அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
10.03.2020 ஆர்ப்பாட்டம்
தமிழகமெங்கும் ஊழியர்களை டார்கெட் என்ற பெயரில் அச்சுறுத்தும் நடவடிக்கைகளை கண்டித்து மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்திட அறைகூவல் வந்துள்ளது .ஒவ்வொரு அதிகாரிகளும் அவரவர் எல்கைக்குள் அத்துமீறலை அரங்கேற்றிவருகின்றனர் .கோட்ட அதிகாரிகளை பொறுத்தவரை APAR யில் கைவைப்பேன் என்கிறாரார்களாம் .உபகோட்ட அதிகாரிகளை பொறுத்தவரை GDS ஊழியர்க்ளுக்கு OFFICIATING வாய்ப்பு கொடுக்கமாட்டேன் என்பதும் PAID லீவு வழங்க மறுகிறார்களாம் !இதைவிட படுபாதகமாக எத்தனையோ வருடங்கள் அஞ்சலகத்தை நம்பியே இருந்த OUTSIDER களை டூட்டி கொடுக்காமல் வயிற்றில் அடிப்பது என தொடர்கதையாகி வருகின்றன .நமது கோட்டத்திலும் கூட இந்த மாதம் கணக்குகளை பிடிக்க இலக்குகளை நிர்ணயித்து சுற்றறிக்கைகள் வந்துள்ளன .தினம் தினம் மேளா என்ற பெயரில் துன்புறுத்தல்கள் தபால்கார்களுக்கு IPPB கணக்குகளை பிடித்துக்கொடுக்கவேண்டும் என எச்சரிக்கைகள் SPM ஊழியர்களுக்கு NET ACCOUNT கணக்குகளை காட்டி உருட்டல்கள் இவைகளை தடுத்திட வேண்டிய சூழலில் நாம் உள்ளோம் .
NET கணக்குகள் குறைய யார் காரணம் ?
கடந்த சிலவருடங்களுக்கு முன் என் உபகோட்டத்தில் பல்லாயிரம் கணக்குகள் .ஒரே இரவில் என் அலுவலகத்தில் ஆயிரம் கணக்குகள் என குறைந்த DENOMINATION கணக்குகளை தொடங்கி பொய் கணக்குகளை காட்டியதன் விளைவு --இன்று அத்தனை கணக்குகளையும் முடித்துக்கொள்ள வாடிக்கையாளர்களும் நமது ஊழியர்க்ளும் படையெடுக்க தொடங்கிவிட்டார்கள் .தொடங்கிய கணக்கை முடிக்கவேண்டுமா ? இல்லை எல்லாவற்றையும் ஏப்ரல் வரை தள்ளிவைக்க வேண்டுமா ?
அவரவர் உபகோட்டங்கள் முதல்நிலைக்கு வரவேண்டும் என ASP கள் விரும்புவது நியாயம் தான் .அதற்காக ஒரு அளவுகோல் இருக்கிறது .என்னதான் விளக்கெண்ணையை தடவிக்கொண்டு மண்ணிலே புரண்டாலும் ஓட்டுற மண்ணுதான் ஒட்டும் .அதுபோலத்தான் இன்றுவரை நமதுகோட்டத்தில் பிடிக்கப்பட்ட கணக்குகள் எல்லாமே எங்கள் ஊழியர்களின் உழைப்பிலும் உணர்விலும் சேர்த்த கணக்குகள் என்பதனை நாங்கள் பெருமையோடு தெரிவித்துக்கொள்கிறோம் .
ஆனாலும் இன்று வருகிற அச்சுறுத்தல்கள் ,எச்சரிக்கைகள் ..எல்லாமே தமிழகமெங்கும் பரவுகிற ஒருவித நோய் என்றாலும் அதற்கான சிகிச்சையை நமது சங்கங்கள் எடுக்க தொடங்கிவிட்டன .
இதனை கருத்தில் கொண்டு அனைத்து தோழர்களும் நாளை 10.03.2020 நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
ஆர்ப்பாட்டம்
நாள் 10.03.2020 மாலை 6.00 மணி
இடம் .பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்
தோழமையுடன் கூட்டு போராட்டக் குழு நெல்லை
0 comments:
Post a Comment