...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 26, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                    இல்லத்தில் இருப்போம். நமது நிலையில் மாற்றம் இல்லை.
                      இன்று முதல் அலுவலகம் செல்வது குறித்து நேற்று நமது கோட்ட சங்கம் அறிவித்த முடிவான பணிக்கு செல்லவேண்டாம் என்பதில் உறுதியாய் இருங்கள் .இன்று அகிலஇந்திய அளவில் NFPE -FNPO சம்மேளன தலைவர்கள் நமது இலாகா முதல்வரை சந்திக்கிறார்கள் .முடிவு ஊழியர் தரப்பிற்கு சாதகமாக வரவில்லை என்றால் வேலைநிறுத்தம் என்கிற அளவிற்கு முடிவுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்கள் .தமிழகத்திலும் NFPE P 3-FNPO -P3 மாநிலசெயலர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தை பார்த்திருப்பீர்கள் ...IP சொல்கிறார் ASP சொல்கிறார் என்றால் அது அவர்களுக்கு நிர்வாகம் கொடுத்துள்ள கட்டளை -எப்படியும் அலுவலகத்தை திறந்துவிட்டோம் என அவர்கள் மேலதிகாரிகளுக்கு சொல்வதற்காக கடைபிடிக்கும் ஒருநடைமுறை -இது நமக்கு ஒன்றும் புதிதல்ல =காலவரையற்ற வேலைநிறுத்த நாட்களில் நிர்வாகம் கொடுக்காத அழைப்பா ? நெருக்கடியா ? 
                     விடுப்பு விண்ணப்பித்தவர்கள் /இனிதான் விடுப்பு விண்ணப்பிக்கிறவர்கள் என அனைவரும் தங்கள் இல்லத்திலே தங்கியிருங்கள் ..கோட்ட  அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தால் தயங்காமல் பதில் கூறுங்கள் .
நேற்றைய நமது முடிவில் மா ற்றம் இல்லை .
மேற்கொண்டு தங்களுக்கு ஏதேனும் பிரச்சினை /சந்தேகங்கள் /நிர்வாக நெருக்கடிகள் இருந்தால் தயங்காமல் எந்தநேரமும் கோட்ட சங்கத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் .கோட்ட அலுவலகத்தை போல நமது சங்கத்திற்கும் 24 மணிநேரம் இயங்கும் கண்ட்ரோல் ரூம் செயல்படுகிறது என்பதனை  நினைவில் கொள்ளுங்கள் .உங்களுக்குரிய வழிகாட்டுதல்கள் நிச்சயம் கோட்ட சங்கத்தால் வழங்கப்படும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment