...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 11, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                   டார்கெட் நெருக்கடி /உபகோட்ட அதிகாரிகளின் அடக்குமுறைகள் மற்றும் அனைத்து தபால்காரர் பதவிகளையும் நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலஅளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பாளையில் 10.03.2020 அன்று அஞ்சல் நான்கின் கோட்ட தலைவர் தோழர் சீனிவாசசொக்கலிங்கம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .அஞ்சல் நான்கின் முன்னனி தோழர்கள் புஷ்பா கரன் ,பாலகுருசாமி ,மோகன் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பாக தோழர் ச ண்முகசுந்தரராஜா அஞ்சல்மூன்றின் சார்பாக கோட்ட தலைவர் அழகுமுத்து .மாநில சுப்ரிம் கவுன்சிலர் வண்ணமுத்து அஞ்சல் நான்கின் மாநில உதவி தலைவர் SK .பாட்சா ஆகியோர்களும் இறுதியாக அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் ஜேக்கப் ராஜ் அவர்களின் விளக்கவுரை என மிக எழுச்சியோடு நடைபெற்றது அஞ்சல்நான்கின் பொருளாளர் இசக்கி நன்றிகூறினார் ..ஆர்ப்பாட்டத்தில் GDS ஊழியர்க்ளுக்கு OFFICIATING பார்ப்பதில் கொடுக்கப்படும் நெருக்கடிகள் பல்லாண்டுகளாக அஞ்சலகத்தையே நம்பி கிடக்கும் OUTSIDER களுக்கு பணி மறுப்பு போன்ற அதிகாரவர்க்கத்தின் இரக்கமற்ற செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது மேலும் இதுகுறித்து மேல்மட்டங்களுக்கு புகார் கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது .இந்த நிதியாண்டின் மீதமிருக்கும் நாட்களில் ஊழியர்க்ளுக்கு கொடுக்கப்படும் மனஉளைச்சலை கலைந்திட கோட்ட சங்கம் துணைநிற்கும் .பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 









0 comments:

Post a Comment