...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, March 27, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                      கொரானா தொற்று தடுப்பில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தனித்திருத்தல் ' சமூக விலகல் ஒன்றே தீர்வு 
                   பிரதமர் SOCIAL DISTANCING அவசியம் என்கிறார் நமது துறையோ SOCIAL RESPONSIBILITIES என்று கூறுகிறது .
                  அஞ்சல் துரையின் 25.03.2020 உத்தரவிற்கு 26.03.2020 உத்தரவிற்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதுமில்லை .நமது துறையின்  கடமையுணர்விற்கு நாம் எதிரானவர்கள் அல்ல .ஆனாலும் வீட்டைவிட்டு வெளியே வந்து இந்த கொரானா தொற்று பரவுவதற்க்கு நாமும் காரணமாக இருந்துவிடக்கூடாது என்ற நமது மற்றும் நமது சமூக நலன் சார்ந்த விஷயங்களை அலட்சியம் செய்திடவும் முடியாது .ஏற்கனவே 31.03.2020 வரை விடுப்பில் இருப்பவர்கள் அச்சப்படத்தேவையில்லை என்று நமது சங்கங்கள் உறுதியிட்டு தெரிவித்திருக்கின்றன .ஆனாலும் அஞ்சல் வாரிய உத்தரவை அந்தந்த மாநிலங்களில் /மண்டலங்களில் /கோட்டங்களில் /உப கோட்டங்களில் எப்படியாவது அமுல்படுத்திடவேண்டும் என்கிற ரீதியில் அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள் ..நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் பேசும்போதும் மினிமம் ஊழியர்களை வைத்து மினிமம் அலுவலகங்களை இயக்கப்போகிறீர்களா ?இல்லை தலைமைஅஞ்சலகங்களில் மட்டும் இயக்கப்போகிறீர்களா ?என கேட்டோம் .கோட்ட நிர்வாகமும் ஊழியர்களின் உயிர் காக்க உத்தரவாதம் கொடுக்க முடியாது .நமது அரசும் நமது நாட்டின் மக்கள் தொகையை மனதில் கொண்டே மற்றநாடுகளில் பரவிய வேகத்தில் நமது நாட்டில் பரவினால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்துதான் தனித்திருங்கள் என மீண்டும் மீண்டும் வற்புறுத்துகிறது .இது எதோ ஒருசங்கம் நடத்துகிற வேலைநிறுத்தம் மாதிரி நமது தோழர்கள் வேலைக்கு செல்லுங்கள் நமக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக்கொள்வதெல்லாம் சரியான வழிகாட்டுதல்கள் இல்லை .
ஆகவே விடுப்பு விண்ணப்பித்தவர்கள் அச்சமடைய தேவையில்லை .யாரையும் கட்டாயபடுத்தி வேலைக்கு அழைக்கவும் நெல்லைக்கோட்ட நிர்வாகமும் விரும்ப வில்லை .
               இந்த வழக்கில் உங்களுக்கு நீங்களே நீதிபதி --நாட்டின் இளவரசர் முதல் ஏழைக்குடியானவன் வரை அரசன் முதல் ஆண்டி வரை நோய் தொற்று ஏற்பட்டுவிட்டால் ஏற்படும் நிலை குறித்து பார்த்திருப்பீர்கள் !படித்திருப்பீர்கள் !
ஊரடங்கு 14.04.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது -ஆபத்தினை உணராமல் அரசு இந்த அறிவிப்பை அறிவித்திருக்காது .
தனித்திருப்போம் ! துணிந்திருப்போம்! தேசம் காக்க நாமும் வீட்டிலிருப்போம் !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


0 comments:

Post a Comment