...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 13, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          காலிப்பணியிடங்களை நிரப்பு ! நிரப்பு ! என்ற  கூக்குரல்  டெல்லிக்கு கேட்டதோ இல்லையோ தமிழக அஞ்சல் தலைவருக்கு கேட்டுள்ளது .இத்தனை பதவிகள் PA/SA  பதவிகள் SURPLUS என அறிவிக்கவைத்தது தொழிற்சங்கங்களின் பங்கு என்பதை யாரும் மறுத்திட முடியாது .கோட்டங்களில்  VACANCY இல்லையென்றால் அவ்வளவு  தான் என்ற பழைய பஞ்சாங்கத்தை கிழித்து மாநிலம் முழுவதும் உள்ள VACANCY  களில் தேர்ச்சியாளர்களை கொண்டு நிரப்பிட நாம் வைத்த கோரிக்கைகள் இன்று ஏற்கப்பட்டுள்ளது .விளைவு மீண்டும் 254 GDS ஊழியர்கள் SA ஆக பதவி உயர்வு பெற்றுள்ள வரலாற்று நிகழ்வு நடந்துள்ளது .அதே போல் நமது கோட்டத்தில் தபால்காரர் VACANCY கண்முன்னே தெரிந்தாலும் தேர்வு அறிவிக்கப்பட்ட போது காட்டிய VACANCY களை அகற்றி இன்று தபால்காரராக 27  தோழர்கள்   பதவி உயர்வு பெற்றுள்ளனர் .கடந்த மாதத்தில் தான் நமது கோட்டத்தில் 25 தோழர்கள் எழுத்தராகவும் தேர்ச்சிபெற்ற செய்தியை நாம்  பார்த்தோம் ..VACANCY களை கண்டறிந்து இன்று எண்ணற்ற ஊழியர்களின் வாழ்வில் ஒளியேற்றிய NFPE  பேரியக்கத்திற்கு நன்றி சொல்லுவோம் .அதுமட்டுமல்ல SURPLUS ஆக தேர்ச்சிபெற்றவர்களில் யாரெல்லாம் தபால்காரராக தேர்ச்சிபெற்றிருந்தாலும் அவர்களின் விருப்பதிக்கேற்ப OPTION கொடுத்து SA ஆகலாம் என்றும் அப்படி காலியாகும் தபால்காரர் இடங்களுக்கு இப்பொழுது தேர்ச்சிபெற்ற GDS ஊழியர்களை கொண்டு நிரப்பிடவும் அதற்கான WAITING LIST  தயார் நிலையில்  இருக்கிறது என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .நமது கோட்டத்தில் ஐந்து தோழர்கள் SA ஆகவும் தபால்காரராகவும் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .முன்பெல்லாம் Dep. Quota vacancies - அந்தந்த கோட்டத்தில்  நிரப்பியது போக மீதம் இருந்தால் open Recruitment சென்று விடும். அது எப்போதாவது நிரப்புவார்கள். ஆனால் நமது சங்க நடவடிக்கைகளால்அது மாற்றப்பட்டு முழுவதும் நமது GDS தோழர்களுக்கு வாங்கியது மிகப் பெரிய சாதனை.
                   அதேபோல் பல தபால்காரர் தோழர்களுக்கு ஒருவருத்தம் .அதாவது 2019 VACANCY யில் தபால்காரர்களுக்கு எழுத்தராக வாய்ப்பை சங்கங்கள் பெற்றுத்தரவில்லை என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கினார்கள் .அவர்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் அதற்காகவும் பணிகள் மாநிலநிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றுக்கொக்கிடிருக்கின்றன .புதிய CPMG அவர்களின் கவனத்திற்கு இந்த கோரிக்கை கொண்டுசெல்லப்பட்டுள்ளது .வாய்ப்புகள் இருந்தால் சட்டத்திற்கு உட்பட்டு 2019 LGO VANACY யில் சில தோழர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வழிஇருக்கிறது ..
                                                    சும்மா கிடைப்பதில்லை 
                                                    சுதந்திரமும் -சலுகைகளும் .....
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 
                                         

2 comments:

  1. Wat about PA unanticipated vacancy 2019 Regards hari 7373109950

    ReplyDelete