...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, March 30, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     பணிக்கு செல்லலாமா ? எப்படி செல்வது ? நமது சங்கங்கள் இதில் என்னநிலை எடுக்கிறது என்று நேற்று நள்ளிரவு வரை நமது தோழர்கள் வாட்ஸாப்ப் (NELLAI NFPE ) யில் ஒரு ஆரோக்கியமான காலத்திற்கு தேவையான விவாதங்களை பகிர்ந்துவந்தனர் .அனைவருக்கும் கோட்டசங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்திக்கொள்கிறோம் .
1ஏற்கனவே சொன்னதுபோல் இது வேலைநிறுத்த அறிவிப்பல்ல --பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டோ அல்லது அரசின் நிர்பந்தத்திற்கு உடன்பட்டோ பணிக்கு செல்லுங்கள் என அறிவிப்பதற்கு இது வேலைநிறுத்தம் அல்ல 
2.உலகளவில் மாபெரும் அழிவை சந்திக்கும் ஆபத்தில் இருந்து நமது நாடு காப்பாற்றப்படவேண்டும் என்று மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கு மற்றும் தனித்திருப்பதை அறிவித்துள்ளது .
4.நேற்றுவரை நமது ஊழியர்கள் வேலைக்கு செல்லவேண்டும் என்ற நிலை எடுக்கவில்லை .அஞ்சல் வாரியம் அறிவித்த அஞ்சல் சேவையும் அத்தியாவசிய சேவை பட்டியலில் இருக்கிறது என்றும் அதனடிப்படையில் பல மண்டலங்களில் PMG அலுவலகம் கண்டிப்பாக 30.03.2020 முதல் பணிக்கு வரவேண்டும் என உத்தரவை பிறப்பித்ததில் இருந்து ஊழியர்களுக்கு வரும் சந்தேகங்களை விளக்கவேண்டியது நமது கோட்டசங்கத்தின் கடைமை என்பதற்க்காக இந்த விளக்கத்தை கோட்டசங்கத்தின் சார்பாக தெரிவிக்கிறேன் .
5.அஞ்சல் துறை ESSENTIAL சர்விஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் வேலைக்கு செல்லாவிட்டால் என்னாகும் ஆகவே நான் வேலைக்கு செல்கிறேன் என்று சிலர் முடிவெடுக்கிறார்கள் ---அதற்கு முதலில் சின்ன விளக்கம் -எப்பொழுது நாட்டில் அத்தியாவசியசேவையை நிலைநாட்டவேண்டிய அவசியம் வருகிறதோ அப்பொழுது மத்தியஅரசு அவசர சட்டமான ESMA (ESSENTIAL SERVICE MAINTENANCE ACT  ) என்ற  சட்டத்தை பிரயோகித்தபடுத்தும் .ஆனால் இங்கு மத்திய அரசுதான் நம்மை தனிமையில் இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .ஆகவே ESSENTIAL சர்விஸ் என்பதற்காக மட்டுமே பணிக்கு செல்லலாமா என்பதை நீங்களே முடிவெடுத்துக்கொள்ளலாம் 
6.ஓரிருநாட்களுக்கு முன்பு நமது கோட்டநிர்வகம் வேண்டுகோள்விடுத்த மாதிரி இந்தமாத சம்பளம் பென்ஷன் கிடைக்கவேண்டும் ஆண்டு இறுதியென்பதால் வந்துள்ள TA பில் மருத்துவ பில் PLI /RPLI ஊக்கத்தொகை வழங்குதல் இவைகளுக்கு ஊழியர்கள் தேவை என்றார்கள் நாமும் சம்பந்தப்பட்ட பிரிவு ஊழியர்களை தொடர்புகொண்டு எந்த பின்னடைவும் இல்லாமல் பார்த்துக்கொள்ள உதவுகிறோம் என்று சொல்லியுள்ளோம் .
7.இதில் நமது தொழிற்சங்கத்தின் நிலை என்னவென்றால் அரசாங்கத்தின் அறிவிப்பை நீங்கள் பார்த்திருப்பீர்கள் =இந்தியா மூன்றாவது கட்டத்தில் நுழைகிறது -சமூக பரவலை தடுக்கவேண்டும் இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும் என்கிறார்கள் .10000படுக்கைகள் தயார் ரயில் பெட்டி பள்ளி கல்லூரி இவைகளெல்லாம் மருத்துவமனையாக மாற்றப்படுவது என்பதெல்லாம் எதற்காக ? 
8.இலாகா முதல்வர் உத்தரவு -ஹெல்த் அமைச்சக வழிகாட்டுதல்படி 
பணிக்கு வரும் அஞ்சல் ஊழியர்களுக்கு நமது நிர்வாகம் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்துள்ளதா ?
9.பணிசெய்யும் இடத்திலும் தூய்மை பராமரிக்கப்படவேண்டும் நமது இருக்கையை சுற்றிலும் சுத்தம் பேணவேண்டும் என்பதற்காக நமது நிர்வாகம் செய்தது என்ன ?
10.எல்லா அலுவலகமும் வேண்டாம் பெரிய அலுவலகங்களை திறந்தால் கூட வாடிக்கையாளர்க்கும் கவுண்டர் ஊழியருக்கும் தேவையான இடைவெளியை அமைக்கப்பட்டுள்ளதா ?
11.வேலைக்கு செல்லும் ஊழியர்கள் ATTENDANCE பதிவில் கையெழுத்துபோடும்போதே அவர்களுக்கான தரமான மாஸ்க் .கையுறை கிருமிநாசினிகளை நிர்வாகம் தயார்நிலையில் வைத்துள்ளதா ?
12. ஊரடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்படும் நிலையில் ஊழியர்களை பணிக்கு அழைத்துவர வாகன வசதிகள் அல்லது வாகன அனுமதி -அடையாளஅட்டை  ஏதாவது உண்டா ?
             இதைத்தான் தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கேட்கிறது .ஆகவே .சமூக தொற்று நம்மால் பரவிட நாமும் காரணமாக இருந்துவிடக்கூடாது .பணிக்கு செல்லவேண்டும் என்று விரும்புகிறவர்களை பாதுகாக்கவும் தொழிற்சங்கம் பல்வேறுவகையில் முயலுகிறது =விடுப்பில் இருக்கிறவர்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்களை தொழிற்சங்கம் கொடுக்கிறது .
     நாட்டில் நிலவும் சூழ்நிலைக்கேற்ப தங்கள் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க உங்கள் அனைவருக்கும் உரிமை உண்டு .எந்நேரமும் உங்களுக்கான விளக்கங்களை /வழிகாட்டுதலை கொடுக்க நாங்கள் தயார் !
கொரனவை விரட்டுவோம் ! சமூகத்தை பாதுகாப்போம் !
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment