற்றிய தோழர்கள் (LSG உட்பட ) விண்ணப்பிக்கலாம் .
                                  போஸ்ட்மேன் TO PA தேர்வு எழுத எட்டுமுறை வாய்ப்பு என்பது நீக்கப்பட்டு இனி எத்தனை முறை என்றாலும் தேர்வு எழுதலாம் .
                                 மாநிலச்சங்க பத்திரிக்கை   முதற்கட்டமாக நமது கோட்டத்திற்கு 50 பிரதிகள் வந்தன .இதழுக்கான சந்தா செலுத்திய அனைவருக்கும் பத்திரிக்கை அனுப்பட்டுவிட்டது .யாருக்காவது விடுபட்டிருந்தால் கோட்ட செயலரை அனுகவும் .மேலும் இதழ் தேவைப்படுவோரும் கோட்ட செயலரை தொடர்புகொள்ளவும் ..
 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                    
                      

0 comments:

Post a Comment