...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, March 23, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                              உலகமே மரண பீதியில் உழன்றுகொண்டிருக்கிறது .தனது நாட்டையும் தனது மக்களையும் இந்த பேரழிவில் இருந்து பாதுகாத்திட நமது மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நோய் தொற்றை முற்றிலும் ஒழித்திட நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன .மக்களின் சுய ஊரடங்கு பல்வேறு மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது .அத்தியாவசிய சேவையயை தவிர மற்ற துறைகளில் எல்லாம் 31.03.2020 வரை ஊழியர்கள் வீட்டிலே .விடுப்புடனோ அல்லது வீட்டிலே பணி என்கின்ற நிலையில் இருந்திட அனுமதிக்கப்பட்டுள்ளது . .
மக்களைச் சந்திப்பதையே அலுவலாய்க் கொண்ட தபால்காரர்கள்
அன்றாடம் மக்கள் வந்து போகும் கவுண்டரில் பணிபுரியும் ஊழியர்கள் 
மெயில் பைகளை சுமந்து செல்லும் MTS 
ஊழியர்கள் 
மருத்துவ வசதி அற்ற கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் 
இவற்றையும் தாண்டி இலக்கை எட்டுவதற்காக  சேமிப்பு வங்கி கணக்குகளுக்காக
வீதிக்கு வரும் பிற  ஊழியர்கள் என நோய்த்தொற்று  அபாயத்தில் அஞ்சல் ஊழியர்களும் பணியாற்றுகின்றனர்.
                          நாட்டின் மிக அத்தியாவசிய அரசு சேவையான ரயில்வே தனது சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்ட சூழலில் நமது அஞ்சல்துறை அதிகாரிகள் மட்டும் மேளா என்றும்,.வணிக விரிவாக்கம் என்றும் , ஆதார், பாஸ்போர்ட் சேவை என்றும் பொதுமக்கள் பெருமளவு  கூடும் நிலைகளை உருவாக்கி தேசத்தின் பாதுகாப்புக்கும் , ஊழியர்பாதுகாப்புக்கும் எதிரான செயல்களைச் செய்துவருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
                        நாடுமுழுவதும் 75 மாவட்டங்கள் தமிழகத்தில் 3 மாவட்டங்கள் தனிமை படுத்தப்பட்டுவிட்டன .மின்வாரியமும் பழைய அடிப்படையிலே இந்த மாத கட்டணம் செலுத்தலாம் என அறிவித்துள்ளது .
இதற்கிடையில் அஞ்சல் வாரியமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவித்தபோதிலும் கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் இன்னும் மேளா மெகா மேளா கனவில் மிதக்கிறார்கள் .வேலையை முடித்துவிட்டு விரைந்து வீட்டிற்கு செல்லமுடியாமல் நெட்ஒர்க் பிரச்சினை அனைத்து C&Bஅலுவலக SPMS ஊழியர்கள் திண்டாடுகிறார்கள் .
                           இந்தப்பின்னணியில் அஞ்சல்துறையிலும் வருகிற 31.03.2020 வரை பணிகளை நிறுத்திவிடவும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு விடுமுறையை அறிவிக்கவும் நமது NFPE இயக்க தலைவர்கள் இன்றுகாலை 11 மணிக்கு அஞ்சல் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் .
                              ஆகவே இந்த சூழ்நிலையில் நாம் எடுக்கவேண்டிய முடிவுகள் குறித்து மாநில /மத்திய சங்க வழிகாட்டுதலுக்கு காத்திருக்கிறோம் .பேருந்து /ரயில் போக்குவரத்து பாதிப்பால் பணிக்கு வர இயலாத ஊழியர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு தகவல்களை தெரிவிக்கவும் .
    நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 



0 comments:

Post a Comment